என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்"
- 7 சுற்றுகள் முடிவில் மாஸ்டர்ஸ் பிரிவில் தமிழக வீரர் அரவிந்த சிதம்பரம் சாம்பியன் பட்டம் வென்றார்.
- அரவிந்த் சிதம்பரத்துக்கு பரிசுத் தொகையாக ரூ.15 லட்சமும், பிரணவுக்கு பரிசுத் தொகையாக ரூ.6 லட்சமும் வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2-வது சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடந்தது.
இதில், 7 சுற்றுகள் முடிவில் மாஸ்டர்ஸ் பிரிவில் தமிழக வீரர் அரவிந்த சிதம்பரம் சாம்பியன் பட்டம் வென்றார்.
இதேபோல், சேலஞ்சர்ஸ் பிரிவில் பிரணவ் மகுடம் சூடினார். அரவிந்த் சிதம்பரத்துக்கு பரிசுத் தொகையாக ரூ.15 லட்சமும், பிரணவுக்கு பரிசுத் தொகையாக ரூ.6 லட்சமும் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அரவிந்த் சிதம்பரத்திற்கும், சேலஞ்சர்ஸ் பிரிவில் மகுடம் சூடிய பிரணவ் ஆகியோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில், தனது வியூகப் புத்திசாலித்தனத்துடன், குறிப்பாக இறுதிச் சுற்றில், தீர்க்கமானதாக நிரூபித்த கிராண்ட் மாஸ்டர் அரவிந்த் சிதம்பரத்திற்கு அவரது குறிப்பிடத்தக்க பட்டம் வென்றதற்கு வாழ்த்துகள்.
கிராண்ட் மாஸ்டர் பிரணவ்-க்கு கைதட்டல், சேலஞ்சர்ஸ் பிரிவில் அவரது சிறப்பான செயல்திறன் எதிர்காலத்திற்கான மகத்தான நம்பிக்கையை காட்டுகிறது.
உலக செஸ் அரங்கில் சென்னையின் அந்தஸ்தை மேலும் உயர்த்தும் நிகழ்விற்காக தமிழக விளையாட்டுத் துறைக்கும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் பாராட்டுகள்
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
Congratulations to GM Aravindh Chithambaram on his remarkable title win at the @Chennai_GM, with his strategic brilliance, especially in the penultimate round, proving decisive. ?Applause as well for GM Pranav V, whose standout performance in the Challengers section shows… pic.twitter.com/8efzM6ttUc
— M.K.Stalin (@mkstalin) November 11, 2024
- சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் போட்டிகள் நடைபெறுகிறது.
- இந்தப் போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.70 லட்சம்.
சென்னை:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நவம்பர் 5 முதல் 11-ம் தேதி வரை நடக்கிறது. போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.70 லட்சம் ஆகும்.
இதில் மாஸ்டர்ஸ் பிரிவில் இந்தியாவின் அர்ஜூன் எரிகைசி, விதித் குஜராத்தி, தமிழ்நாட்டை சேர்ந்த அரவிந்த் சிதம்பரம், அமெரிக்காவின் லெவோன் ஆரோனின் உள்பட 8 வீரர்களும், சேலஞ்சர்ஸ் பிரிவில் தமிழகத்தின் கார்த்திகேயன் முரளி, பிரணவ், பிரனேஷ், ஆர்.வைஷாலி மற்றும் ஹரிகா உள்பட 8 இந்திய கிராண்ட்மாஸ்டர்களும் களம் காணுகிறார்கள்.
7 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டி (கிளாசிக்கல்) ரவுண்ட் ராபின் லீக் முறையில் நடைபெறும்.
உலக தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள அர்ஜூன் எரிகைசி தனது முதல் சுற்றில் விதித் குஜராத்தியுடன் மோதுகிறார். வைஷாலி, லியோன் மென்டோன்காவை சந்திக்கிறார்.
இந்தப் போட்டியை நேரடியாக காண குறிப்பிட்ட அளவிலான இருக்கைகள் பதிவு செய்யப்பட்ட செஸ் அகாடமி மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக பார்க்க ஒதுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பார்வையிட நாள் ஒன்றுக்கு ரூ.100 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு, அனுமதி டிக்கெட்டை 'புக் மை ஷோ இணையதளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று தொடங்கியது.
- சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்-2023 போட்டி, சென்னை லீலா பேலஸில் இன்று தொடங்கி வருகிற 21-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
- இந்தப் போட்டியில் 8 சர்வதேச மற்றும் இந்திய கிராண்ட் மாஸ்டர்கள் கலந்து கொள்கின்றனர்.
சென்னை:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்-2023 போட்டி, சென்னை லீலா பேலஸில் இன்று தொடங்கி வருகிற 21-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் 8 சர்வதேச மற்றும் இந்திய கிராண்ட் மாஸ்டர்கள் கலந்து கொண்டு 7 ரவுண்ட்- ராபின் சுற்றுகள் கிளாசிக் செஸ் வகையில் விளையாடுவார்கள். இப்போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை ரூ.50 இலட்சம் தமிழ்நாடு அரசால் வழங்கப்படவுள்ளது.
இந்தியாவின் தலைசிறந்த செஸ் கிராண்ட் மாஸ்டர்களான டி.குகேஷ் மற்றும் அர்ஜுன் எரிகைசி போன்ற வீரர்கள் இப்போட்டியில் கலந்து கொள்வதன் மூலம் கேண்டிடேட்ஸ் போட்டிக்கு தகுதிபெற வாய்ப்பாக அமையும். மேலும் சர்வதேச கிராண்ட் மாஸ்டர்கள் பர்ஹாம் மக்சூட்லூ, பி. ஹரிகிருஷ்ணா, லெவோன் அரோனியன், பாவெல் எல்ஜனோவ், அலெக்சாண்டர் ப்ரெட்கே, மற்றும் ஸ்ஜுகிரோவ் சனான் போன்ற வீரர்களும் பங்கேற்க உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்