search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மலையாள சினிமா"

    • வினீத் ஸ்ரீனிவாசன் அடுத்த படைப்பாக ”வருஷங்களுக்கு சேஷம்” என்ற படத்தை இயக்கியுள்ளார்
    • தியான், அஜூ வர்கீஸ், பேசில் ஜோசப், நீரஜ் மாதவ் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

    'மலர்வாடி ஆர்ட்ஸ் க்லப்' என்ற மலையாள படத்தின் மூலம் மலையாள சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகினார் வினீத் ஸ்ரீனிவாசன். 2012 ஆம் ஆண்டு வெளியான தட்டத்தின் மறையத்து படத்தை இயக்கினார்.

    இத்திரைப்படம் மிகப் பெரிய வெற்றியடைந்தது. மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. மக்களிடம் வினீத் ஸ்ரீனிவாசன் பிரபலம் அடைய தொடங்கினார்.

    இவர் இயக்கத்தில் பிரணவ் மோகன்லால், கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் தர்ஷனா ராஜேந்திரன் முன்னணி கதாப்பாத்திரமாக நடித்து ஹ்ருதயம் படம் 2022 ஆம் ஆண்டு வெளியானது. மக்களிடையே மிகவும் வரவேற்கப்பட்டது. இளைஞர்கள் மத்தியில் ஹ்ருதயம் படம் கொண்டாடப்பட்ட இப்படம் தமிழக மக்களாலும் ரசிக்கபட்டது.

    அடுத்ததாக வினீத் ஸ்ரீனிவாசன் அடுத்த படைப்பாக "வருஷங்களுக்கு சேஷம்" என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரெயிலர் நேற்று வெளியானது.

    ஹ்ருதயம் வெற்றிக்கு பிறகு பிரணவ் மோகன்லால் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் இணைந்து நடித்துள்ளனர். அவர்களுடன் தியான், அஜூ வர்கீஸ், பேசில் ஜோசப், நீரஜ் மாதவ் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

    80 களில் படம் நடப்பதாக காண்பிக்கபடுகிறது. இரு நண்பர்கள் பிரணவ் மற்றும் தியானும் மிகப்பெரிய நடிகர்கள் ஆக வேண்டும் என்ற கனவோடு கேரளாவிலிருந்து சென்னை கோடம்பாக்கம் வருகின்றனர். வந்த இடத்தில் அவர்களுக்கு சினிமா துறையின் உண்மை முகம் தெரிய வருகிறது, மிகவும் கஷ்டப்படுகிறார்கள். அதில் தியான் பிரணவினால் நம்பிக்கை துரோகம் செய்யப்படுகிறான்.

    இவர்கள் திரைதுறையில் சாதித்தார்களா என்பதே கதை. டிரெயிலர் பார்க்க மிகவும் அழகாக இருக்கிறது. படத்தை பார்க்க வேண்டும் என்ற எதிர்பார்பை தூண்டும் வகையில் அமைந்துள்ளது. இப்படத்தின் டிரெயிலர் வெளியானதில் இருந்து ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் படத்தை எதிர்நோக்கி காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

    விசாக் சுப்பிரமணியனின் மெரிலேண்ட் சினிமாஸ் இப்படத்தை தயாரித்துள்ளனர். அமிரித் ராம்நாத் இப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகவுள்ளார். ஏப்ரல் 11 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • உலகின் மிக நீளமான ஆவணப்படத்திற்கான கின்னஸ் உலக சாதனையைப் பெற்றது.
    • இப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா இன்று கொச்சினில் நடைப்பெற்றது

    மலையாள சினிமாவின் சிறந்த முன்னணி இயக்குனரில் ஒருவர்தான் பிளெஸ்சி ஐப் தாமஸ். இவரை அனைவரும் ப்ளெஸி என்று தான் திரைத்துறையில் அழைப்பர். இயக்குனர் பிளெஸ்சி இயக்கிய காழ்ச்சா திரைப்படம் 2004-ல் வெளியானது. இதுவே இவருக்கு முதல் படம். மம்முட்டி, பத்மப்ரியா நடித்த இந்த படம் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. 3 ஃபில்ம் ஃபேர் சவுத் விருதுகளை வென்றது காழ்ச்சா படம். இயக்குனர் பிளெஸ்சிக்கு காழ்ச்சா திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை தேடிக் கொடுத்தது.

