search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொரிய உணவுகள்"

    • கொரிய உணவு மேஜையில் அதிகளவில் இருப்பது காய்கறிகள் தானாம்.
    • வெளியில் சாப்பிடுவதை விட, வீட்டிலேயே சாப்பிடுவார்கள்.

    அழகிலும், ஆரோக்கியத்திலும் முன்னோடியாக இருக்கும் கொரிய நாட்டு பெண்களின் ஆரோக்கிய ரகசியம் அவ்வளவாக யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

    இளைஞர்கள், இளம்பெண்கள், வயதான தாத்தா, பாட்டியாக இருந்தாலும் உடலை மிகவும் ஸ்லிம்மாகவே வைத்திருப்பார்கள். இதற்கு காரணம் அவர்களின் உணவுமுறைதான், அப்படி அவர்கள் என்ன ரகசிய உணவுமுறையை பின்பற்றுகிறாரார்கள் என்பதை தற்போது தெரிந்து கொள்ளலாம்.

    டயட் என்ற பெயரில் எந்த உணவினையும் ஒதுக்கி வைக்காத கொரிய பெண்கள் புரதம் தொடங்கி கார்ப்ஸ் முதல் கொழுப்புகள் வரை, ஆரோக்கியமான கொரிய உணவு அனைத்தையும் அவர்கள் சாப்பிடுகிறார்கள்.

    ஆனால் உணவுகளின் அளவில் கட்டுப்பாடு வைத்திருக்கும் இவர்கள் அளவாகவே சாப்பிடுவார்கள். அவர்கள் சாப்பாடுக்கு ஏற்ப உடல் செயல்பாடுகளையும் மேற்கொள்கின்றனர்.

    கொரிய உணவு மேஜையில் அதிகளவில் இருப்பது காய்கறிகள் தானாம். ஆம் காய்கறிகளை அதிகமாக விரும்பும் இவர்களின் உடல் எடையை ஸ்லிம்மாக வைத்திருக்கின்றதாம்.

    இவர்களின் பெரும்பாலான காய்கறிகள் நார்ச்சத்துள்ளவை, ஆரோக்கியமானவை மற்றும் குறைந்த கலோரி கொண்டவை என்பதால், இது எடை இழப்புக்கு பெரிதும் உதவுகிறது.

    கொரியப் பெண்களைப் பொறுத்தவரை, அவர்கள் வெளியில் சாப்பிடுவதை விட, வீட்டிலேயே சாப்பிடுவார்கள். தங்கள் உடலுக்கு நல்ல உணவுகளை நன்கு அறிந்திருப்பதால், அவர்கள் அதற்கேற்ப ஆரோக்கியமான உணவைத் தேர்வு செய்கிறார்கள்.

    இவர்களின் முக்கிய உணவாக கடல் உணவுகளை எடுத்துக் கொள்கின்றனர். ஆம் ஆரோக்கியத்திற்கு சிறப்பான கொழுப்பு நிறைந்த மீன்களைத் தவிர, கடற்பாசி ஒரு பொதுவான கொரிய உணவுப் பொருளாகும்.

    வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த இந்த கடற்பாசியில் நிறைய நார்ச்சத்து உள்ளதுடன், செரிமானத்திற்கும், நீண்ட காலம் இளமையாகவும் வைக்கின்றதாம்.

    ஆதலால் கடற்பாசியினை வழக்கமான உணவிலிருந்து சூப் வரை அனைத்திலும் சேர்க்கப்பட்டு இவர்கள் சாப்பிடுகிறார்களாம்.

    இறுதியாக கொரிய மக்களைப் பொருத்த வரை எங்கு சென்றாலும் நடப்பதையே விரும்புகின்றனராம். ஆம் பொது போக்குவரத்தினை பயன்படுத்துவதை விட, காலால் நடந்தே செல்வதை தான் வழக்கமாக வைத்துள்ளார்களாம்.

    ×