என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கற்கண்டு பொங்கல்"
- பொங்கல் வகைகளை நாம் வீட்டிலேயே ருசிக்க முடியும்.
- கோயில்களில் பிரசாதமாக வழங்கப்படும்.
பொங்கல் பண்டிகையன்று விதவிதமான பொங்கல் வகைகளை நாம் வீட்டிலேயே ருசிக்க முடியும். எப்போதுமே வீடு, கடைகளில் சாப்பிடும் பொங்கல்களில் இருந்து கோயில்களில் பிரசாதமாக வழங்கப்படும் கற்கண்டு பொங்கல் மிகவும் சுவையாக இருக்கும்.
சர்க்கரை பொங்கலுக்கு இணையான சுவை கொண்ட பொங்கல் என்றால் கற்கண்டு பொங்கலை குறிப்பிடலாம். கற்கண்டை பொடியாக்கி சிறு பருப்பு மற்றும் அரிசியை வைத்து இந்தப் பொங்கல் செய்யப்படுகிறது. இது சாமிக்குப் படைக்கப்படும் பிரசாதங்களில் முதன்மையானதாகும்.
தேவையான பொருட்கள்
அரிசி- 200 கிராம்
பால்- 200
கற்கண்டு - 200 கிராம்
சிறு பருப்பு- 50 கிராம்
நெய்- தேவைக்கேற்ப
ஏலக்காய் தூள்- கால் டீஸ்பூன்
பச்சை கற்பூரம்- ஒரு சிட்டிகை
சர்க்கரை- 100 கிராம்
முந்திரி பருப்பு- 10
உலர் திராட்சை- 10
செய்முறை:
அரிசி மற்றும் சிறு பருப்பை (பாசிப் பருப்பு) தண்ணீரில் நன்கு கழுவ வேண்டும். அரிசியை ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். சிறு பருப்பை கொஞ்சம் நேரம் ஊற வைத்தால் போதுமானது. 200 கிராம் அரிசிக்கு 100 கிராம் சிறு பருப்பு என்பதே சரியான அளவீடு இதற்கு 200 கிராம் அளவு கொண்ட கப் பயன்படுத்தவும்.
ஒரு பெரிய குக்கரில் இவை இரண்டையும் ஒன்றாகப் போட்டு ஒன்றரை கப் பால் ஊற்ற வேண்டும். பால் பயன்படுத்தும் அளவிற்கு தண்ணீரும் பயன்படுத்த வேண்டும். அதாவது ஒன்றரை கப் தண்ணீர். பெரிய குக்கரில் கற்கண்டு பொங்கல் சமைப்பது நல்லது. ஏனென்றால் சமைக்கும்போது பால் பொங்கி வெளியே வரக்கூடாது.
இதையடுத்து மூன்று ஸ்பூன் நெய் சேர்த்து அனைத்தையும் நன்கு கலக்கி விடுங்கள். நான்கு விசில் அடிக்கும் வரை காத்திருக்கவும். அதிக தீ வைத்து இரண்டு விசில் அடிக்கும் படியும், குறைந்த தீ வைத்து இரண்டு விசில் அடிக்கும் படியும் பார்த்துக் கொள்ளுங்கள்.
ஒரு கப் அளவிற்கு கற்கண்டு எடுத்து அதை மிக்சியில் போட்டு அரைத்து எடுக்கவும். தற்போது குக்கரில் அரை ஸ்பூன் ஏலக்காய் தூள், ஒரு சிட்டிகை பச்சை கற்பூரம் சேர்க்க வேண்டும்
அடுத்ததாக மிக்சியில் அரைத்த கற்கண்டு பவுடரை அப்படியே சேர்க்கவும். அடுப்பை குறைந்த தீயில் வைத்துக் கிண்டவும். தேவைப்பட்டால் 50 கிராம் சர்க்கரை சேர்க்கவும். இதனிடையே மற்றொரு வாணலியில் நெய் ஊற்றி அது சூடான பிறகு தேவையான அளவு முந்திரி, உலர் திராட்சை சேர்க்கவும். முந்திரி பருப்பு பொன்னிறத்திற்கு மாறி இருக்க வேண்டும். உலர் திராட்சை சேர்க்க வேண்டும். இறுதியாக ஒரு சிட்டிகை உப்பு மற்றும் பச்சை கற்பூரம் சேர்த்து கிளறி இறக்க வேண்டும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்