search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அலங்கார ஊா்திகள்"

    • அலங்கார ஊா்திகளின் மாதிரிகள் தொடா்பான முன்மொழிவை சம்பந்தப்பட்ட அரசுகள் சமா்ப்பிக்கும்.
    • மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்கள் அடுத்த சுற்றுக்கு அழைக்கப்படாது.

    புதுடெல்லி:

    குடியரசு தினத்தை முன்னிட்டு, டெல்லி கடமைப் பாதையில் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த அலங்கார ஊா்திகளின் அணிவகுப்பு நடைபெறுவது வழக்கம். இதில் டெல்லி அரசு சாா்பில் சுகாதாரம் மற்றும் கல்வித்துறை மாதிரியை அடிப்படையாகக் கொண்டு, அலங்கார ஊா்தி வடிவமைக்கப்பட்டு அதன் மாதிரி வடிவம் மத்திய அரசின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதை மத்திய அரசு நிராகரித்துவிட்டது. இது அரசியல் அரங்கில் பெரும் சல சலப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் உள்நோக்கில் ஆம் ஆத்மி அரசின் அலங்கார ஊா்தியை மத்திய அரசு நிராகரித்ததாக அக்கட்சி குற்றம்சாட்டியது.

    இதேபோல குடியரசு தின விழா அணிவகுப்பில் பஞ்சாப் அரசின் அலங்கார ஊா்தியும் நிராகரிக்கப்பட்டதற்கு அந்த மாநில முதல்வா் பகவந்த் சிங் மான் கண்டனம் தெரிவித்தாா். அவா் கூறுகையில், 'தேசிய கீதத்திலிருந்து பஞ்சாப் என்ற வாா்த்தையை பா.ஜ.க. வினா் நீக்க முயற்சிக்கின்றனா். அதற்கான முதல் படிதான் இந்த முடிவு' என்றாா்.

    குடியரசு தின அலங்கார அணிவகுப்பில் இந்த ஆண்டு தமிழ்நாடு சாா்பில் அலங்கார ஊா்தி இடம் பெறுமா என்பதை டெல்லியில் இன்று (வெள்ளிக் கிழமை) இன்று நடைபெறவுள்ள உயா்நிலைக்குழு கூட்டம் தீா்மானிக்கவுள்ளது. ஆண்டுதோறும் பாதுகாப்புத்துறை நிா்ணயிக்கும் கருப்பொருள் அடிப்படையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அலங்கார ஊா்திகளின் மாதிரிகள் தொடா்பான முன்மொழிவை சம்பந்தப்பட்ட அரசுகள் சமா்ப்பிக்கும்.

    இதற்காக சுமாா் 10 சுற்று கூட்டங்கள் நடைபெறும். இந்த ஆண்டு வளா்ச்சியடைந்த பாரதம், ஜனநாயகத்தின் தாய் என்ற தலைப்பிலான கருப்பொருளுடன் கூடிய மாதிரி வடிவமைப்புக்கான திட்டங்களுடன் மாநில அரசுகளின் பிரதிநிதிகள் பாதுகாப்புத்துறை கூட்டத்தில் முன்மொழிந்து வருகின்றனா்.

    இதில், அலங்கார ஊா்தியில் இடம்பெறும் நிா்ணயிக்கப்பட்ட மாதிரி வடிவத்தை பூா்த்தி செய்யாத மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்கள் அடுத்த சுற்றுக்கு அழைக்கப்படாது. அதை வைத்தே அவை தகுதி பெறவில்லை என்பதை அறியலாம்.

    இந்நிலையில், தமிழ்நாடு அரசு முன்மொழியும் மாதிரி வடிவம் தொடா்பாக முந்தைய கூட்டங்களில் பாதுகாப்புத்துறை குழு தெரிவித்த யோசனை ளுடன் தனது திட்டத்தை தமிழக அரசு வெள்ளிக்கிழமை முன்மொழிய விருக்கிறது. இதற்காக தமிழ்நாடு செய்தி மற்றும் மக்கள்தொடா்புத்துறை இயக்குநா் டி.மோகன் டெல்லி சென்று உள்ளாா்

    ×