search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சூரிய பூைஜ"

    • ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் இந்த அதிசய சூரிய பூஜை நடந்து வருகிறது.
    • பங்குனி மாதம் மீன் மாதமாக கருதப்படுகிறது.

    நாகலாபுரம் வேத நாராயணசுவாமி ஆலயத்தில் ஆண்டுதோறும் நடக்கும் சூரிய பூஜை மிக வித்தியாசமானதாகும்.

    பொதுவாக பழமையான ஆலயங்களில் மூலவர் சிலை மீது சூரிய கதிர்கள் படுவதை சூரிய பூஜை என்று நமது முன்னோர்கள் வகுத்து வைத்து உள்ளனர்.

    பெரும்பாலும் ஆலயங்களில் ஆண்டுக்கு ஒரு தடவை ஏதாவது ஒருநாள் மட்டுமே மூலவர் மீது சூரிய கதிர்கள் விழும் நிகழ்வு நடைபெறும்.

    ஆனால் இந்த தலத்தில் அடுத்தடுத்து மூன்று நாட்களுக்கு சூரிய கதிர்கள் மூலவர் மீது விழும் அதிசயம் நடக்கிறது.

    ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் இந்த அதிசய சூரிய பூஜை நடந்து வருகிறது.

    இத்தகைய மூன்று நாள் சூரிய பூஜை வேறு எந்த தலத்திலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    பங்குனி மாதம் மீன் மாதமாக கருதப்படுகிறது.

    பெருமாள் மீன் அவதாரம் எடுத்த காரணத்தினால் இந்த மாதத்தில் இத்தகைய மூன்று நாள் சூரிய பூஜை நடந்து வருவதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    சூரியன் அடுத்தடுத்து 3 நாட்கள் தனது கதிர்களை இந்த தலத்தின் இறைவன் மீது படச் செய்வதால் அதை ஒரு அதிசய நிகழ்வாக கருதுகிறார்கள்.

    இதனால் அந்த மூன்று நாட்களும் நாகலாபுரம் ஆலயத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள், விழாக்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.

    ×