என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அகத்திக்கீரை"
- கோவந்தனம் என்ற பசு பூஜை செய்யும் போது நமக்கு ஏராளமான பலன்கள் கிடைக்கின்றன.
- இது பாவத்தையே சேர்க்கும். பசுவைக் கண்டால் மகா லட்சுமியைக் கண்டதாக பொருளாகிறது.
கோவந்தனம் என்ற பசு பூஜை செய்யும் போது நமக்கு ஏராளமான பலன்கள் கிடைக்கின்றன.
நமது வாழ்க்கையின் உப இலக்கணங்களாகத் திகழும் பதிணென் புராணங்களில் பசுவைப் பற்றிக் குறிப்பிடாத இடமே இல்லை எனலாம்.
ஒரு பசுவைக் கண்டால் கை கூப்பியபடி,
ஹர்துவ காமதுகே தேவி சர்வ தீர்த்தா பிஷேசிநீ
பாவநீ சுரபிஸ்ரேஷ்ட தேவி துப்யம் நமோஸ்துதே
என்று சொல்லி வணங்க வேண்டும்.
அப்போது அகத்திக் கீரையை அதற்குக் கொடுத்துவிட்டு பின்பக்கம் தொட்டு வணங்கி மும்முறை வலம் வந்து மீண்டும் (தெற்கு வேண்டாம்) விழுந்து வணங்க வேண்டும்.
வீட்டில் உள்ள பசுவானால், அதை வெள்ளிக்கிழமை காலை சுத்த நீரால் குளிப்பாட்டி 32 இடங்களில் மஞ்சள் குங்குமம் வைத்து கொம்புகளில் மஞ்சள் பூசி பூச்சரம் சுற்றி வெல்லம் கலந்து அரிசி அகத்திக்கீரை கொடுத்து வணங்க வேண்டும்.
பலன்கள்: முதலில் அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும். கொலை களவு செய்வதால் உண்டாகும் பிரம்ம ஹத்தி முதலிய தோஷங்கள் விலகி விடும்.
நீண்ட நாட்களாக திதி, கர்மா செய்யாமல் விட்டிருந்தால் அந்த பாவம் பதினாறு அகத்தி கீரை கட்டை பசுவுக்குத் தருவதால் நீங்கும்.
பித்ரு தோஷங்கள் இருந்தால் நீங்கும் சுப வாழ்வு ஏற்படும்.
குழந்தைப்பேறு இல்லாத பெண்கள் பசுவின் தலை வாலில் பொட்டு வைத்து சந்தான லட்சுமி துதியை 16 முறை
கூறியபடி சுற்றி வந்து வணங்கி அகத்திக்கீரை கொடுத்தால் (வியாழக்கிழமை அன்று) கருவில் குழந்தை மலரும்.
பசுவின் பாலை 12 வியாழனும் சாப்பிட வேண்டும்.
அன்புடையான் அறுகரத்தான் அன்னையினும் அன்னையவன்
இன்புடையான் கேடகத்தாள் இடர்ஜீக்கு வாளுடையான்
மன் புகழின் மலர்க்கரத்தே மகவுடனே அமுது டையான்
சந்தனத்தாய் சந்தானப் பெருக்குடையாய் போற்றியம்மா!
(சந்தான லக்ஷ்மி துதி)
தெய்வங்கள் அனைவரையும், மகரிஷிகள், தபஸ்விகளைத் தரிசித்த பலன் ஏற்படும்.
பில்லி சூன்யங்கள் விலக அமாவாசை அன்று அகத்திக்கீரை தரலாம்.
அப்போது பில்லி சூன்யங்கள் என்னை விட்டு உன்னிடம் சேர வேண்டும் என்று வேண்டாமல் என்னை விட்டு விலக வேண்டும் என்று கூறுதல் வேண்டும்.
திருமணம் ஆகாத பெண்கள் பசுவை அரச மரத்தின் கீழ் நிற்க வைத்து அருகம்புல், அகத்திக்கீரை கொடுத்து
காமேஸ்வரி மந்திர மூலத்தை ஜபம் செய்திட எந்த வயது ஆனாலும் திருமணத் தடை அகன்று மணமேடை ஏறும் பாக்கியம் கிடைத்துவிடும்.
பசுவிற்கு மாலை அணிவித்து அதை எடுத்து தன் கழுத்தில் போட்டுக் கொண்டு அரச மர வலம் வருதல் வேண்டும்.
அகத்தி கீரையை 1 நாள் வீட்டில் வைத்திருந்து சனிக்கிழமையில் பசுவுக்கு கொடுத்து வணங்கி அதன் கோமய நீரை மஞ்சள் நீருடன் கலந்து வீட்டில் தெளிக்க பில்லி சூன்யங்கள் விலகிவிடும்.
விலங்கு இனங்களில் அம்மா என்ற ஓசையை ஆசையாய் எழுப்புவது பசு மட்டுமே.
ஆகவே அதனுள் இறை சக்திகள் நிறைந்துள்ளன.
பசு இல்லாத ஒரு வீட்டில் காலையில் ஒரு பசு தற்செயலாக வந்து நின்றால் அவ்வீட்டிற்கு நல்ல செய்தி வரப்போகிறது என்று பொருள் கொள்வர்.
உடனே அதற்கு அகத்தி கீரை, வாழைப்பழம் கொடுக்க வேண்டும்.
சில வீடுகளில் ஐந்து நாட்கள் புளித்துப்போன கழிவுநீரை வைத்து குடித்துவிட்டுத் தொலையட்டும் எங்க வீட்டு பாத்திரமாவது சுத்தமாக ஆகட்டும் என்பர்.
இது பாவத்தையே சேர்க்கும். பசுவைக் கண்டால் மகா லட்சுமியைக் கண்டதாக பொருளாகிறது.
தீட்டு, துர் மந்திரக்கட்டு இவைகள் அகன்றிட புதன்கிழமை பசுவுக்கு அகத்திக் கீரை தர வேண்டும்.
ஒரு பெண்ணுக்குக் குழந்தை பிறந்து இறந்தால் மீண்டும் புத்திர சோகம் அகன்று குழந்தை பிறக்க கோவந்தனம் செய்து கீரை தரலாம். நல்ல சுத்தமான அகத்திக்கீரைகளையே கொடுக்க வேண்டும்.
பழுத்துவிட்ட மஞ்சள் நிற கீரைகளைத் தந்தால் அதற்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டு, அது நமக்கு பாவமாகி விடும்.
"ஆவுக்குத் தரும் அகத்திக்கீரை பாவங்கள் பொடியாகித் தொலையுமே!" என்பது வாக்கு.
யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை
யார்வர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்றுரை தானே...! திருமந்திரம்.
என்ற பாடலில் பசுவிற்கு கீரை கொடுத்தல் பற்றி கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்