search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருமால் பத்மாவதி தாயார்"

    • முன்னதாக அதிகாலை 6 மணிக்கு ஆலயம் திறந்ததும் சுப்ரபாதம் நிகழ்ச்சி நடைபெறும்.
    • சனிக்கிழமைதோறும் அந்த அபிஷேகத்தை நடத்துவார்கள்.

    நாகலாபுரம் வேதநாராயண சுவாமி ஆலயத்தில் தினமும் 3 கால பூஜை நடத்தப்படுகிறது.

    காலை 8.30 மணி, பகல் 11 மணி, மாலை 6 மணிக்கு இந்த 3 கால பூஜை நடைபெறும்.

    முன்னதாக அதிகாலை 6 மணிக்கு ஆலயம் திறந்ததும் சுப்ரபாதம் நிகழ்ச்சி நடைபெறும்.

    6.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் நடைபெறும். 7 மணிக்கு தோமாலை சேவை நடைபெறும்.

    7.30 மணிக்கு சகஸ்ர நாம அர்ச்சனை நடைபெறும்.

    8 மணிக்கு முதல் மணி அடிக்கப்படும். 8.30 மணிக்கு சர்வ தரிசனம், 10 மணிக்கு 2வது மணி அடிக்கப்படும்.

    மாலை 6 மணிக்கு தோமாலை சேவை, 6.30 மணிக்கு கைங்கர்யம், 7.45 மணிக்கு ஏகாந்த சேவை ஆகிய பூஜைகள் நடைபெறும்.

    வாரத்தில் ஒருநாள் மட்டுமே மூலவருக்கு அபிஷேகம் செய்யப்படும்.

    சனிக்கிழமைதோறும் அந்த அபிஷேகத்தை நடத்துவார்கள்.

    அன்று காலை 8 மணிக்கு தொடங்கி அனைத்து அபிஷேகங்களையும் செய்வார்கள்.

    பக்தர்களும் இந்த சிறப்பு பூஜையில் பங்கேற்கலாம்.

    வேதவல்லி தாயாருக்கு வெள்ளிக்கிழமைதோறும் அபிஷேகம் நடைபெறும்.

    வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கி அபிஷேகத்தை நடத்துவார்கள்.

    இதில் பெண்கள் அதிக அளவில் பங்கேற்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

    இந்த அபிஷேக தரிசனத்தை செய்தால் பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

    • ஆகமம் என்பதற்கு தொன்று தொட்டு வரும் பழமையான சாஸ்திரம் என்பது பொருள்.
    • இந்த ஆகமத்தைப் பின்பற்றுபவர்கள் வைகானசர்கள் எனப்படுவர்.

    ஆகமம் என்பதற்கு தொன்று தொட்டு வரும் பழமையான சாஸ்திரம் என்பது பொருள்.

    வைணவத்தில் வேதத்தைப் போல் ஆகமங்களுக்கும் ஏற்றம் கூறப்படுகிறது.

    இது திருமால் திருவுருவின் (விக்கிரகம்) தத்துவத்தைப் பற்றியும், வழிபாட்டு முறைகளைப் பற்றியும் கூறும் வடமொழி நூல்.

    விக்கிரக ஆராதனையின் தத்துவச் சிறப்பு, திருக்கோவில், திருமால் வடிவம் ஆகியவைகளை அமைக்கும் முறை, திருவிழாக் களின் முறைகள் ஆகிய இவற்றை விளக்குவது ஆகமம்.

    வைணவ ஆகமம் என்பது வைகானசம், பாஞ்சராத்திரம் என்று இரு வகைப்படும்.

    விகனஸர் என்ற முனிவருக்கு ஸ்ரீமந்நாராயணனே இதை அருளிச் செய்ததாகக் கூறப்படுகிறது.

    இவர் தன்னுடைய சீடர்களான மரீசி, அத்திரி, பிருகு, காசியபர் என்ற நால்வருக்கும் இந்த ஆகமத்தை உபதேசித்தார்.

