search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிம்மராசி அதிபதி"

    • மஹாபாரதத்தில் தர்மர் சூரிய பகவானை ஆராதித்து அக்ஷய பாத்திரம் பெற்றார்.
    • ஜோதிட சாஸ்திரத்தின் படி சூரியன், சிம்ம ராசிக்கு அதிபதி நவக்கிரகங்களின் நடுவில் இருப்பவர்.

    மஹாபாரதத்தில் தர்மர் சூரிய பகவானை ஆராதித்து அக்ஷய பாத்திரம் பெற்றார்.

    காயத்ரிக்கு மிஞ்சிய மந்திரம் இல்லை என்பது ஆன்றோர் வாக்கு அந்த காயத்ரியின் சாராம்சம் தியானத்திற்குரிய சூரிய பகவானுடைய ஒளி எங்கள் உள்ளத்தில் புகுந்து சிந்தனைகளை தூண்டி விடுவதாகும்.

    ஸ்ரீயாக் ஞவல்க்ய மஹரிஷி தான் அருளிச் செய்த ஸ்ரீ சூர்ய கவச தோத்திரத்தில் "தினமணியானவன்" இரட்சிக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறார்.

    ஜோதிட சாஸ்திரத்தின் படி சூரியன், சிம்ம ராசிக்கு அதிபதி, நவக்கிரகங்களில் நடுவில் அமர்ந்திருப்பவர் இவர்.

    இவருக்கு

    அதி தேவதை-அக்னி,

    பிரத்யதி தேவதை-ருத்திரன்,

    தலம்-சூரியனார் கோவில்,

    நிறம்-சிவப்பு,

    வானம்-ஏழு குதிரைகள் பூட்டிய ரதம்,

    தான்யம்-கோதுமை,

    மலர்-செந்தாமரை,எருக்கு,

    வஸ்திரம்-சிவப்பு,

    ரத்தினம்-மாணிக்கம்,

    அன்னம்-கோதுமை, ரவா, சர்க்கரைப் பொங்கல்.

    ×