என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மொறு மொறு ஸ்நாக்"
- குறைவான நேரத்தில் ஒரு மொறு மொறு மொறு ஸ்நாக் ரெசிபி.
- குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்புவர்
உருளைக்கிழங்கில் சமைக்கும் அனைத்து ரெசிபிகளையும் நாம் விரும்பி சாப்பிடுவோம். இப்போது உருளைக்கிழங்கை வைத்து குறைவான நேரத்தில் ஒரு மொறு மொறு மொறு ஸ்நாக் ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம். இந்த ரெசிபி மாலை நேரத்தில் டீயுடன் சாப்பிட பெஸ்ட் ஸ்நாக் ரெசிபியாக இருக்கும். மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த ஸ்நாக்கை விரும்பி சாப்பிடுவார்கள். வாங்க இந்த ஸ்நாக் ரெசிப்பி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு- 3
சில்லி ஃப்ளேக்ஸ்- ஒரு ஸ்பூன்
சாட் மசாலா அரை ஸ்பூன்
கொத்தமல்லித்தழை- ஒரு கைப்பிடி
உப்பு- சுவைக்கேற்பவாறு
மிளகுத்தூள்- ஒரு ஸ்பூன்
தனியா தூள்- கால் ஸ்பூன்,
செய்முறை:
உருளைக்கிழங்கை வேகவைத்து நன்கு மசித்துக் கொள்ள வேண்டும். இதனுடன் சில்லி ஃப்ளேக்ஸ், சாட் மசாலா, கொத்தமல்லித்தழை, உப்பு, மிளகுத்தூள், தனியா தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசைந்து வடை போல் தட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது இரண்டு பிரட்டை எடுத்து தோசைக்கல்லில் சேர்த்து டோஸ்ட் செய்ய வேண்டும். இந்த பிரட் பொன்னிறமாக மாறும் அளவு டோஸ்ட் செய்து எடுத்து ஆற விடவும். பின்னர் இந்த பிரட்டை துண்டுகளாக்கி மிக்சி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த துகளை ஒரு தட்டுக்கு மாற்றிக் கொள்ளவும்.
வேறொரு கிண்ணத்தில் இரண்டு ஸ்பூன் சோளமாவு சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து அரை டேபிள் ஸ்பூன் மிளகுத்தூள், கால் கப் தண்ணீர் சேர்த்து நன்கு கட்டியில்லாமல் கரைத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது நாம் தயாரித்த வடையை இதனுள் சேர்த்து எடுத்து பின் இதை பிரட் துகளில் புரட்டி எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும். அவ்வளவு தான் சுவையான உருளைக்கிழங்கு ஸ்நாக்ஸ் தயார். இந்த ஸ்நாக் சாப்பிடுவதற்கு மொறு மொறுவென இருக்கும்.