    இந்த ஆகம நெறி வேதத்தை அடிப்படையாக கொண்டது.

    இந்த ஆகமத்தைப் பின்பற்றுபவர்கள் வைகானசர்கள் எனப்படுவர்.

    இவர்களுக்கு தீட்சை நெறி முக்கியம்.

    வைகானச ஆகம நூலில் ஆலய நிர்மாணம், கோவில் வழிபாட்டு முறை, திருவிழா முறைகள், பிராயச்சித்தம் ஆகியவற்றைப் பற்றி விரிவான விளக்கங்கள் உள்ளன.

    திருப்பதியில் வைகானச ஆகமத்தைச் சேர்ந்த பட்டர்கள்தான் பெருமாள் ஆராதனம் செய்கிறார்கள்.

    பழமையான ஆலயங்கள் அனைத்துமே ஆகம விதிப்படி கட்டப்பட்டிருக்கும்.

    சைவ வைணவ தலங்கள் அனைத்திற்கும் தனித்தனி ஆகம விதிகள் உள்ளன.

    ஆனால் நாகலாபுரம் வேதநாராயண சுவாமி ஆலயம் அனைத்து வித ஆகமங்களையும் உள்ளடக்கி கட்டப்பட்டிருக்கிறது.

    இப்படி கட்டப்பட்ட ஒரே ஆலயம் இதுதான் என்று சொல்கிறார்கள்.

    இதன் காரணமாக இந்த ஆலயத்தில் சைவ, வைணவ, சக்தி கடவுள்கள் அனைத்தும் ஒருங்கே அமைந்துள்ளன.

    சிவன், விஷ்ணு ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டான தலமாகவும் இந்த தலம் அமைந்துள்ளது.

    இந்த தலத்தில் மூல முதல் கடவுளான வினாயகர் சிலைகள் உள்ளன.

    துவார பாலகராகவும், கோஷ்டத்திலும் வினாயகர் சிலைகளை காணலாம்.

    மூலவராக பெருமாள் உள்ளார். தாயார் சன்னதியும் இடம் பெற்று உள்ளது.

    சைவ கடவுள்கள் பிரதிநிதியாக வீணா தட்சிணாமூர்த்தியும் இங்கு அமைந்துள்ளார்.

    ராமர், ஹயக்கிரீவர், ஆஞ்சநேயர், நரசிம்மர் உள்ளிட்ட எல்லா தெய்வங்களும் இந்த ஆலயத்தில் இடம் பெற்றிருக்கிறார்கள்.

    அதுமட்டுமின்றி ஒவ்வொரு தெய்வமும் அவரவர் திசைக்கு ஏற்ப பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

    மூலவர் வேத நாராயணசுவாமி மேற்கு திசையை நோக்கி நின்று அருள்கிறார்.

    அவரை எதிர்நோக்கி யபடி தாயார் சன்னதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.

    இந்த சன்னதி ஆலயத்தின் வடமேற்கு மூலையில் கட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    மூலவரின் கைகளில் சங்கு சக்கரம் காணப்படுகிறது.

    அபய வரத ஹஸ்தத்துடன் திருமண கோலத்தில் மூலவர் காணப்படுகிறார்.

    அதேபோன்று கருடாழ்வாரும், அவருக்குரிய அமைப்புடன் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளார்.

    இந்த ஆலயத்தில் உள்ள ஆஞ்சநேயர் பக்த ஆஞ்சநேயராக வழிபடப்படுகிறார்.

    இவரது சன்னதி தென்கிழக்கு மூலையில் அமைக்கப்பட்டுள்ளது.

    இது மிகவும் விஷேசமானதாக கருதப்படுகிறது. இதனால் இந்த ஆஞ்சநேயர் மிகச்சிறந்த வரப்பிரசாதியாக வழிபடப்படுகிறார்.

    ×