search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏ.ஆர் ரஹ்மான்"

    • ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் "காதலிக்க நேரமில்லை".
    • கேவ்மிக் ஆரி ஒளிப்பதிவில் உருவாகும் இப்படத்திற்கு லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பை மேற்கொள்கிறார்.

    ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் இயக்குனர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் "காதலிக்க நேரமில்லை".

    ஜெயம் ரவி, நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க அவர்களுடன் யோகி பாபு, லால், வினய், லக்ஷ்மி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ, TJ பானு, ஜான் கோகேன், வினோதினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    கேவ்மிக் ஆரி ஒளிப்பதிவில் உருவாகும் இப்படத்திற்கு லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பை மேற்கொள்கிறார்.

    அனைவரும் மிகவும் எதிர்ப்பார்த்த படத்தின் முதல் பாடல் நாளை மாலை 5

    மணிக்கு  வெளியாகவுள்ளது என படக்குழு ஒரு புது ப்ரோமோ வீடியோவை வெளியீட்டு அறிவித்துள்ளனர். இப்பாடலிற்கு `என்னை இழுக்குதடி' என தலைப்பு வைத்துள்ளனர்.

    காதலிக்க நேரமில்லை திரைப்படத்தின் பாடல், டீசர் மற்றும் டிரைலர் விரைவில் அறிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விவாகரத்து முடிவில் இருக்கும் சமயம் சண்டை, சச்சரவு, தகராறு, மோதல் என அரசல் புரசலாக ஏதாவது ஒரு தகவல் வெளியாகும்.
    • ஏ.ஆர் ரகுமான் நேற்று பதிவிட்ட எக்ஸ் பதிவில் #arrsairabreakup என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி இருந்தார்.

    தமிழ் சினிமாவில் தனுஷ், ஜெயம் ரவி, ஜி.வி.பிரகாஷ் என நட்சத்திரங்களின் விவாகரத்து வரிசையில் தற்போது இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும் இணைந்திருப்பது ரசிகர்களுக்கு மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.

    எப்போதுமே சினிமா பிரபலங்கள் விவாகரத்து முடிவில் இருக்கும் சமயம் சண்டை, சச்சரவு, தகராறு, மோதல் என அரசல் புரசலாக ஏதாவது ஒரு தகவல் வெளியாகும். ஆனால் ஏ.ஆர்.ரகுமான் - சாய்ரா பானு இடையே இதுவரை எந்த சண்டையும், வாக்குவாதமும் ஏற்பட்டதாக யாருமே அறியாத நிலையில், திடீரென சாய்ரா பானுவின் இந்த பிரிவு அறிவிப்பு நேற்று இந்திய சினிமாவிலேயே பரபரப்பை ஏற்படுத்தியது. கிட்டத்தட்ட 29 ஆண்டு கால திருமண வாழ்க்கை முறிந்துள்ளது.

    ஏ.ஆர் ரகுமான் நேற்று பதிவிட்ட எக்ஸ் பதிவில் #arrsairabreakup என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி இருந்தார். இதற்கு நெட்டிசன்கள் அனைவரும் கமெண்டுகளை பதிவு செய்து வருகின்றனர். இந்த மாதிரி ஒரு சூழ்நிலைக்கு யார் ஹேஷ்டேகுகளை உருவாக்குவார்கள். எக்ஸ் பக்கத்தை பார்க்கும் அட்மினை வேலையை விட்டு நீக்குங்கள், விவாகரத்துக்கு ஹேஷ்டாக்கா என அவர்களது கருத்தை பதிவிட்டு வருகின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இசை துறையில் மிக முக்கியமான நபராக இருப்பவர் இசை புயல் ஏ.ஆர் ரஹ்மான்.
    • ஏ.ஆர் ரஹ்மானுக்கு ஐஐடி மெட்ராஸ் பல்கலை கழகத்தில் புதுமைக்கான விருதை வழங்கியது.

    இசை துறையில் மிக முக்கியமான நபராக இருப்பவர் இசை புயல் ஏ.ஆர் ரஹ்மான். இந்திய திரையுலகில் பல வெற்றி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார் ஏ.ஆர் ரஹ்மான்.