    அதற்கு பிறகு 2005-ல் அடுத்த படமான 'தன்மாத்ர' படத்தை இயக்கினார். இது பத்மராஜனின் "ஓர்மா" சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு பிளெஸ்சி எழுதி இயக்கி 150 நாட்கள் ஓடிய திரைப்படம். தன்மாத்ர சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை என 5 கேரள மாநில திரைப்பட விருதுகளை வென்றது. 53-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் மலையாளத்தின் சிறந்த திரைப்படத்திற்கான விருதையும் வென்றது. 2011-ல் 'பிரணயம்'படத்தை பிளெஸ்சி இயக்கினார். இத்திரைப்படம் அந்த அளவுக்கு வணிக ரீதியாக பெருமளவு வசூலிக்கவில்லை.

    இவர் எடுத்த "100 இயர்ஸ் ஆஃப் க்ரிசோஸ்டம் "ஆணவப் படம் 2018 வெளியானது. உலகின் மிக நீளமான ஆவணப்படத்திற்கான கின்னஸ் உலக சாதனையைப் பெற்றது. அந்த ஆவணப் படத்திற்கான நீளம் 48 மணி நேரம் 10 நிமிடங்கள். இந்நிலையில் இயக்குனர் பிளெஸ்சி தனது அடுத்த படமாக 'ஆடுஜீவிதம்'படத்தை இயக்கியுள்ளார். மார்ச் 28 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. ப்ருத்விராஜ் மற்றும் அமலா பால் உள்ளிட்டோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஆடு ஜீவிதம் என்ற மலையாள நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளது இப்படம். பிளெஸ்சி இயக்கி இருக்கும் இப்படத்திற்கு ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா இன்று கொச்சினில் நடைப்பெற்றது. ஏர் ரகுமான், மோகன்லால், ப்ரிதிவிராஜ், இயக்குனர் மற்றும் படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.

     

     

     

     

    • 2008-ல் வெளியான ஆடுஜீவிதம் எனும் மலையாள நாவலை தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
    • கேரளாவில் இருந்து புலம்பெயர்ந்து சவுதி அரேபியா சென்று மாட்டி கொண்டு அடிமையான ஒருவனின் கதையாகும்.

    மலையாள சினிமாவில் விரைவில் வெளியாக இருக்கும் ஆடுஜீவிதம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ப்லஸி இப்படத்தை இயக்கி தயாரித்து இருக்கிறார்.

    மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான ப்ரிதிவிராஜ் சுகுமாரன் மற்றும் அமலா பால் நடித்துள்ளனர். 2008-ல் வெளியான ஆடுஜீவிதம் எனும் மலையாள நாவலை தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

    'தி கோட்ஸ் லைஃப்'என இப்படத்திற்கு ஆங்கில தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

    ப்ரித்திவிராஜ் 'நஜீப்' எனும் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். கேரளாவில் இருந்து புலம்பெயர்ந்து சவுதி அரேபியா சென்று மாட்டி கொண்டு அடிமையான ஒருவனின் கதையாகும்.

    சுனில் கே. எஸ். ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். ஸ்ரீகர் ப்ரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார்.

    வரும் மார்ச் 28ம் தேதி ஆடுஜீவிதம் திரைப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளும் வெளியாக உள்ளது.

    இந்நிலையில் ஆடுஜீவிதம் படத்தின் ட்ரெய்லர் இப்பொழுது வெளியாகியுள்ளது.

