search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்"

    • திட்டத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டார் தலைமைச் செயலாளர்.
    • மாவட்ட ஆட்சியர் மற்றும் இதர அதிகாரிகள் என அனைவரும் 24 மணி நேரம் தங்கியிருக்க அறிவுறுத்தல்.

    முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்த உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற புதிய திட்டம் நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது.

    உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமானது ஒவ்வொரு மாதமும் நான்காவது புதன்கிழமை அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஜனவரி முதல் டிசம்பர் வரை ஒவ்வொரு மாதமும் எந்த வட்டத்தில் முகாம் நடத்த வேண்டும் என்ற திட்டமிடலை மாவட்ட ஆட்சியர் மேற்கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திட்டத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிவுறுத்தியுள்ளார்.

    அதில், "உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்படி, முகாம் நடைபெறும் வட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் இதர அதிகாரிகள் என அனைவரும் 24 மணி நேரம் தங்கியிருக்க வேண்டும்.

    உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் கண்டறிந்த அம்சங்களை ஆவணமாகத் தயாரித்து, வருவாய் நிர்வாக ஆணையருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

    உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடைபெறும் வட்டம் குறித்த தகவலை முன்கூட்டியே பொது மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

    சென்னை மாவட்டம் நீங்கலாக மற்ற மாவட்டங்களில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் செயல்படும்.

    மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் இந்த முகாமில் பங்கேற்க வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

    ×