    இந்தாண்டு வெளியான ஆடுஜீவிதம், மைதான், ராயன், அயலான் இவர் இசையமைத்த திரைப்படங்கள் மிகப்பெரியளவில் ஹிட்டானது.

    இந்நிலையில் ஏ.ஆர் ரஹ்மானுக்கு ஐஐடி மெட்ராஸ் பல்கலை கழகத்தில் புதுமைக்கான விருதை வழங்கியது. சமீபத்தில் ஏ.ஆர் ரஹ்மான் லே மஸ்க் என்ற ஒரு விர்சுவல் ரியாலிட்டி திரில்லர் திரைப்படத்தை இயக்கினார். இப்படத்தை இயக்கியதற்காக இந்த விருதை அவருக்கு வழங்கியுள்ளனர்.

    இந்த விருதை பெற்ற அவர் " சென்னையில் விருது வாங்குவது எனக்கு மிகவும் ஸ்பெஷலான ஒன்று. விர்சுவல் ரியாலிட்டி திரைப்படத்தை இயக்கிய மற்றவர்கள் செய்த தவறை இப்படத்தில் செய்யக்கூடாது என தெளிவாக இருந்தோம். இப்படத்தை இயக்க எங்களுக்கு ஸ்பெஷலான கேமரா தேவைப்பட்டது. நான் ஒவ்வொரு முறை மைக்ரோசாஃப்ட் மற்றும் இண்டெல் போன்ற பிராண்டுகளை பயன்படுத்தும்பொழுது. ஏன் அனைத்து பிராண்டுகளும் வெளிநாட்டில் இருந்து உருவாக்கப்படுகிறது. ஏன் இந்தியாவில் இருந்து வருவதில்லை என?. இதை அரசு கவனிக்க வேண்டும்." என கூறியுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

    • அதர்வா நடிப்பில் அடுத்து உருவாகி இருக்கும் திரைப்படம் டிஎன்ஏ.
    • படத்தில் இடம்பெற்ற 5 பாடல்களுக்கு 5 திறமையான இசையமைப்பாளர்கள் இசையமைத்துள்ளார்கள்.

    அதர்வா நடிப்பில் அடுத்து உருவாகி இருக்கும் திரைப்படம் டிஎன்ஏ. இப்படத்தில் நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார். இதற்கு முன் ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர், ஃபர்ஹானா போன்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    படத்தில் இடம்பெற்ற 5 பாடல்களுக்கு 5 திறமையான இசையமைப்பாளர்கள் இசையமைத்துள்ளார்கள்.

    பலவிதமான எமோஷன்ஸ், எனர்ஜி மற்றும் ரசிக்கக் கூடிய பல தருணங்களை இத்திரைப்படம் கொண்டுள்ளது. இதை காட்சி அனுபவமாக ரசிகர்களுக்கு மேம்படுத்தி கொடுக்க இசையமைப்பாளர் ஜிப்ரானின் வசீகரிக்கும் பின்னணி இசையும் படத்தில் அமைந்துள்ளது என்பதை படத்தின் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

    தற்போது, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கி இருப்பதால் படத்தின் திரையரங்கு வெளியீட்டு தேதியை படக்குழு விரைவில் வெளியிடும். க்ரைம் ஆக்ஷன் கதையாக உருவாகி இருக்கும் 'டிஎன்ஏ' திரைப்படத்தில் நம்பிக்கைக்குரிய நடிகர்கள் மற்றும் சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளனர்.

    படத்தின் முதல் பாடலான கண்ணே கனவே பாடல் வரும் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது என படக்குழு புதிய போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். இப்பாடலை இசை புயல் ஏ.ஆர் ரஹ்மான் அவரது எக்ஸ் பக்கத்தில் நாளை வெளியிடவுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • லிடியன் நாதஸ்வரம் ஏ . ஆர். ரகுமானின் கே. எம். இசைப் பள்ளியில் பயின்றவர்.
    • லிடியன் நாதஸ்வரம் மோகன்லால் இயக்கும் 'பரோஸ்' படத்திற்குப் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்

    லிடியன் நாதஸ்வரம் ஏ . ஆர். ரகுமானின் கே. எம். இசைப் பள்ளியில் பயின்றவர். தனது இசைத் திறமைக்காக உலக அளவில் பாராட்டப்பட்டவர். உலக அளவில் தனது திறமையை வெளிப்படுத்தி 2019-ல் சிறந்த வெளிப்பாட்டாளருக்காண ஏழு கோடி ரூபாய் பரிசைப் பெற்றவர்.

