search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விமர்சன சிந்தனை"

    • நேர்மறையான பழக்கங்களை பின்பற்றுவது முக்கியம்.
    • முற்போக்கான சிந்தனைகளையும், குணங்களையும் கொண்டிருப்பார்கள்.

    வாழ்க்கையில் ஒருவர் சிறந்த நபராக விளங்குவதற்கு நேர்மறையான பழக்கங்களை பின்பற்றுவது முக்கியம். புத்திசாலிகள் அத்தகைய பழக்கவழக்கங்களை கொண்டிருப்பதுடன் முற்போக்கான சிந்தனைகளையும், குணங்களையும் கொண்டிருப்பார்கள். அவை அவர்களை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லும் தூண்டுகோலாக அமையும். புத்திசாலிகள் பின்பற்றும் 8 பழக்கவழக்கங்களை இங்கே பட்டியலிடுகிறோம்.

    1. ஆர்வம்

    புத்திசாலிகள் அனைத்துவிதமான விஷயங்களையும் அலசி ஆராய்வதற்கு ஆர்வம் காட்டுவார்கள். அதிலும் சந்தையிலும், தொழில்நுட்ப உலகிலும் எது புதிதாக அறிமுகமானாலும் அதனை பற்றி அறிந்து கொள்வதற்கு ஆர்வம் கொள்வார்கள்.

    2. வாசிப்பு

    புத்திசாலிகள் பலரும் புத்தகப்பிரியர்களாக இருப்பார்கள். அனைத்து துறை சார்ந்த புத்தகங்களையும் படிக்க விரும்புவார்கள். வாசிப்புப்பழக்கம் சிந்தனையை விரிவுபடுத்தும். அறிவை வளர்த்தெடுக்கும் என்பதை அறிந்து செயல்படுவார்கள்.

    3. விமர்சன சிந்தனை

    எந்தவொரு விஷயத்தையும் ஆழமாக அலசி ஆராய்ந்து, விமர்சனம் செய்யும் சிந்தனை திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். எந்தவொரு கருத்தையும் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதற்கு முன்பு பகுப்பாய்வு செய்வார்கள். ஏதேனும் சந்தேகம் எழுந்தால் தயங்காமல் கேள்வி எழுப்புவார்கள். தங்கள் சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும் வரை தேடுதலை தொடர்வார்கள்.

    4. தொடர் கற்றல்

    புத்திசாலிகளின் முக்கிய குணங்களில் ஒன்று தொடர்ச்சியாக கற்பது. அவர்களிடத்தில் இயல்பாகவே கற்றல் ஆர்வம் இருக்கும். தொடர்ந்து கற்று புதிய திறன்களை வளர்த்துக்கொள்வார்கள்.

    5. பெருமை பேசுவதில்லை

    புத்திசாலிகள் தங்களது சாதனைகள் மற்றும் திறமைகளை பற்றி மற்றவர்களுக்கு முன்னால் ஒருபோதும் தற்பெருமை பேச மாட்டார்கள். அடக்கத்துடனும், பணிவுடனும் நடந்து கொள்வார்கள். அதுவே அவர்களை புத்திசாலி நபர்களாக ஆக்குகிறது.

    6. சுய முன்னேற்றம்

    புத்திசாலிகள் முற்போக்கு சிந்தனை கொண்டவர்கள். எப்போதும் புதிய திறன்களை கற்றுக் கொள்வதற்கு தயாராக இருப்பார்கள். சுய முன்னேற்றத்தின் மீது நம்பிக்கை கொண்டிருப்பார்கள். தங்களை தாங்களே விமர்சித்து நிறை, குறைகளை சரி செய்து வாழ்க்கையில் முன்னேற்றுவதற்கு திட்டமிடுவார்கள்.

    7. சுய பாதுகாப்பு

    புத்திசாலிகள் நம்பிக்கையான அணுகுமுறையை பின்பற்றுவார்கள். சுய பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிப்பார்கள். நெருக்கடியான சூழலிலும் தங்களை தாங்களே தற்காத்துக்கொள்வதற்கான வழிமுறைகளை சிந்தித்து அதற்கேற்ப செயல்படுவார்கள்.

    8. தோல்வியில் பாடம்

    புத்திசாலிகள் ஏதேனும் தவறு செய்துவிட்டால் அதையே நினைத்து பயப்படமாட்டார்கள். அந்த தவறை சரி செய்வது எப்படி என்றே சிந்திப்பார்கள். தோல்விகளை ஒரு கற்றல் அனுபவமாக எடுத்துக்கொள்வார்கள். அதுவும் அவர்களை சிறந்த நபராக விளங்க செய்கிறது.

    ×