search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி"

    • மெக்சிகன் ரைஸ் இனிமேல் வீட்டிலேயே ஈஸியா பண்ணலாம்.
    • குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.

    மெக்சிகன் ரைஸ் இனிமேல் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே ஈஸியா பண்ணலாம். வாங்க எப்படி பண்றதுனு பாப்போம்.

    தேவையான பொருட்கள்:

    பாசுமதி ரைஸ்- 500 கிராம்

    வெண்ணெய்- 3 ஸ்பூன்

    குடைமிளகாய்- 2

    வெங்காயத்தாள்- ஒரு கப்

    இஞ்சி பூண்டு விழுது- ஒரு ஸ்பூன்

    சீரகம்- ஒரு தேக்கரண்டி

    தக்காளி பேஸ்ட் - ஒரு கப்

    மிளகாய் தூள்- ஒரு தேக்கரண்டி

    உப்பு- தேவையான அளவு

    எண்ணெய்- தேவையான அளவு

    செய்முறை

    பாசுமதி அரிசியில் சிறிது வெண்ணை கலந்து தண்ணீரில் ஊறவைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் வெங்காயம் மற்றும் குடைமிளகாவை நீல வாக்கில் நறுக்கி எடுத்து கொள்ள வேண்டும். அதன்பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் சீரகம், வெங்காயம் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.

    பின்பு வெங்காயத்தாளில் உள்ள வெங்காயம் மற்றும் குடைமிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். அதன் பிறகு இஞ்சி பூண்டு விழுது, உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து வதக்கி அதில் தக்காளி பேஸ்டை போட்டு நன்கு வதக்க வேண்டும். எல்லாம் நன்கு வதங்கியதும் ஊறவைத்த பாசுமதி அரிசியை சேர்த்து வேக வைக்க வேண்டும். சாதம் வெந்தவுடன் வெங்காயத்தாள் தூவி இறக்கினால் மெக்சிகன் ரைஸ் தயார்.




     


    • காலிஃப்ளவரில் சல்போரபேன் எனப்படும் வேதிப்பொருள் அதிகம்.
    • காலிஃப்ளவரை புதினாவுடன் சேர்த்து வெரைட்டி ரைஸ்

    காலிஃப்ளவர் புற்றுநோயை குறைப்பதிலும், அப்புற்று நோய் ஏற்படாமல் தடுப்பதிலும் சிறப்பாக செயல்படுவதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காலிஃப்ளவரில் சல்போரபேன் எனப்படும் வேதிப்பொருள் அதிகம் உள்ளது. இது புற்று நோய்களின் செல்களின் அடிப்படை வளர்ச்சியை அழிக்கிறது. இத்தகைய காலிஃப்ளவரை புதினாவுடன் சேர்த்து வெரைட்டி ரைஸ் செய்து கொடுத்து உங்கள் குடும்பத்தினரின் ஆரோக்கியத்தை உயர்த்துங்கள்.

    தேவையான பொருட்கள்

    நறுக்கிய காலிஃப்ளவர் - ஒரு கப்

    சாதம் – ஒரு கப்

    பெரிய வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)

    பச்சை மிளகாய் – தேவையான அளவு

    இஞ்சி, பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்

    புதினா – ஒரு கைப்பிடி அளவு

    எண்ணெய், நெய் – தலா 2 டீஸ்பூன்

    உப்பு – தேவையான அளவு.

    செய்முறை:

    காலிஃப்ளவரை உப்பு கலந்த வெந்நீரில் போட்டு எடுக்கவும். புதினாவுடன் பச்சை மிளகாய் சேர்த்துத் தண்ணீர் தெளித்து விழுதாக அரைத்தெடுக்க வேண்டும்.

    வாணலியில் எண்ணெய், நெய் ஊற்றி வெங்காயம், இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அதனுடன் அரைத்த புதினா விழுது, உப்பு சேர்த்து நன்கு சுருள வதக்க வேண்டும். பின்னர் காலிஃப்ளவரைச் சேர்த்து வேகவிட்டு இறக்கவும்.

    இதனுடன் வடித்த சாதம் சேர்த்து நன்கு புரட்டி எடுத்தால், காலிஃப்ளவர் – புதினா ரைஸ் ரெடி. சுவையும் அருமையாக இருக்கும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகம் அளிக்கும். நீங்களும் உங்களது வீடுகளில் செய்துபாருங்கள்.

