என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வஜ்ராசனம்"
- நிவாரணம் பெற உதவலாம் என யோகா நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
- சில எளிய ஆசனங்களை செய்யலாம்.
உலக அளவில் தலைவலி பாதிப்புகள் அதிகம் இருந்தாலும் அதற்காக மருத்துவர்களிடம் செல்பவர்கள் மிகக்குறைவு. மருத்துவர்களிடம் செல்லாமலேயே அதனை சமாளித்துவிட முடியும் என அவர்கள் நினைக்கிறார்கள்.
மக்கள் ஒற்றைத் தலைவலியை `வெறும் தலைவலி' என்று கருத முனைகிறார்கள், இது சரியான கவனிப்பு எடுக்கப்படாவிட்டால், நீண்ட காலத்திற்கு இது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். ஒற்றைத் தலைவலியின் கிளாசிக்கல் அறிகுறிகளை மக்கள் புறக்கணித்தால், அவர்கள் நீண்டகால ஒற்றைத் தலைவலிக்கு ஆளாக நேரிடும். என்று மருத்துவ நிபுணர் தெரிவிக்கிறார்.
மருந்துகள் ஓரளவிற்கு உதவக்கூடும் என்றாலும், யோகா வல்லுநர்கள் யோகா செய்வதன் வழியாக இதற்கான நிவாரணம் பெற உதவலாம் என யோகா நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஒற்றைத் தலைவலி தாக்குதல்களின் தீவிரத்தை நிர்வகிக்கவும் குறைக்கவும் சில எளிய ஆசனங்களை செய்யலாம்.
வஜ்ராசனத்தில் உள்ளங்கைகளை தொடைகளில் ஊன்றி அமரவும். கண்களை மூடிக்கொண்டு உடல் முழுவதும் தளர்த்தி ஓய்வெடுக்கவும். மூச்சை உள்ளிழுத்து கைகளை தலைக்கு மேல் உயர்த்தி முழங்கைகள் நேராக இருக்க வேண்டும்.
மூச்சை வெளியேவிட்டு, உடற்பகுதியை மெதுவாக முன்னோக்கி நகர்த்த வேண்டும். முதுகெலும்பில் இருந்து இல்லாமல் இடுப்பு பகுதியில் இருந்து வளைக்க வேண்டும். கைகளை சற்று வளைத்து வைத்து, கைகள், நெற்றி, முழங்கைகளை விரிப்பில் வைக்கவும். கைகள் முழங்கால்களுக்கு முன்னால் இருக்க வேண்டும். இந்த நிலை உங்களுக்கு வசதியாக இருக்கும் வரை இதே நிலையில் சிறிதுநேரம் இருக்க வேண்டும்.
அடிப்படை நிலைக்குத் திரும்ப, மூச்சை வெளிவிட்டு மெதுவாக தலையையும், கைகளையும் செங்குத்தாக உயர்த்த வேண்டும். தொடைகளில் உள்ளங்கைகளை ஊன்றிக் கைகளைத் தாழ்த்தவும். நிதானமாக ஆழ்ந்து சுவாசிக்கவும். முயல் போன்ற அமரும் இந்த ஆசனம் உங்கள் தலைவலியை கட்டுப்படுத்தும்.
- சுகப்பிரசவம் ஆவதற்கும் ஒரு சில ஆசனமுறைகள் உள்ளது.
- ஆசனம் செய்தால் தான் சுகப்பிரசவம் என்பது இல்லை.
பெண்களின் வாழ்நாளில் முக்கியமான ஒரு கால கட்டமே அவர்களின் பிரசவ காலம் தான். கர்ப்பகாலம் பெண்களின் வாழ்க்கையில் மிக இனிமையான ஒரு காலமும் கூட, இந்த நேரத்தில் சில சங்கடங்களை அனுபவித்தாலும், இது அனைவருக்குமே மகிழ்ச்சியை கொடுக்கக் கூடிய ஒன்று. இந்நிலையில் கர்ப்பிணியாக இருக்கக்கூடிய பெண்கள் தங்களுக்கு சுகப்பிரசவம் ஆக வேண்டும் என்பதற்காக மருந்துகளை எடுத்துக்கொள்கின்றனர். ஆனால், இதனால் மட்டும் சுகப்பிரசவம் ஆகிவிடுவதில்லை.