    • கேரளா அரசாங்கம் வெளியிட போகும் அந்த ஓடிடி தளத்திற்கு சி-ஸ்பேஸ் என்று பெயரிட்டுள்ளனர்.
    • நாளை காலை 9.30 மணி அளவில் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் கைராலி தியேட்டரில் சி-ஸ்பேஸ் ஓடிடி தளத்தை துவங்கி வைக்க இருக்கிறார்.

    தற்போதைய சினிமா சூழ்நிலையில் மற்ற அனைத்து மொழி சினிமாகளுக்கு இடையில் எப்போழுதும் மலையாள சினிமா தனித்து இருக்கும்.

    அவர்கள் இயக்கும் படங்கள் ஆகட்டும், அவர்கள் எடுக்கும் கதைகளம் ஆகட்டும் எப்பொழுதும் வித்தியாசமானவை.

    மலையாள சினிமாவின் கதைகளம் எப்போதும் மக்களின் பிரச்சனைகளையும், சமூதாய பிரச்சனைகளையும் அதிகமாக பேசக்கூடியவை.

    பெரும் பெரும் பொருட் செலவில் எடுக்கப்படும் பிற மொழி பல படங்களுக்கு போட்டி போடும் அளவில் எளிமையான படங்களை முந்நிறுத்தி வசூல்களை அள்ளும் திறன் கொண்டது மலையாள சினிமா. அதற்கு உதாரணமாக சமீபத்தில் வெளியாகிய பிரமயுகம்,மஞ்சும்மல் பாய்ஸ். ப்ரேமலு போன்ற படங்களே சாட்சி.

    இப்போது அதற்கு மேலும் ஒரு மகுடம் சூடும் விதமாக கேரளா அரசாங்கம் ஒரு முயற்சி எடுத்துள்ளது.கேரளா அரசாங்கம் இந்தியாவில் முதன் அரசாங்கத்திற்கு சொந்தமான ஓடிடி தளத்தை தொடங்க உள்ளது.இதுவரை ஓடிடி தளங்கள் என்றால் பெருன்பான்மையாக இருப்பது அமேசான் ப்ரைம் வீடியோ, நெட்ஃப்லிக்ஸ், zee 5,ஹாட் ஸ்டார்.ஆஹா போன்றவைகள்தான் .

    கேரளா அரசாங்கம் வெளியிட போகும் அந்த ஓடிடி தளத்திற்கு சி-ஸ்பேஸ் என்று பெயரிட்டுள்ளனர்.

    நாளை காலை 9.30 மணி அளவில் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் கைராலி தியேட்டரில் சி-ஸ்பேஸ் ஓடிடி தளத்தை துவங்கி வைக்க இருக்கிறார்.

    சிஸ்பேஸ் ஓடிடி தளம் உருவாக்கிய நோக்கத்தைப் பற்றி செய்தியாளர்களிடம்"சிஸ்பேஸ் OTT துறையில் வளர்ந்து வரும் ஏற்றதாழ்வுகள் மற்றும் உள்ளடக்கத் தேர்வு மற்றும் பரப்புதல் ஆகியவற்றின் அடிப்படையில் பலதரப்பட்ட சவால்களுக்கு ஒரு பிரதிபலிப்பாகும்" என்று கேரள மாநில திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் (KSFDC) தலைவருமான ஷாஜி என் கருண் கூறினார்.

    சிஸ்பேஸ் ஓடிடி தளம் KSFDC என்ற மாநில திரைபட மேம்பாட்டு கழகத்தால் நிர்வகிக்க படும் எனவும்,மலையாள சினிமாவையும், மலையாள திரைத்துறையையும் மேம்படுத்த இந்த முயற்சி முதல் படியாக இருக்கும் எனவும்,இத்தளத்தில் எந்த படங்கள் இடம் பெற வேண்டும் என்பதை 60 நபர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

    ×