    • வேளாங்கண்ணி பகுதிகளில் மிகவும் பிரபலமான உணவாகும்.
    • முட்டை வறுவல் செய்து சாப்பிட்டால் மிகவும் நன்றாக இருக்கும்.

    ஹை பிரண்ட்ஸ் வணக்கம்.. இன்று நாம பார்க்க இருப்பது கட்டு சோறு செய்வது எப்படி என்று தான் பார்க்க போகிறோம். இந்த கட்டு சோறு நாகூர், காரைக்கால், வேளாங்கண்ணி பகுதிகளில் மிகவும் பிரபலமான உணவாகும். இப்பொழுது உள்ள குளிருக்கு நாவிற்கு இதமாக இந்த கட்டு சோறு மற்றும் அதற்கு ஏற்ற முட்டை வறுவல் செய்து சாப்பிட்டால் மிகவும் நன்றாக இருக்கும். மேலும் இதனை வீட்டில் இருக்கும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பார்கள். சரி வாங்க இந்த கட்டு சோறு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    எண்ணெய் – 1½ டேபிள் ஸ்பூன்

    அரிசி – ஒரு கப்

    கடுகு – ஒரு டீஸ்பூன்

    கடலை பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன்

    கருவேப்பிலை – இரண்டு கொத்து

    காய்ந்த மிளகாய் – 4

    பூண்டு – 10 பல்

    மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்

    தனி மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

    பொடித்த சீரகம் – அரை டீஸ்பூன்

    பொடித்த மிளகு – அரை டீஸ்பூன்

    உப்பு – தேவையான அளவு

    தேங்காய் பால் – ஒரு கப்

    புளிக்கரைத்த நீர் – கால் கப்

    தண்ணீர் – 1¾ கப்

    செய்முறை

    அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்த பிறகு ஒரு டீஸ்பூன் கடுகு, ஒரு டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு செய்து பொரியவிடவும். கடுகு, கடலை பருப்பு புரிந்துக்கொண்டு இருக்கும் போதே அதனுடன் காய்ந்த மிளகாயை சிவக்க வதக்கவும். கடலை பருப்பு ஓரளவு சிவந்து வந்த பிறகு ஒரு பெரிய வெங்காயத்தை பொடிதாக மற்றும் நீளமாக நறுக்கியதை அவற்றில் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் வதங்கிக்கொண்டு இருக்கும் போதே அதனுடன் 10 பல் பூண்டு சேர்த்து வதக்க வேண்டும். பிறகு அதனுடன் கொஞ்சம் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். வெங்காயம் மற்றும் பூண்டு இரண்டும் வதங்கி வந்ததும் மஞ்சள் தூள், தனி மிளகாய் தூள், பொடித்த சீரகம் மற்றும் மிளகு பொடி சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து மசாலாவை 2 நிமிடம் வதக்க வேண்டும்.

    பிறகு அரிசி வேகவைப்பதற்கு தண்ணீர் ஊற்ற வேண்டும், ஒரு கப் அரிசிக்கு ஒரு கப் தேங்காய் பால் மற்றும் கால் கப் அளவிற்கு கரைத்த புளித்தண்ணீருடன் தண்ணீர் சேர்த்து குக்கரில் ஊற்றவும். தண்ணீர் நன்கு கொதி வைத்ததும் ஏற்கனவே ஊறவைத்துள்ள அரிசியை வடிகட்டி அரிசியை சேர்க்கவும்.

    அரிசியை சேர்த்த பிறகு தேவையான அளவு உப்பு செய்து நன்றாக ஒரு முறை கிளறிவிட்டதும் குக்கரை மூடி ஐந்து விசில் விட்டு வேகவைக்கவும். ஐந்து விசில் வந்தபிறகு அடுப்பை அணைத்து குக்கரில் உள்ள பிரஷர் அடங்கும் வரை காத்திருங்கள். குக்கரில் பிரஷர் அடைங்கிய பிறகு திறந்து பார்க்கவும். சாதம் நன்றாக வெந்திருக்கும் நல்ல வாசனையாக கட்டு சோறு தயாராகிருக்கும்.

    ×