    அவர் பியானோ, டிரம் போன்ற பல்வேறு இசைக்கருவிகள் வாசிக்கத் தெரிந்தவர்.

    அவரது ஒருங்கிணைப்பில் சென்னை டிரம் பெஸ்ட் 2024 என்கிற இசை விழா சென்னை காமராஜர் அரங்கத்தில் அக்டோபர் 13ஆம் தேதி நடைபெற உள்ளது.சர்வதேச அளவில் புகழ்பெற்ற டிரம்மர்கள் ஆறுபேர் வரவிருக்கிறார்கள்.

    விழா பற்றி லிடியன் பேசும் போது,

    "இந்த விழாவில் உலக அளவில் புகழ்பெற்ற டிரம்ஸ் கலைஞர் டேவ் வெக்கில் பங்கேற்கிறார்.

    ஜினோ பேங்க்ஸ், ஸ்டீவன் சாமுவேல் தேவசி போன்றோருடன் சென்னையைச் சேர்ந்த சித்தார்த் நாகராஜ்,திறமையுள்ள ஆனால் பலரால் அறியப்படாத கலைஞர்கள் பங்கேற்க இருக்கிறார்கள்.

    இவ்விழாவில் 32 கிராமிய விருது வாங்கிய சிக்காரியோவின் புகழ்பெற்ற வெற்றி பெற்ற இசை வடிவங்களை வாசிக்க இருக்கிறார்கள்.

    மூன்று மணி நேரம் நடக்கும் இந்த அதிரடி இசை விழாவில் பல்வேறு பிரமுகர்கள் எதிர்பாராத வருகை தரவிருக்கிறார்கள்'' என்றார்.

    லிடியன் நாதஸ்வரம் மோகன்லால் இயக்கும் 'பரோஸ்' படத்திற்குப் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார் .இது ஒரு 3டி படமாகும். பரோஸ் ஐந்து மொழிகளில் தயாராகிறது.

    அதுமட்டுமல்லாமல் லிடியன் நாதஸ்வரம் ஓர் உலக சாதனை முயற்சியில் இறங்கி இருக்கிறார். அது பற்றி அவர் பேசும்போது,

    " நானும் என் அக்கா அமிர்தவர்ஷினியும் சேர்ந்து 1330 திருக்குறளுக்கு இசையமைத்துப் பாடி உருவாக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறோம்.

    ஏராளமான பிரமுகர்கள் குரல் கொடுத்திருக்கிறார்கள். மலையாள நடிகர் மோகன்லால் கூட ஒரு திருக்குறளுக்குக் குரல் கொடுத்திருக்கிறார்.இந்த முயற்சி விரைவில் நிறைவு பெற்று வெளிவர உள்ளது.

    ஓமன், மலேசியா, சிங்கப்பூரிலிருந்தெல்லாம் பார்வையாளர்கள் வருகிறார்கள்.அனைவரும் வந்து ஆதரவு கொடுங்கள். இந்த விழாவை முன்னிட்டு திரட்டப்படும் நிதி பல்வேறு சமூக சேவைகளுக்குப் பயன்படுத்தப்பட உள்ளது ''என்றார். இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் Book my showவில் கிடைக்கும்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் படம் 2010-ல் வெளியாகி பெரிய வெற்றி பெற்றது.
    • ஷங்கர் அதை கைவிடாமல் சில வருடங்களுக்கு பிறகு ரஜினிகாந்தை வைத்து அந்த படத்தை இயக்கினார்.

    ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் படம் 2010-ல் வெளியாகி பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் முதலில் கமல்ஹாசனை நடிக்க வைக்க ஷங்கர் அணுகியதாகவும் சில காரணங்களால் படத்தில் இருந்து அவர் விலகியதால் ரஜினிக்கு கைமாறியதாகவும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இதனை கமல்ஹாசனே தெரிவித்து உள்ளார். இதுகுறித்து கமல்ஹாசன் கூறும்போது, ''எந்திரன் படத்தை எடுக்க நானும் ஷங்கரும் 1990-களில் முயற்சி செய்தோம். இந்த படத்துக்காக எனக்கு மேக்கப் டெஸ்ட்டும் எடுக்கப்பட்டது.

