search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சோராஃபளி"

    • குழந்தைகளுக்கு இந்த ஸ்நாக் மிகவும் பிடிக்கும்.
    • சோராஃபளியின் மீது மசாலா பொடி தூவி, சட்னியுடன் பரிமாறவும்.

    தேவையான பொருட்கள்:

    கடலைமாவு - 1 கப்

    உளுந்தமாவு- அரை கப்

    பேக்கிங் பவுடர் - கால் டேபிள் ஸ்பூன்

    எண்ணெய் - பொரிப்பதற்கு

    காஷ்மீரி மிளகாய்த்தூள் - கால் டேபிள் ஸ்பூன்

    கொத்தமல்லித்தழை- 2 டேபிள் ஸ்பூன்

    புதினா இலை - 2 டேபிள் ஸ்பூன்

    இஞ்சி - 1 அங்குலத் துண்டு

    பச்சை மிளகாய்- 5

    மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்

    சிட்ரிக் அமிலம் - அரை சிட்டிகை

    உப்பு - தேவைக்கு

    ஐஸ்கட்டிகள் - தேவைக்கு

    பிளாக் சால்ட் - தேவைக்கு

    செய்முறை:

    ஒரு பாத்திரத்தில் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் உப்பு மற்றும் பேக்கிங் சோடாவை கலந்து அடுப்பில் வைத்து குறைவான தீயில் 3 நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும். அகலமான பாத்திரத்தில் கடலைமாவு ஒரு கப் மற்றும் உளுந்தமாவை கொட்டி சலித்து எடுக்கவும். பின்பு அந்த மாவில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி நன்றாகக் கலக்கவும்.

    அதன்பிறகு தயாரித்து வைத்திருக்கும் பேக்கிங் சோடா கரைசலை சிறிது சிறிதாக ஊற்றி மாவை கெட்டியான பதத்துக்கு பிசையவும். பின்னர் அதை மூடி அப்படியே வைக்கவும். 25 நிமிடங்களுக்கு பிறகு அந்த மாவை எடுத்து மேலும் சிறிது எண்ணெய் ஊற்றி மென்மையாகும் வரை நன்றாகப் பிசையவும். பின்னர் அந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

    ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க உருண்டைகளை எண்ணெய்யில் தோய்த்து எடுத்து வைக்கவும். பின்பு ஒவ்வொரு உருண்டையையும் மெல்லிய சப்பாத்திகளாக தேய்க்கவும். பின்னர் அந்த சப்பாத்திகளை மெல்லிய ரிப்பன்களாக நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்.

    அகன்ற வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவு ரிப்பன்களை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

     மசாலா பொடி:

    ஒரு சிறிய கிண்ணத்தில் காஷ்மீரி மிளகாய்த்தூளுடன் கால் டேபிள் ஸ்பூன் பிளாக் சால்ட் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

    சட்னி:

    ஒரு மிக்சி ஜாரில் கொத்தமல்லித்தழை, புதினா இலை, இஞ்சி, பச்சை மிளகாய், மிளகுத்தூள், பிளாக் சால்ட், உப்பு, ஐஸ்கட்டிகள் ஆகியவற்றை சேர்த்து கெட்டியாக அரைக்கவும். ஐஸ்கட்டிகள் சேர்த்து அரைப்பதால் சட்னி நீண்டநேரம் நிறம் மாறாமல் இருக்கும். அடுத்ததாக ஒரு பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் ஊற்றி கடலை மாவு, எலுமிச்சை சாறு, உப்பு ஆகியவற்றை சேர்த்து அடுப்பில் வைத்து மிதமான தீயில் சூடுபடுத்தவும். இந்த கலவை கெட்டியாக மாறும்போது அடுப்பில் இருந்து இறக்கி ஆறவைக்கவும். பின்னர் அதில் ஐஸ்கட்டிகள் மற்றும் தயாரித்து வைத்திருக்கும் சட்னியை சேர்த்து கலக்கவும்.

     பரிமாறும் முறை:

    மொறுமொறுப்பான சோராஃபளியின் மீது மசாலா பொடியை பரவலாகத் தூவி, சட்னியுடன் சேர்த்து பரிமாறவும்.

    ×