என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "உலக சராசரி வெப்ப நிலை"
- ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் ஆண்டோனியோ குட்ரெஸ் கவலையளிக்கும் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
- கடந்த மே மாதம் உலகின் மிக வெப்பமான மாதமாக பதிவாகியுள்ளது.
நிலை மாற்றத்தின் தாக்கம் உலகம் மமுழுவதும் நேரடியாக பாதிப்புகளை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. வழக்கத்துக்கு மாறாக அதிக மழையும் அதிக வெயிலும் மனிதர்களை பாதிக்கத் தொடங்கியுள்ளன. லத்தீன் அமெரிக்க நாடுகள், துவபாய், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் இருந்து ஆபிரிக்க நாடுகளில் ஏற்பட்டுள்ள வறட்சி, இந்தியாவில் அதிகரித்து வரும் வெப்ப அலை ஆகியவை இனி வரவிருக்கும் பேராபத்துகளுக்கான முன்னெச்சிரிக்கையாகும்.
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு வரலாறு காணாத வெயில் பதிவாகியுள்ளது. ஹீட் ஸ்ட்ரோக்கால் இந்த வருடத்தில் மட்டும் 250 க்கும் அதிகமானோர் இந்தியாவில் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் ஆண்டோனியோ குட்ரெஸ் கவலையளிக்கும் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
உலக சுற்றுச்சூழல் சூழல் தினமான இன்றுகுட்ரஸ் தனது உரையில், "கடந்த மே மாதம் உலகின் மிக வெப்பமான மாதமாக பதிவாகியுள்ளது. கடந்த 12 மாதங்களாக வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. அடுத்த 5 வருடத்துக்குள் உலகின் சராசரி வெப்பநிலை 1.5 டிகிரி செல்ஸியஸை (2.7 டிகிரி பாரன்ஹீட்) கடக்க 80 சதவீதம் வாய்ப்புள்ளது" என்று உலக வானிலை நிறுவனத்தின் கணிப்பை மேற்கோள் காட்டி பேசியுள்ளார்.
முன்னதாக பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் 2030 வரை உலகின் சாராசரி வெப்ப நிலை 1.5 செல்சியஸை கடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.