search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கவுதம்"

    • படத்திற்காக ஆர்யா கடுமையாக உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களும் வெளியாகின.
    • கடைசி நாள் சூட்டிங்கில் இதை படக்குழு கேக் வெட்டி கொண்டாடும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது

    நடிகர்கள் ஆர்யா மற்றும் கவுதம் கார்த்திக் கூட்டணியில் பிரின்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் மிஸ்டர் X. விஷ்ணு விஷாலின் எப்.ஐ.ஆர் படத்தை இயக்கிய மனு ஆனந்த் இந்த படத்தை இயக்கி வருகிறார்.

    ஆக்ஷன் திரில்லர் பாணியில் உருவாகி வரும் இந்த படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிக்க முதல் கவுதம் கார்த்திக் வில்லனாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. சரத்குமார், மஞ்சு வாரியார் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். திபு நிபுணன் தாமஸ் இசையமைக்கும் இந்த படத்துக்கு தன்வீர் மிர் ஒளிப்பதிவு செய்கிறார்.

     

    இப்படத்தின் படப்பிடிப்பு உகாண்டா, செர்பியா உள்ளிட்ட நாடுகளில் நடந்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. படத்திற்காக ஆர்யா கடுமையாக உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களும் வெளியாகின. ஆர்யாவின் காட்சிகள் ஏற்கனவே படம்பிடிக்கப்பட்ட மீதமுள்ள காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன. இடையில் படத்தின் மோஷன் போஸ்டரும் வெளியாகியிருந்தது.

     

     

    இந்த நிலையில்தான் படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவதுமாக முடிவடைத்துள்ளது. கடைசி நாள் சூட்டிங்கில் இதை படக்குழு கேக் வெட்டி கொண்டாடும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. படத்தைக் குறித்த அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நேற்றைய போட்டியில் வென்றதன் மூலம் ஐபிஎல் கோப்பையை 3 வது முறையாக கொல்கத்தா அணி கைப்பற்றியது
    • பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஷாருக் கான் கேகேஆர் அணியின் இணை உரிமையாளராக உள்ளார்

    ஐபிஎல் தொடரில் நேற்று (மே 26) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் ஐதராபாத் - கொல்கத்தா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய ஐதராபாத் அணி தொடக்கம் முதலே மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் ஐதராபாத் அணி 18.3 ஓவரில் 113 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

    இதனையடுத்து பேட்டிங் இறங்கிய கொல்கத்தா அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 10.3 ஓவரில் 114 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் ஐபிஎல் கோப்பையை 3 வது முறையாக கொல்கத்தா அணி கைப்பற்றியது. தொடக்கம் முதலே கொல்கத்தாவின் வெற்றிகளுக்கு முக்கிய காரணமாக அணியின் பயிற்சியாளரான கவுதம் காம்பிர் விளங்குகிறார்.

    நேற்றைய போட்டியின் வெற்றிக்குப் பிறகு கேகேஆர் அணி வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டது. அந்த வகையில் பாலிவுட்டின் முன்னணி நடிகரும் கேகேஆர் அணியின் இணை உரிமையாளருமான ஷாருக் கான், மைதானத்துக்குள் வந்து அணியில் உள்ளவர்களைக் காட்டித் தழுவி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அப்போது கேகேஆர் வெற்றிக்கு முக்கிய காரணகர்த்தாவாக கவுதம் கம்பீரின் நெற்றியில் ஷாருக் முத்தமிட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    முன்னதாக கவுதம் காம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக தேர்வாக அதிகம் வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில், அவரை கேகேஆர் அணி பயிற்சியாளராகவே நீடிக்க வலியுறுத்தி அவருக்கு ஷாருக் கான் பிளாங்க் செக் கொடுத்தாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது. 

     

    • சந்தோஷ் பி. ஜெயக்குமார் புதிய படம் ஒன்றை இயக்கியுள்ளார்.
    • இப்படத்திற்கு அருண் மற்றும் கவுதம் என இருவர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.

    'ஹர ஹர மஹா தேவகி', 'இருட்டு அறையில் முரட்டு குத்து', 'கஜினிகாந்த்', 'இரண்டாம் குத்து', 'பொய்க்கால் குதிரை' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனரும், நடிகருமான சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கி, கதையின் நாயகர்களுள் ஒருவராக நடித்திருக்கும் புதிய திரைப்படம் 'தி பாய்ஸ்'.


    இந்தத் திரைப்படத்தில் அவருடன் 'ஜெயிலர்' ஹர்ஷத், 'கலக்கப்போவது யாரு' வினோத், ஷா ரா, யுவராஜ் உள்ளிட்ட நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். அஹமத் ஷெரிப் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அருண் மற்றும் கவுதம் என இருவர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். சாம் ஆர் டி எக்ஸ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள, கலை இயக்கத்தை முஜிபீர் ரஹ்மான் கவனித்திருக்கிறார்.

    தமிழ் திரையுலகில் முற்றிலும் வித்தியாசமான முயற்சியில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை நோவா பிலிம் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் செந்தில்குமார் மற்றும் டார்க் ரூம் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் சந்தோஷ் பி. ஜெயக்குமார் இணைந்து தயாரித்துள்ளனர்.


    'தி பாய்ஸ்' திரைப்படம் குறித்து சந்தோஷ் பி. ஜெயக்குமார் பேசியதாவது, ''ஐந்து இளம் பேச்சுலர்களின் வாழ்வியலை சித்தரிக்கும் வகையில் 'தி பாய்ஸ்' படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. ஐவரும் தங்களது இளமைக் காலத்தில் தவறான பழக்கங்களுக்கு ஆளாகினால் அவர்களின் எதிர்காலமும், வாழ்வும் எப்படி இருக்கும்? என்பதனை இதுவரை சொல்லப்படாத வகையில் கல்ட் சினிமாவாக இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்தத் திரைப்படத்தில் கதாநாயகி என்று யாரும் இல்லை. மாணவர்களாக நடித்திருக்கும் நடிகர்களும் வளர்ந்து வரும் நட்சத்திரங்கள் தான்'' என்றார்.


    தி பாய்ஸ் போஸ்டர்

    வித்தியாசமான பாணியில் தயாராகி இருக்கும் 'தி பாய்ஸ்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்படம் கல்ட் சினிமா என்பது இதன் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கில் தெரிய வருகிறது. இதனால் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்து வருகிறது.

    ×