search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பண்டி சஞ்சய்"

    • லாரியின் அடியில் சிக்கிய திவ்யஸ்ரீயின் தலைமுடி மீது லாரியின் டயர் எறியுள்ளது.
    • அப்போது அவ்வழியே மத்திய அமைச்சர் பண்டி சஞ்சய் குமார் தனது காரில் வந்துள்ளார்.

    தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தில் லாரிக்கு அடியில் சிக்கிய பெண்ணை உள்ளூர் மக்கள் உதவியுடன் மத்திய அமைச்சர் பண்டி சஞ்சய் குமார் காப்பாற்றியுள்ளார்.

    திவ்யஸ்ரீ என்ற பெண் மீது லாரி மோதியுள்ளது. இதனால் தடுமாறிய அப்பெண் லாரியின் சக்கரத்திற்கு அருகில் விழுந்துள்ளார். உடனே சுதாரித்த ஓட்டுநர் லாரியை நிறுத்தியுள்ளார். ஆனால் லாரியின் அடியில் சிக்கிய திவ்யஸ்ரீயின் தலைமுடி மீது லாரியின் டயர் எறியுள்ளது. நூலிழையில் உயிர்பிழைத்த அப்பெண்ணின் அலறலை கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கும் கூடியுள்ளனர்.

    அப்போது அவ்வழியே மத்திய அமைச்சர் பண்டி சஞ்சய் குமார் தனது காரில் வந்துள்ளார். அப்போது கூட்டமாக மக்கள் இருப்பதை கண்ட அவர் காரை விட்டு கீழே இறங்கி, அப்பெண்ணின் நிலையை கண்டு அதிகாரிகளிடம் அவரை மீட்க உத்தரவிட்டார்.

    பின்னர் உள்ளூர் வாசிகளின் உதவியுடன் லாரியை சக்கரத்தை உயர்த்தியும் பெண்ணின் தலைமுடியை வெட்டியும் அப்பெண்ணை பத்திரமாக மீட்டு பக்கத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அதிகாரிகள் அனுமதித்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    • தெலுங்கானா மாநிலத்தில் பா.ஜ.க. சார்பில் விஜய் சங்கல்ப யாத்திரை நடந்து வருகிறது.
    • ஆளும் கட்சியான காங்கிரஸ் மற்றும் பி.ஆர்.எஸ். கட்சி குறித்து யாத்திரையில் விமர்சனம் செய்து பேசி வருகின்றனர்.

    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தில் பா.ஜ.க. சார்பில் விஜய் சங்கல்ப யாத்திரை நடந்து வருகிறது. இந்த யாத்திரையில் வரும் பா.ஜ.க.வினர் ஆளும் கட்சியான காங்கிரஸ் மற்றும் பி.ஆர்.எஸ். கட்சி குறித்து விமர்சனம் செய்து பேசிவருகின்றனர்.

    இந்நிலையில், வாரங்கல் மாவட்டம் பீமதேவார பள்ளி என்ற இடத்தில் பா.ஜ.க.வின் விஜய் சங்கல்ப யாத்திரை நேற்று நடந்தது. இதில் கரீம் நகர் எம்.பி.யும், தெலுங்கானா மாநில பா.ஜ.க. தலைவருமான பண்டி சஞ்சய் கலந்துகொண்டார்.

    அப்போது அங்கிருந்த மர்ம நபர்கள் பண்டி சஞ்சய் வந்த கார், மற்ற வாகனங்கள் மீது சரமாரியாக முட்டைகளை வீசி தாக்கினர். இதனால் யாத்திரை உடனடியாக நிறுத்தப்பட்டது. தகவலறிந்து அப்பகுதியில் ஏராளமான பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்கள் குவிந்தனர்.

    முட்டை வீச்சு சம்பவத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஈடுபட்டதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என பா.ஜ.க.வினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது. இதையடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போலீஸ் அதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து பா.ஜ.க.வினர் போராட்டத்தைக் கைவிட்டனர்.

    ×