என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சர்வதேச மொபைல் காங்கிரஸ்"
- 2024 சர்வதேச மொபைல் காங்கிரஸ் நிகழ்ச்சியில் அறிவித்தது.
- சவுகரியமாக அணிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
சாம்சங் நிறுவனம் பயனர்கள் தங்களின் உடல்நலம் மற்றும் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தும் வகையில் உருவாக்கி இருக்கும் அதிநவீன தொழில்நுட்பம் பற்றிய விவரங்களை 2024 சர்வதேச மொபைல் காங்கிரஸ் நிகழ்ச்சியில் அறிவித்தது.
அதன்படி தனது கேலக்ஸி ரிங் சாதனத்தை அறிமுகம் செய்து, பயனர்களின் உடல்நலம் மற்றும் சுகாதாரம் தொடர்பாக சாம்சங் மேற்கொள்ளும் திட்டங்கள் குறித்தும் அறிவித்தது. புதிய கேலக்ஸி ரிங் 24 மணி நேரம் ஒருவர் மிகவும் சவுகரியமாக அணிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
கேலக்ஸி ரிங் சாதனத்தை கொண்டு பயனர்கள் தங்களது உடல் ஆரோக்கியம் பற்றிய விவரங்களை துல்லியமாக அறிந்து கொள்ள முடியும். உடல்நலம் மற்றும் சுகாதாரம் உள்ளிட்டவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் சாம்சங் நிறுவனம் தனது பல்வேறு சாதனங்களிலும் கேலக்ஸி ஏ.ஐ. அனுபவத்தை புகுத்த திட்டமிட்டு வருகிறது.
இதன் அங்கமாகவே கேலக்ஸி ரிங் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. வீட்டிற்குள் ஒருவருக்கு தனித்துவம் மிக்க மற்றும் எளிதில் கிடைக்கக்கூடிய தீர்வுகளை வழங்கும் வகையில் கேலக்ஸி ரிங் உருவாக்கப்பட்டுள்ளது.
புதிய சாதனம் அறிமுகம் செய்ததோடு, உடல்நலம் மற்றும் சுகாதாரம் தொடர்பான சேவைகளை சாம்சங் ஹெல்த்-இல் இணைக்க சாம்சங் திட்டமிட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் கேலக்ஸி ரிங் சாதனம் அடுத்து நடைபெறும் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டு, பிறகு விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.
முன்னதாக நடைபெற்ற கேலக்ஸி அன்பேக்டு நிகழ்ச்சியில் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ரிங் சாதனத்தின் டீசரை வெளியிட்டு, விரைவில் இது பற்றிய விவரங்களை வழங்குவதாக அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
- நுபியாவின் முதல் ஃப்ளிப் போன் 4310 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டுள்ளது.
- இந்த ஸ்மார்ட்போன் 33 வாட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.
நுபியா நிறுவனத்தின் முதல் ஃப்ளிப் போன் 2024 சர்வதேச மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய நுபியா ஃப்ளிப் 5ஜி மாடலில் 6.9 இன்ச் 120Hz OLED டிஸ்ப்ளே, வெளிப்புறம் 1.43 இன்ச் அளவில் OLED ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஃப்ளிப் போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 பிராசஸர் கொண்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2MP கேமரா, 16MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 4310 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 33 வாட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதை கொண்டு இந்த ஸ்மார்ட்போனை 73 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்துவிட முடியும்.
நுபியா ஃப்ளிப் 5ஜி அம்சங்கள்:
6.9 இன்ச் 2790x1188 பிக்சல் FHD+ 120Hz AMOLED மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே
1.43 இன்ச் 466x466 பிக்சல் AMOLED வெளிப்புற டிஸ்ப்ளே
குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 பிராசஸர்
அட்ரினோ 644 GPU
6 ஜி.பி. ரேம்
128 ஜி.பி. மெமரி
ஆண்ட்ராய்டு 13
டூயல் சிம் ஸ்லாட்
50MP பிரைமரி கேமரா
2MP டெப்த் சென்சார், எல்.இ.டி. ஃபிளாஷ்
16MP செல்ஃபி கேமரா
பக்கவாட்டில் கைரேகை சென்சார்
யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6, ப்ளூடூத் 5.3
யு.எஸ்.பி. டைப் சி
4310 எம்.ஏ.ஹெச். பேட்டரி
33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
நுபியா ஃப்ளிப் 5ஜி ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 599 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 49 ஆயிரத்து 650 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை துவங்கும் என நுபியா தெரிவித்துள்ளது.
