என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை பைக் சாகசம்"

    • பைக்கில் சாகசம் செய்து வரும் இளைஞர்களை போலீசார் கைது செய்து வரும் நிலையும் தொடர்ந்து வருகிறது.
    • இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவிட்டுள்ள இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.

    பெற்றோரை நச்சரித்து லட்சங்களை கொட்டி வாங்கும் இருசக்கர வாகனங்களில் இளைஞர்கள் இரவு நேரங்களில் ஆட்கள் நடமாட்டம் குறைந்த சாலையில் மேற்கொள்ளும் சாகச பயணம் பார்ப்போரை பதற வைப்பது சென்னையில் இயல்பாகிவிட்டது.

    ரேஸ் என்ற பெயரில் நடத்தப்படும் இதுபோன்ற ஆபத்தான பயணங்களை தடுக்க போலீசார் கடிவாளம் போட்டாலும், அவர்கள் கண்களை மறைத்து இரவு நேரங்களில் சாலையில் தீப்பொறிகளை பறக்கவிட்டவாறு நடத்தும் சாகசங்களால் பலர் உயிரையும் பறிகொடுத்துள்ளனர்.

    பைக்கில் சாகசம் செய்து வரும் இளைஞர்களை போலீசார் கைது செய்து வரும் நிலையும் தொடர்ந்து வருகிறது. போலீசார் பேச்சு கேட்காமல் உள்ளவர்களின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    இதைதொடர்ந்து சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை சாலையில் இளைஞர் ஒருவர் பைக் சாகசத்தில் ஈடுப்பட்டுள்ளார். இன்ஸ்டாகிராமில் தான் செய்த பைக் சாகசத்தை வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

    இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவிட்டுள்ள இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். போக்குவரத்தை விதிகளை மீறியும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையிலும் பைக் சாகசம் செய்துள்ளார்.

    ஏற்கனவே சாலை விபத்துகளில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பு இதனை தடுத்து நிறுத்த வேண்டும். பொறுப்பில்லாமல் இவ்வாறு வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் செயல்படும் இளைஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.



    ×