search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராகுல் காந்தி யாத்ரா"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நடைபயணத்தின்போது ஹிமாந்தா பிஸ்வா சர்மா மீது ராகுல் காந்தி கடும் விமர்சனம்.
    • பதிலடியாக ஹிமாந்தா சர்மா சோனியா காந்தி குடும்பத்தை விமர்சனம் செய்துள்ளார்.

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான ராகுல் காந்தி மணிப்பூர் முதல் மும்பை வரை நடைபயணம் மேற்கொள்கிறார். தற்போது ராகுல் காந்தி அசாமில் நடைபயணம் செய்து வருகிறார்.

    நடைபயணத்தின்போது அம்மாநில முதல்வரான ஹிமாந்தா பிஸ்வா சர்மாவை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். நாட்டிலேயே ஊழல் நிறைந்த முதல்வர் என ஹிமாந்தா பிஸ்வா சர்மாவை ராகுல் காந்தி குறிப்பிட்டு வருகிறார்.

    இந்த நிலையில் காந்திஸ்களை (Gandhis) விட யாரும் அதிக ஊழல் செய்ய முடியுமா? என ஹிமாந்தா பிஸ்வா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஹிமாந்தா பிஸ்வா சர்மா தனது எக்ஸ் தளத்தில், "காந்தி குடும்பம் என்று சொல்லப்படும் குடும்பத்திலிருந்து வரும் எந்த ஒரு விமர்சனத்தையும் நான் ஒரு வரமாகவே கருதுகிறேன். ஏனென்றால், மிகவும் சக்தி வாய்ந்ததாகக் கருதும் குடும்பத்தை எதிர்த்துப் போராடும் ஆற்றலை இது எனக்கு அளிக்கிறது.

    ஆனால், நான் ஒன்றை மட்டும் கேட்க விரும்புகிறேன். காந்திஸ்களை (Gandhis) விட யாரும் அதிகமாக ஊழல் செய்ய முடியுமா?. போபர்ஸ் ஊழல், நேஷனல் ஹெரால்டு ஊழல், போபால் கியாஸ் துயரச் சம்பவம், ஆண்டர்சன் தப்பித்தல், 2ஜி ஊழல், சுரங்க ஊழல். இன்னும் ஏராளம் (பட்டியல் நீளம். சென்று கொண்டே இருக்கும்)" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    பா.ஜனதா ஆட்சி செய்யும் மற்ற மாநில முதல்வர்களுக்கு ஊழலில் ஈடுபடுவது எப்படி? என ஹிமாந்தா பிஸ்வா சர்மாவால் பாடம் எடுக்க முடியும் என ராகுல் காந்தி விமர்சனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அசாம் மாநிலத்தில் வருகிற 25-ந்தேதி வரை 17 மாவட்டங்களில் 833 கி.மீ. தூரம் நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறார் ராகுல் காந்தி.

    ×