search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உதட்டில் தோல் உரிவது"

    • உதடுகள் ஊட்டச்சத்து குறைபாட்டினால் கருமை அடைகிறது.
    • உமிழ்நீர் உலர்ந்தவுடன் உதடுகள் வறட்சி அடையும்.

    சுற்றுச்சூழலில் உள்ள மாசு, பருவநிலை சுமாறுபாடு, ரசாயனங்களின் பயன்பாடு, உடலில் நீர்ச்சத்து குறைவது போன்ற பல்வேறு காரணங்களால் உதடுகள் வறட்சி அடைவது, உதட்டில் தோல் உரிவது போன்ற பாதிப்புகள் உண்டாகும். உதடுகள் மென்மையாகவும். பொலிவோடும் இருக்க அவற்றை தினசரி பராமரிப்பது அவசியமாகும். அதற்கான குறிப்புகள் இங்கே...

    உதடுகள் அதிகமாக கருமை அடைவது ஊட்டச்சத்து குறைபாட்டின் அறிகுறியாகும். புரதம், வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்த உணவை தொடர்ச்சியாக சாப்பிடுவதன் மூலம் கருமையை போக்க முடியும்.

     உதட்டுச்சாயம் பூசிய பிறகு அடிக்கடி கைகளால் உதடுகளை தொட்டுபார்ப்பதை தவிர்க்கவும் உதட்டுச் சாயத்தில் எந்தவிதமான பாதுகாப்பு அம்சங்களும் இருக்காது நீங்கள் உதடுகளை தொடும்போது கைகளில் உள்ள கிருமிகள் உதடுகளில் தொற்றுகளை ஏற்படுத்தக்கூடும்

    உதடுகள் வறட்சி அடையும்போது அடிக்கடி நாக்கினால் ஈரப்படுத்துவதைத் தவிர்க்கவும். உமிழ்நீர் உலர்ந்தவுடன் உதடுகள் மேலும் அதிகமாக வறட்சி அடையும். உமிழ்நீரில் உள்ள நொதிகள் உதடுகளின் மென்மையான தோலில் பாதிப்புகளை உண்டாக்கும்.

    தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது உடலை நீரேற்றத்தோடு வைத்திருப்பதோடு, உதடுகளையும் ஆரோக்கியமாக பராமரிக்க உதவும்.

    இரவு நேரத்தில் ஆழ்ந்து தூங்குவது முழு உடலுக்கும் தேவையான ஓய்வு அளித்து புத்துணர்ச்சியாக்கும். தூங்க செல்வதற்கு முன்பு உதடுகளில் பூசியுள்ள உதட்டுச்சாயத்தை நீக்குவது முக்கியமானது.

    உதடுகளை ஆரோக்கியமாகவும், மென்மையாகவும், ஈரப்பதத்துடனும் வைத்திருக்க அவற்றில் படித்திருக்கும் இறந்த செல்களை நீக்க வேண்டும். இதற்கு இயற்கையான பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட மென்மையான லிப் ஸ்கிரப்பர்களை பயன்படுத்துவது நல்லது.

     தோல் உரிவதால் உதடுகளில் உண்டாகும் காயங்களை குணப்படுத்த தேன் மெழுகு உதவும். சிறிதளவு தேன் மெழுகை உதட்டில் சீராக பூசவும். அது உலர்ந்த பின்பு மீண்டும் ஒரு படலமாக தேன் மெழுகை பூசவும். சில நிமிடங்கள் கழித்து குளிர்ந்த தண்ணீரில் பஞ்சை தோய்த்து அதைக்கொண்டு உதடுகளை சுத்தமாக துடைக்கவும். தேன் மெழுகில் உள்ள ஊட்டச்சத்துகள் உதடுகளின் ஈரப்பதத்தை தக்கவைத்து, தோல் உரிவினால் ஏற்பட்ட காயங்களை எளிதில் குணமாக்கும்.

    தனசரி காலை, மாலை இருவேளையும் ரோஜா எண்ணெய்யை உதடுகளில் பூசி வரலாம். இது உதட்டில் ஏற்படும் வெடிப்புகளை குணப்படுத்துவதோடு, உதடுகள் விரைவில் வறட்சி அடைவதில் இருந்து பாதுகாக்கும்.

     சிறிதளவு கோகோ, வெண்ணெய், தேங்காய் எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து உதட்டில் பூசவும். இது கடினமான உதட்டின் தோலை மென்மையாக்கி, உதடுகள் வறட்சி அடைவதைத் தடுக்கும்.

    உதடுகளின் ஈரப்பதத்தை தக்கவைக்க இயற்கையான பொருட்கள் கொண்டு தயரிக்கப்பட்ட 'லிப் பாம்' பூசவும். வெளியில் செல்லும்போது புறஊதாக்கதிர் தாக்கத்தை தடுக்கும் மூலக்கூறுகள் சேர்க்கப்பட்ட லிப் மாய்ஸ்சரைசர்களை பயன்படுத்தவும்.

    ×