என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தொகுதி ஒதுக்கீடு"
- திருச்சி, விருதுநகர் தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்கக் கூடாது என்று கட்சிக்குள் பலத்த எதிர்ப்பு கிளம்பியது.
- திருச்சி அல்லது விருதுநகர் தொகுதியை கூட்டணி கட்சியான ம.தி.மு.க.வுக்கு ஒதுக்க தி.மு.க. முடிவு செய்தது.
சென்னை:
தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ள நிலையில் எந்தெந்த தொகுதிகள் என்று உடன்பாடு காண்பதில் இன்று வரை இழுபறி நிலை நீடிக்கிறது.
இதில் காங்கிரசுக்கு புதுச்சேரி ஒதுக்கப்பட்டுவிட்டது. கடந்த முறை போல் திருச்சி, விருதுநகர், ஆரணி, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, கரூர், சிவகங்கை, தேனி ஆகிய 9 தொகுதிகளை காங்கிரஸ் முதலில் கேட்டு இருந்தது.
ஆனால் திருச்சி, விருதுநகர் தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்கக் கூடாது என்று கட்சிக்குள் பலத்த எதிர்ப்பு கிளம்பியதால் திருச்சி அல்லது விருதுநகர் தொகுதியை கூட்டணி கட்சியான ம.தி.மு.க.வுக்கு ஒதுக்க தி.மு.க. முடிவு செய்தது. ஆனால் இதற்கு காங்கிரஸ் ஒத்துக்கொள்ளவில்லை.
ஆனாலும் தி.மு.க. புதிதாக 2 தொகுதிகளை ஒதுக்குவதாக கூறியது. அந்த புதிய தொகுதியில் சம்பந்தப்பட்ட எம்.பி.யை போட்டியிட சொல்லுங்கள் என்று கூறியிருந்தனர்.
இதற்கு அந்த முக்கிய பிரமுகர் சம்மதிக்கவில்லை. இதனால் அவர் டெல்லியில் மேலிட தலைவர்களிடம் முறையிட்டுள்ளார். இந்த விஷயம் இப்போது ராகுல் காந்தி வரை சென்றுவிட்டது.
இந்த நிலையில் இன்று மும்பை சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராகுல்காந்தியை சந்திக்கும் போது திருச்சி, விருதுநகர் தொகுதி எந்த கட்சிக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்பதை பேசி முடிவு செய்வார் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில் அறிவாலயத்தில் நாளை காலை தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு எந்தெந்த தொகுதிகள் என்று முடிவு செய்யப்பட்டு உடன்பாடு கையெழுத்தாகும் என தெரிகிறது.