search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருப்பு உளுந்து"

    • கருப்பட்டியை தூளாக்கி அதனுடன் தண்ணீர் சேர்த்து கரைத்து வடிகட்டிக்கொள்ளவும்.
    • அரைத்த உளுந்து மாவுடன், ஏலக்காய் தூள், தேங்காய் துருவல் சேர்க்கவும்.

    கருப்பு உளுந்தில் கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் இரும்புச் சத்துக்கள் அதிகம் உள்ளன. கருப்பு உளுந்து கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் எலும்புகள், மூட்டுகளின் வலிமை அதிகரிக்கும்.

    தேவையான பொருட்கள்:

    கருப்பு உளுந்து - 1 கப்

    பொட்டுக்கடலை - 1/4 கப்

    கருப்பட்டி - 3/4 கப்

    ஏலக்காய் தூள் - 1/2 ஸ்பூன்

    தேங்காய்த்துருவல் - 2 ஸ்பூன்

    நெய் 2 ஸ்பூன்

    செய்முறை:

    அடிகனமான கடாயில் கருப்பு உளுந்தை போட்டு நன்கு வறுத்து, அதனுடன் பொட்டுக்கடலையை சேர்த்து இறக்கி விடவும். ஆறியவுடன் மிக்ஸியில் நன்கு அரைத்து கொள்ளவும்.

    கருப்பட்டியை தூளாக்கி அதனுடன் தண்ணீர் சேர்த்து கரைத்து வடிகட்டிக்கொள்ளவும்.

    அரைத்த உளுந்து மாவுடன், ஏலக்காய் தூள், தேங்காய் துருவல் சேர்த்து, நெய் விட்டு உருண்டைகளாக பிடித்தால் சத்தான் கருப்பு உளுந்து லட்டு தயார்.

    ×