என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "காலம் உள்ளவரை கலைஞர்"
- நவீன கண்காட்சியகத்தை இராஜா அண்ணாமலை மன்றத்தில் இன்று கண்டுகளித்தோம்.
- கழகத்தின், கலைஞரின், கழகத் தலைவரின் உழைப்பை நம் கண் முன்னே நிறுத்துகின்றன.
முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஏற்பாட்டில் ராஜா அண்ணாமலை மன்றத்தில் மாபெரும் பிரம்மாண்ட மெய்நிகர் அரங்கம், கலைஞரை மீண்டும் நேரில் சந்திக்கும் ஆச்சர்ய அனுபவத்தை தூண்டும் வகையில் வரலாற்று சிறப்புமிக்க "காலம் உள்ளவரை கலைஞர்" நவீன கண்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று பார்வையிட்டார்.
இந்நிலையில அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று கண்காட்சியை பார்வையிட்டார். இந்த கண்காட்சியின் சிறப்புகளை தனது எக்ஸ் தளபதிவில் கூறிப்பிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது,
சென்னை முதல் குமரி வரை நவீன தமிழ்நாட்டைச் செதுக்கிய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் வாழ்வை நம் கண் முன் விரிக்கும் 'காலம் உள்ளவரை கலைஞர்' நவீன கண்காட்சியகத்தை இராஜா அண்ணாமலை மன்றத்தில் இன்று கண்டுகளித்தோம்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் மெழுகு சிலை செல்ஃபி பாயின்ட், Virtual Reality தொழில்நுட்பத்துடன் கூடிய கலைஞர் அவர்களின் குறும்படம், அவரது வாழ்க்கையை விவரிக்கும் புகைப்படக் கண்காட்சி ஆகியவை கழகத்தின், கலைஞரின், கழகத் தலைவரின் உழைப்பை நம் கண் முன்னே நிறுத்துகின்றன.
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தக் கண்காட்சியைக் கண்கொள்ளா காட்சியாக, சிறப்புற ஏற்பாடு செய்த சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான அண்ணன் சேகர்பாபு அவர்களுக்கு என் அன்பும் வாழ்த்துகளும்! என்று கூறியுள்ளார்.
சென்னை முதல் குமரி வரை நவீன தமிழ்நாட்டைச் செதுக்கிய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் வாழ்வை நம் கண் முன் விரிக்கும் 'காலம் உள்ளவரை கலைஞர்' நவீன கண்காட்சியகத்தை இராஜா அண்ணாமலை மன்றத்தில் இன்று கண்டு களித்தோம்.
— Udhay (@Udhaystalin) June 10, 2024
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் மெழுகு சிலை செல்ஃபி பாயின்ட், Virtual… pic.twitter.com/W2NcZ8SQjr
- நூற்றுக்கும் மேற்பட்ட அரிய வகை புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
- இங்கு எடுக்கப்படும் செல்பி புகைப்படங்கள் குறுஞ்செய்தியாக பார்வையாளர்களுக்கு உடனுக்குடன் அனுப்பி வைக்கப்படும்.
சென்னை
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஏற்பாட்டில் ராஜா அண்ணாமலை மன்றத்தில் மாபெரும் பிரம்மாண்ட மெய்நிகர் அரங்கம், கலைஞரை மீண்டும் நேரில் சந்திக்கும் ஆச்சர்ய அனுபவத்தை தூண்டும் வகையில் வரலாற்று சிறப்புமிக்க "காலம் உள்ளவரை கலைஞர்" நவீன கண்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பார்வையிட்டார்.
இப்பிரம்மாண்ட அரங்கத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின் வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்வுகளான "திருவாரூரில் ஆரம்பித்து சென்னை மெரினா கடற்கரை நினைவிடம் வரை" என நூற்றுக்கும் மேற்பட்ட அரிய வகை புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இக்கண்காட்சி அரங்கிற்குள் உள்ளே நுழைந்ததும் முப்பரிமாண தொழில்நுட்பத்துடன் கூடிய 40 வயது தோற்றத்துடன் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் நேரடியாக மக்களுடன் தமிழை போற்றி பேசும் கவிதை காவியம் இடம்பெற்றுள்ளது. "வாழும் வரலாறு முத்தமிழறிஞர் கலைஞரின் கதைப்பாடல்" காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
மற்றொரு அரங்கில் முத்தமிழறிஞர் கலைஞர் எப்போதும் அவர் விரும்பும் முரசொலி அலுவலகத்தில் உரையாடுவதுபோல் ஒரு 'செல்பி பாயிண்ட்' மெழுகு சிலை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு எடுக்கப்படும் செல்பி புகைப்படங்கள் குறுஞ்செய்தியாக பார்வையாளர்களுக்கு உடனுக்குடன் அனுப்பி வைக்கப்படும்.
மேலும், ஒரு அரங்கில் மெய்நிகர் தொழில்நுட்பத்துடன் 3டி கேமராவில் பதிவு செய்த கலைஞரின் வரலாற்று காவியமும் கலைஞர் வழியில் தொடரும் திராவிட அரசை மக்கள் போற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வரங்கம் திறக்கப்பட்ட நாள் முதல் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தோழமை கட்சி தலைவர்கள், திரைப்படக் கலைஞர்கள், ஆதீனங்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள், பொதுமக்கள், மற்றும் மாணவர்கள் ஆகியோர் வருகை தந்து கலைஞருடைய வாழ்க்கை வராலாறு, அரசியல் பயணம் போன்ற முக்கிய சாதனைகள் அனைத்தையும் விளக்கும் குறும்படங்கள், பல்வேறு துறைகளில் அவர் புரிந்த சாதனைகளை குறித்து ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.
"காலம் உள்ளவரை கலைஞர்" நவீன கண்காட்சியகத்தை இன்று பார்வையிட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இக்காண்காட்சியகத்தை ஏற்பாடு செய்த இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, குறும்படத் தயாரிப்புக்கு உதவிய கவிஞர் பா.விஜய், புகைப்படங்களை வடிவமைத்த அரசு ஆர்ட்ஸ் கோபி, மெய்நிகர் பரிமாண தொழில்நுட்பத்திற்கு உதவிய பாரதி மற்றும் கண்காட்சிக்கு உதவிய அனைவருக்கும் சால்வை அணிவித்து பாராட்டினார். இந்நிகழ்வின் போது பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆ. ராசா, பி. வில்சன், திரைப்பட இயக்குநர் கரு. பழனியப்பன், கவிஞர் பா.விஜய் ஆகியோர் உடனிருந்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்