search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐபோன் 17 ஸ்லிம்"

    • ஐபோன் 15-ஐ விட அளவில் சிறியதாக இருக்கும்.
    • ஐபோன் ப்ரோ மேக்ஸ் வேரியண்டை விட அதிகமாக இருக்கும்.

    ஆப்பிள் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் புதிய ஐபோன் மாடல்களை அறிமுகம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளது. அந்த வகையில், இந்த ஆண்டு ஐபோன் 16 சீரிஸ் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

    இந்த நிலையில், ஆப்பிள் நிறுவனம் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்ய இருக்கும் ஐபோன் 17 சீரிஸ் பற்றிய விவரங்கள் வெளியாக துவங்கியுள்ளன. அதன்படி ஆப்பிள் நிறுவனம் 2025 ஆண்டு முதல் ஐபோன் சீரிசில் "பிளஸ்" மாடலை நிறுத்திவிட்டு, புதிதாக "ஸ்லிம்" மாடல் ஐபோனை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    புதிய ஸ்லிம் மாடல் அடுத்த ஆண்டு "ஐபோன் 17 ஸ்லிம்" எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இது ஆப்பிள் அறிமுகம் செய்யும் புதிய ஐபோன்களில் விலை உயர்ந்த மாடலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில், இதன் விலை ஐபோன் ப்ரோ மேக்ஸ் வேரியண்டை விட அதிகமாக இருக்கும்.

    தற்போது வரை ஆப்பிள் அறிமுகம் செய்யும் புதிய ஐபோன்களில் ப்ரோ மேக்ஸ் வேரியண்ட் விலை தான் அதிகளவில் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 15 பிளஸ் விலை அதன் பேஸ் வேரியண்ட் ஐபோன் 15 மாடலை விட ரூ. 10 ஆயிரம் அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டது. ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் விலை இதைவிட ரூ. 70 ஆயிரம் வரை அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

     

    கோப்புப்படம்

    கோப்புப்படம்


    சமீபத்தில் நடைபெற்ற ஆப்பிள் "லெட் லூஸ்" நிகழ்ச்சியில் அந்நிறுவனம் இதுவரை தான், அறிமுகம் செய்ததில் மிக மெல்லிய ஐபேட் ப்ரோ மாடலை அறிமுகம் செய்தது. இதே பாணியை ஐபோன் மாடல்களிலும் பின்பற்ற ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆப்பிள் வெளியிட்டதில் மிகவும் மெல்லிய ஐபோன்களில் ஒன்றாக ஐபோன் 6 மாடல் இருந்தது.

    ஐபோன் 6 மாடல் அளவில் 6.9 மில்லிமீட்டர் அளவு தடிமனாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டது. அந்த வரிசையில், ஐபோன் 17 ஸ்லிம் மாடல் ஆப்பிள் டிசைனிங்கில் ஐபோன் X அளவுக்கு அசாத்திய அப்டேட்களை கொண்டிருக்கும் என்று தெரிகிறது. ஐபோன் X மாடலில் ஆப்பிள் நிறுவனம் நாட்ச் மற்றும் பெசல் லெஸ் டிசைன் உள்ளிட்டவைகளை அறிமுகம் செய்து இருந்தது, நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இது புதிய டிரெண்ட் ஆகவும் மாறியது.

    இந்த வரிசையில், ஐபோன் 17 ஸ்லிம் மாடல் இதுவரை வெளியான ஐபோன் மாடல்களில் மிக மெல்லிய டிசைன் கொண்டிருக்கும் என்றும் இதில் அலுமினியம் சேசிஸ் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. எனினும், இந்த ஐபோனின் டிசைன் பணிகள் இன்னும் முழுமை பெறவில்லை என்று தெரிகிறது. இந்த மாடல் ஐபோன் 15-ஐ விட அளவில் சிறியதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

    ஐபோன் பிளஸ் மாடல்களின் விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறாது தான், இந்த மாடல் நிறுத்தப்படுவதற்கு காரணமாக இருக்கும் என்று தெரிகிறது. இதற்கு மாற்றாக அறிமுகம் செய்யப்படும் "ஸ்லிம்" மாடல் பயனர்களுக்கு புதிதான கண்ணோட்டத்தை கொடுக்கும் என்றும் இதன் மூலம் பலர் புதிய ஐபோன் ஸ்லிம் மாடலை வாங்க வாய்ப்புகள் அதிகம் ஆகும்.

    ×