பொதுவாக அனைத்து பெண்மணியும் சுகப்பிரசவம் ஆகவேண்டும் என்றே விரும்புகின்றனர். கர்ப்பம் தரித்த அனைத்து பெண்களும் முதல் மூன்று மாதங்களுக்கு எந்த ஒரு பயிற்சியும் செய்ய கூடாது. சுகப்பிரசவம் ஆவதற்கும் ஒரு சில ஆசனமுறைகள் உள்ளது. 7 மாதத்தில் இருந்து ஆசன முறையை கடைபிடிக்கலாம்.
ஆசனம் செய்தால் தான் சுகப்பிரசவம் என்பது இல்லை. தகுந்த நேரத்தில் வீட்டு வேலை செய்தாலே சுகப்பிரசவம் ஆகிவிடும்.
கர்ப்பிணிகள் முதல் 3 மாதத்தில் மல்லாந்து படுப்பதோ, மல்லாந்தபடி படுத்திருந்து அப்படியே எழுவதோ மிகவும் தவறு. முதல் 3 மாதங்களுக்கு ஒருக்களித்து படுத்தபடி இருப்பதுதான், கருவின் வளர்ச்சிக்கு உதவும். அதேபோன்று, ஒருக்களித்த படியே கையை ஊன்றித்தான் எழுந்திருக்க வேண்டும்.
வீரபத்ராசனம்:
வீரபத்ராசனம் என்பது உடல் முழுவதற்கும் ஆற்றலை அளிக்க உதவுவதுடன், இது கர்ப்பமாக இருப்பவர்களின் மனநிலையில் மேம்பாட்டை கொண்டு வர உதவுகிறது. மேலும் இவை தொடை மற்றும் தோள்பட்டை தசைகளை வலுப்படுத்தவும் உதவுகிறது.
வ்ருக்ஷாசனா:
உடல் அழகை அதிகரிக்கவும், முதுகு வலியை நீக்குவதற்கும் இந்த ஆசனம் உதவுகிறது. மேலும் கர்ப்ப காலத்தில் பெண்கள் அதிகம் சந்திக்க கூடிய நெஞ்செரிச்சல் பிரச்சனைகளை போக்கவும் இது உதவுகிறது.
உத்திதா திரிகோணாசனம்:
இது இடுப்பு, தொடை மற்றும் முதுகு தசை வலிகளை நீக்குவதற்கு உதவுகிறது. மேலும் மன அழுத்தத்தை நீக்குவதற்கு இவை பெரிதும் உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் கர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய மிகப்பெரும் பிரச்சனையாக உள்ள செரிமான பிரச்சனை நீக்குவதற்கும் இது உதவுகிறது.
வஜ்ராசனம்:
பெரும்பாலான பெண்கள் தங்கள் கர்ப்ப காலத்தில் எதிர்கொள்ள கூடிய பிரச்சனைகளாகிய வயிறு தொடர்பான பிரச்சனைகளை நீக்க இந்த ஆசனம் உதவுகிறது.
மலாசனம்:
இந்த மலாசனத்தை செய்வதன் மூலமாக கர்ப்பிணிகள் எளிதில் சுகப்பிரசவம் அடைவதற்கு உதவுகிறது. இந்த ஆசன முறையை தொடர்ந்து செய்வது மிகவும் நல்லது. சுகப்பிரசவத்தை விரும்புபவர்கள் நிச்சயம் இந்த ஆசனத்தை தினமும் செய்யலாம்.
