search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புகையிழை"

    • இந்தியா, சீனாவில் அதிக அளவில் உயிரழப்புகள் ஏற்பட்டுள்ளது.
    • இந்தியாவில் 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் மட்டும் ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 400 பேர் உயிரிழந்துள்ளனர்.

    காற்று மாசுப்பாட்டால் 2021-ம் ஆண்டில் 81 லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர். இதில் இந்தியா, சீனாவில் அதிக அளவில் உயிரழப்புகள் ஏற்பட்டுள்ளது. சுகாதார விளைவுகள் நிறுவனம் மற்றும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் அமைப்பு சேர்ந்து இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

    அந்த அறிக்கையில் தெற்கு ஆசியாவில் இறப்புக்கான முக்கிய காரணமாக காற்று மாசுபாடு உள்ளதாகவும் அதைத் தொடர்ந்து இரத்தம் அழுத்தம், உணவு சரியாக சாப்பிடாமல் இருப்பது மற்றும் புகையிழை ஆகியவையும் உயிரிழப்புகளுக்கு காரணமாக உள்ளதாக அறிக்கை தெரிவித்துள்ளது.

    இந்த அறிக்கையின் படி, இந்தியாவில் 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் மட்டும் ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 400 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிற்கு அடுத்தப்படியாக நைஜீரியாவில் 1,14,100, பாகிஸ்தானில் 68,100, எத்தியோப்பியா 31,100, வங்காளதேசம் 19,100 குழந்தைகளும் காற்று மாசுபாட்டிற்கு உயிரிழந்துள்ளனர்.


    மொத்தமாக இந்தியாவில் 21 லட்சம் மற்றும் சீனாவில் 23 லட்சம் பேர் மரணமடைந்துள்ளனர். முந்தைய ஆண்டை காட்டிலும் 2021-ம் ஆண்டில் அதிக இறப்புகள் பதிவாகி உள்ளது. 100 கோடிக்கு அதிகமான மக்கள் தொகையை கொண்ட இந்தியா, சீனாவில் மட்டும் இறப்பு விகிதம் உலக அளவில் 54 சதவீகிதமாக உள்ளது.


    இதை தவிர மற்ற நாடுகளை பொறுத்தவரையில் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் பாகிஸ்தான் முதல் இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் 2 லட்சத்து 56 ஆயிரம் பேர், வங்காளதேசம் 2 லட்சத்து 36 ஆயிரத்து 300 பேர், மியான்மர் 1 லட்சத்து ஆயிரத்து 600 பேர் உயிரிழந்துள்ளனர்.

    தெற்கு ஆசியாவை பொறுத்தவரையில் இந்தோனேசியாவில் அதிகபட்சமாக 2 லட்சத்து 21 ஆயிரத்து 600 பேரும் வியட்நாம், பிலிப்பைன்ஸ் ஆகியவை முறையே 99,700, மற்றும் 98,209 பேர் உயிரிழந்துள்ளனர். ஆப்பிரிக்காவில் நைஜீரியா (2,06,700) மற்றும் எகிப்து (1,16,500) பேர் உயிரிழந்துள்ளனர்.

    ×