    ஆனால் படத்தின் பட்ஜெட் மற்றும் சம்பளம் போன்ற சில பிரச்சினைகள் காரணமாக அவ்வளவு பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக அந்த படத்தை எடுப்பது பாதுகாப்பு அல்ல என்று தோன்றியது. அதனால் நான் நடிக்கவில்லை.

    ஆனால் ஷங்கர் அதை கைவிடாமல் சில வருடங்களுக்கு பிறகு ரஜினிகாந்தை வைத்து அந்த படத்தை இயக்கினார். அது பெரிய வெற்றி பெற்றது'' என்றார்.

    அதன் பின் எந்திரன் 2.0 படத்தில் முதலில் கமல்ஹாசன் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்க வேண்டியது எனவும், அப்போது கமல் மற்ற படங்களில் கமிட் ஆயிருந்ததால் அவரால் நடிக்க இயலவில்லை. என்று சமீபத்தில் நடந்த நேர்காணலில் கூறியுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் இயக்குனர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகும் திரைப்படம் "காதலிக்க நேரமில்லை"
    • கேவ்மிக் ஆரி ஒளிப்பதிவில் உருவாகும் இப்படத்திற்கு லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பை மேற்கொள்கிறார்.

    ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் இயக்குனர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகும் திரைப்படம் "காதலிக்க நேரமில்லை"

    ஜெயம் ரவி, நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க அவர்களுடன் யோகி பாபு, லால், வினய், லக்ஷ்மி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ, TJ பானு, ஜான் கோகேன், வினோதினி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

    கேவ்மிக் ஆரி ஒளிப்பதிவில் உருவாகும் இப்படத்திற்கு லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். இணை தயாரிப்பு M.செண்பகமூர்த்தி, R.அர்ஜுன் துரை.

     சில நாட்களுக்கு முன் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் படக்குழு கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படம் சமூகவலைத்தளங்களில் பரவலாக பரவியது. தற்பொழுது படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. படத்தின் ஆடியோ உரிமையை டி சீரிஸ் என்ற பிரபல நிறுவனம் வாங்கியுள்ளது.

    கிருதிக்கா உதயநிதி இதற்முன் இயக்கிய வணக்கம் சென்னை திரைப்படத்தை போல் இப்படமும் வெற்றி பெரும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் நித்யா மேனனுக்கும் தனுஷுக்கும் இடையே ஆன கெமிஸ்டிரி வொர்க் அவுட் ஆனதுபோல் ஜெயம் ரவியுடனும் வொர்க் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    காதலிக்க நேரமில்லை திரைப்படத்தின் பாடல், டீசர் மற்றும் டிரைலர் வெளியீடு தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் இயக்குனர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகும் திரைப்படம் "காதலிக்க நேரமில்லை"
    • 'காதலிக்க நேரமில்லை' முதல் பார்வை போஸ்டர் வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்த நிலையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவு பெற்றதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்

    ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் இயக்குனர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகும் திரைப்படம் "காதலிக்க நேரமில்லை"

    ஜெயம் ரவி, நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க அவர்களுடன் யோகி பாபு, லால், வினய், லக்ஷ்மி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ, TJ பானு, ஜான் கோகேன், வினோதினி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

    கேவ்மிக் ஆரி ஒளிப்பதிவில் உருவாகும் இப்படத்திற்கு லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். இணை தயாரிப்பு M.செண்பகமூர்த்தி, R.அர்ஜுன் துரை

     

    'காதலிக்க நேரமில்லை' முதல் பார்வை போஸ்டர் வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்த நிலையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவு பெற்றதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அதை கொண்டாடும் விதமாக ஷூட்டிங் ஸ்பாட்டில் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.

     

    காதலிக்க நேரமில்லை திரைப்படத்தின் பாடல், டீசர் மற்றும் டிரைலர் வெளியீடு தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×