இது மட்டுமல்ல மேற்குறிப்பிட்டுள்ள ஆசனங்கள் அத்தனையையும் கர்ப்பிணிகள் செய்வது மிகவும் நல்லது. கர்ப்ப காலங்களில் உடல் உள்ளுறுப்புகளில் ஏற்படும் பிரச்சனையை தடுக்க உதவும் இந்த ஆசனங்கள் தான் நமக்கு பிரசவ நேரத்தில் சுக பிரசவத்தை
ஏற்படுத்தவும் உதவும்.
- பலர் தூக்கமில்லாத இரவுகளை கழிக்கிறார்கள்.
- ஆரோக்கியத்தை பராமரிக்க தூக்கம் அவசியம்.
மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை பலரது ஆரோக்கியத்தை பாதிக்கிறது. பலர் தூக்கமில்லாத இரவுகளை கழிக்கிறார்கள். ஆனால், நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்க தூக்கம் அவசியம். நீங்கள் இரவில் தூங்குவதற்கு சிரமப்பட்டாலோ அல்லது ஏழு மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கினாலோ, நீங்கள் முயற்சி செய்யக்கூடிய சில யோகாசனங்கள் இங்கே உள்ளது.
ஒவ்வொரு ஆசனமும் 30 வினாடிகள் முதல் 1 நிமிடம் அல்லது அதற்கு மேல் வைத்திருக்கலாம். இதனை மூன்று முறை மீண்டும் செய்யவும். பின்னர் படிப்படியாக 10-15 நிமிடங்களுக்கு அதிகரிக்கவும்.
1. சுகாசனம்:
* தரையில் நேராக அமர்ந்து கொள்ளுங்கள்
* உங்களின் இரு கால்களையும் நீட்டவும்
* உங்கள் கால்களை ஒன்றன்மேல் ஒன்றாகக் வைக்கவும்
* உங்கள் உள்ளங்கைகளை முழங்கால்களில் வைக்கவும்
* முதுகெலும்பை நேராக வைத்து நிமிர்ந்து உட்கார்ந்து கொள்ளுங்கள்.
2. வஜ்ராசனம்:
* இந்த ஆசனத்தை உணவிற்கு பிறகு செய்யலாம்.
* உங்கள் முழங்கால்களை மடக்கி மெதுவாக அதன் மீது உட்காரவும்.
* உங்கள் இடுப்பை உங்கள் குதிகால் மீது வைக்கவும்.
* உங்கள் குதிகால் ஒன்றுக்கொன்று நெருக்கமாக இருப்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.
* முழங்கால் முட்டிகள் மீது உங்கள் உள்ளங்கைகளை வைக்கவும்.
* உங்கள் முதுகை நேராக்கி உட்காருங்கள்.
3. தியானம்:
* இந்த நுட்பத்தை பயிற்சி செய்ய இயற்கை சூழலைக் கண்டறியவும்.
* சுகாசனம் போன்ற வசதியான தோரணையில் உட்கார்ந்து கொள்ளுங்கள்.
* 5 விநாடிகளுக்கு முன்புறத்தையும், மற்றொரு 5 விநாடிகளுக்கு பின்புறத்தையும், வலது மற்றும் இடது பக்கங்களில் தலா 5 விநாடிகளும் பாருங்கள்.
* கண்களை மூடிக்கொண்டு உங்களால் முடிந்தவரை ஏற்கனவே நடந்த விஷயங்களை நினைவு கூருங்கள் இந்த யோகாசனம் பல நன்மைகளைக் கொண்டுள்ளன. இது உங்களிடம் அமைதியான உணர்வைத் தூண்டக்கூடும். இது ஒரு நல்ல இரவு ஓய்வை அனுபவிக்க உதவுகிறது.
உடலுக்கான உணவைப் போலவே, உடல் அதன் உகந்த நிலையில் செயல்பட தூக்கம் தேவைப்படுகிறது. தூக்கம் குறைவான மன அழுத்த அளவையும், அமைதியான மனதையும், நல்ல ஆரோக்கியத்தையும் எளிதாக்குகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்