search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆஞ்சேநயர்"

    • ஆஞ்சநேயர் சுவாமி கடுமையான பிரம்மச்சாரிய விரதத்தை அனுஷ்டிப்பவர்.
    • அவரை வழிபடும் பக்தர்களுக்கு ராமபிரானின் அருளும் கிடைத்த பாக்கியம் செய்தவர்களாவர்.

    ஸ்ரீ ராமபிரானுக்காகவும் சீதா பிராட்டிக்காகவும் வாழ்ந்து (ராமசேவையை தன்னுடைய உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவர் ஆஞ்சநேயர்)

    ஸ்ரீ ராமபிராமனை தன் உள்ளத்தில் குடி வைத்து தனது உடல் ஆவி அனைத்தையும் அர்ப்பணித்தவர் ஆஞ்சநேயர் என்பதால்

    அவரை வழிபடும் பக்தர்களுக்கு ராமபிரானின் அருளும் கிடைத்த பாக்கியம் செய்தவர்களாவர்.

    (அதனால் தான் ராமபிரானுக்கு எங்கெங்கே ஆலயம் உள்ளதோ அங்கெல்லாம் ஆஞ்சநேயர் சுவாமிக்கும் தனியாக சன்னதி உண்டு.)

    ஆஞ்சநேயர் சுவாமி கடுமையான பிரம்மச்சாரிய விரதத்தை அனுஷ்டிப்பவர்.

    ஆதலால் அவரை வழிபடும் பக்தர்களும் மிகுந்த ஆச்சாரத்தோடும், கட்டுப்பாட்டுடனும் இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

    ஆஞ்சநேயரை பல்வேறு பெயர்களில் வழிபடுவார்கள்.

    அனுமான், வாயுபுத்திரன், ராமேஷ்சுடன், மகாலிஷ்டன், மாருதி, அர்ச்சுசைகன் என்பது பெயர்களாகும்.

    தமிழ்நாட்டில் அவரை அனுமான் என்பார்கள்.

    கன்னட நாட்டில் அவரை ஹனுமந்தையா என்பார்கள். ஆந்திர நாட்டில் ஆஞ்சநேயலு என்பார்கள்.

    மகாராஷ்டிரத்தில் மாருதி என்பார்கள். அந்தந்த நாட்டில் பெயர்கள் மாறினாலும் அவருடைய சக்திகள் அனைத்தும் ஒன்றே ஆகும்.

    (ஆஞ்சநேயர் மீது நமது மனம் முழுமையாக ஈடுபட்டு அவருடைய தீவிர பக்தராக மாறிவிட்டால் ஆஞ்சநேயரின் முழு பலமும் தங்களுக்கு வந்துவிட்டதை உணர்வீர்கள்)

    ×