search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கீர் ரெசிப்பிகள்"

    • உடலுக்கு வேண்டிய சத்துக்கள் அனைத்தும் கிடைக்கும்.
    • குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவர்.

    எந்த ஒரு விருந்தோம்பலகாக இருந்தாலும் அங்கு இனிப்பு பொருள்களுக்கென்று தனியிடம் உண்டு. அதுபோன்ற சமயங்களில் ஆரோக்கியமான உணவுகளைத் தேர்வு செய்வது விஷேச நிகழ்வுகளை மேலும் சிறப்பானதாக செய்வது விடும்.

    கீர் என்றாலே சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய இனிப்பு வகையாகும். கேரட் கீர், கோதுமை கீர், ரவை கீர் போன்ற பல கீர், கீர் வகைகள் உள்ளது. மற்ற பழங்களைக் காட்டிலும் அதிக மருத்துவ குணம் கொண்ட அத்திப்பழத்தை பயன்படுத்தி இனிப்பான கீர் செய்வது பற்றி பார்க்கலாம்.

    மாலையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு எனர்ஜி பானமாக, வீட்டில் உலர்ந்த அத்திப்பழம் இருந்தால், அதனைக் கொண்டு கீர் செய்து கொடுங்கள். இதனால் அவர்களுக்கு உடலுக்கு வேண்டிய சத்துக்கள் அனைத்தும் கிடைக்கும். மேலும் இந்த கீர் அவர்கள் விரும்பி குடிக்குமாறு இருக்கும். கடைகளில் இனி வாங்குவதை விட்டுவிட்டு வீட்டிலே உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய அத்திப்பழ கீர் எப்படி செய்யலாம்.

    தேவையான பொருட்கள்:

    அத்திப்பழம்- 6

    பாதாம்- 4

    முந்திரி- 4

    குங்குமப்பூ- 1 டீஸ்பூன்

    ஏலக்காய் தூள்- 1 டீஸ்பூன்

    நெய்- தேவையான அளவு

    பால்- 3/4 லிட்டர்

    பால் பவுடர்- 2 ஸ்பூன்

    கன்டென்ஸ்டு மில்க்- 4 ஸ்பூன்

    நாட்டு சர்க்கரை- கால் கப்

    செய்முறை:

    முதலில் அத்தி பழம், முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு இவற்றை சிறிதளவு தண்ணீர் விட்டு ஊற வைத்து கொள்ள வேண்டும். பின்னர் இவற்றை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

    ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி காய்ந்ததும் அத்திப்பழம், முந்திரி, பாதாம் விழுதை சேர்த்து சிறிது நேரம் கலந்து விடவும். பின்னர் பால் சேர்த்து கட்டியில்லாமல் நன்கு கலந்து சிறு தீயில் வைத்து கொதிக்க வைக்கவும்.

    அதன்பிறகு ஒரு கொதி வந்தவுடன் கண்டன்ஸ்டு மில்க் மற்றும் பால் பவுடரை கட்டியில்லாமல் சேர்த்து கைவிடாமல் கலந்து விடவும். பால் நன்கு சுண்டியதும் நாட்டு சர்க்கரை சேர்த்து கொதிக்க விட்டு, இறுதியாக ஏலக்காய் தூள் மற்றும் குங்குமப்பூ சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்க விட்டு அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான அத்திப்பழம் கீர் தயார்.


    ×