- வசதிகள் காரணமாக பென்டபில் எனும் புது வகையில் இணைந்துள்ளது.
- இதுவரை இல்லாத அளவுக்கு வித்தியாசமாக கஸ்டமைஸ் செய்ய முடியும்.
2024 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் மோட்டோரோலா நிறுவனம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில் புதிய வகை ஸ்மார்ட்போன் கான்செப்ட்-ஐ அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போன் அதன் டிசைன் மற்றும் அது வழங்கும் வசதிகள் காரணமாக பென்டபில் எனும் புது வகையில் இணைந்துள்ளது.
பென்டபில் போன் என்ற வகையில் இந்த ஸ்மார்ட்போன் கேட்பதற்கு கற்பனை போன்றிருக்கும் பல செயல்களில் அசாத்தியமாக செய்து நம்மை ஆச்சரியப்படுத்தும். அந்த வகையில் இந்த கான்செப்ட் மாடல் பயனர்கள் தங்களின் போனினை இதுவரை இல்லாத அளவுக்கு வித்தியாசமாக கஸ்டமைஸ் செய்ய அனுமதிக்கிறது.
இதனை வழக்கமான ஸ்மார்ட்போன் போன்றும் பயன்படுத்தலாம், அல்லது வேறு வடிவத்திற்கு மாற்றியும் பயன்படுத்தலாம். இதில் உள்ள அதிநவீன வளையும் தன்மை கொண்ட டிஸ்ப்ளே ஸ்மார்ட்போனை மணிக்கட்டில் பொருந்திக் கொள்ளும் வகையில் வளைத்துக் கொள்ளலாம். இவ்வாறு செய்யும் போது ஸ்மார்ட்போனில் இருந்து 6.9 இன்ச் அளவில் ஸ்மார்ட்வாட்ச் ஆக இந்த சாதனம் மாறிவிடும்.
இதுதவிர இதில் உள்ள "டென்ட் மோட்" மூலம் கேமிங் செய்வது, ஸ்மார்ட்போனின் மேல்புறத்தை சற்றே வளைத்து ஸ்டாண்ட் மோடில் வைப்பது என பலவித பயன்பாடுகளை புதிய மோட்டோ பென்டபில் கான்செப்ட் அசாத்தியமாக கையாள்கிறது. ஸ்மார்ட்போன் பல வடிவங்களில் வளைக்க முடியும் என்பதால், எந்த வடிவத்தில் இருக்கும் போதும் செயலிகள் சீராக இயங்குவதை உறுதிப்படுத்தும் வகையில் இதனை மோட்டோரோலா வடிவமைத்துள்ளது.
புதிய கான்செப்ட் மாடலின் பின்புறம் ஆரஞ்சு நிறத்தில் ஃபேப்ரிக் போன்ற பேனல் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் சக்திவாய்ந்த காந்தம் அடங்கிய மெக்கானிசம், ஸ்மார்ட்போன் கையில் வாட்ச் போன்று அணிந்திருக்கும் போது, கையில் இருந்து நழுவாமல் பார்த்துக் கொள்கிறது. ரிஸ்ட் மோடில் இந்த சாதனம் எதிர்காலத்தில் இருப்பது போன்ற அனுபவத்தை வழங்கும்.
இத்தனை வசதிகள் மற்றும் பல்வேறு வடிவங்களில் வளைக்கும் திறன் கொண்ட கான்செப்ட் மாடல் எவ்வளவு காலம் உழைக்கும், தொடர்ச்சியான பயன்பாடுகளை இந்த சாதனம் எந்தளவுக்கு எதிர்கொள்ளும், இதில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அதனை எப்படி சரி செய்வது என்ற விஷயங்களுக்கு தற்போதைக்கு பதில் இல்லை. மேலும், இத்தகைய சாதனத்திற்கு அதிகளவு பேட்டரி தேவைப்படும், பேட்டரி அடிக்கடி தீர்ந்து போகும் வாய்ப்பும் அதிகம் தான்.
நல்லபடியாக இது கான்செப்ட் வடிவில் இருப்பதால், மோட்டோரோலா இந்த சாதனம் குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில், இதனை தொடர்ச்சியாக மேம்படுத்தும் என்று தெரிகிறது. மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்த நிறுவனங்களுக்கு நீண்ட காலம் தேவைப்பட்டது. அந்த வகையில், இந்த சாதனத்தை பொது வெளியில் அனைவருக்கும் ஏற்ற வகையில் அறிமுகப்படுத்த மோட்டோரோலா மேலும் சில காலம் எடுத்துக் கொள்ளும் என்றே தெரிகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்