search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு விற்பனை"

    • டாஸ்மாக் நிறுவனம் முன் வைக்கும் காரணத்தை ஏற்று கொள்ள முடியாது.
    • பாமக கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததால் அத்திட்டம் கைவிடப்பட்டது.

    பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது,

    90 மி.லி. மதுவை விற்பனை செய்வதற்கான கருத்துரு தமிழக அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. டெட்ரா பாக்கெட்டுகளில் 90 மிலி மதுவை விற்பனை செய்வதற்காக டாஸ்மாக் நிறுவனம் முன் வைக்கும் காரணத்தை ஏற்று கொள்ள முடியாது.

    இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், தமிழ்நாடு மீட்டெடுக்க முடியாத கலாச்சார சீரழிவு படுகுழிக்கு தள்ளப்பட்டு விடும். ரூ. 140 கொடுத்து மது அருந்த முடியாதவர்கள், கள்ளச்சாராயத்தை வாங்கிக் குடிப்பதாக டாஸ்மாக் தரப்பில் கூறப்படுகிறது.

    இந்நிலையில் குறைந்த விலையில் டாஸ்மாக் நிறுவனமே மதுவை விற்பனை செய்தால் கள்ளச்சாராயத்தை தடுக்கலாம் என்று டாஸ்மாக் தரப்பில் கூறப்படுகிறது. இதை விட மிக மோசமான வாதம் இருக்க முடியாது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

    டாஸ்மாக் நிறுவனம் கடந்த ஆண்டு 90 மிலி மதுவை டெட்ரா பாக்கெட்டுகளில் அடைத்து விற்கும் திட்டத்தை அறிமுகம் செய்யத் திட்டமிட்டது. பாமக கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததால் அத்திட்டம் கைவிடப்பட்டது.

    தமிழ்நாடு முன்னிற்கு வரவேண்டும் என்றால் மது, கள்ளச்சாராயம், போதைபொருட்கள் ஆகியவற்றை அறவே ஒழிக்க வேண்டும். பூரண மதுவிலக்கை கொண்டு வரவேண்டும் எனவும், 90 மி.லி டெட்ரா பாக்கெட் திட்டத்தை கைவிட வேண்டும் என்வும் கூறியுள்ளார்.

    மேலும் இந்த திட்டத்தை கொண்டு வந்தால் அதை எதிர்த்து பா.ம.க மாபெரும் பேராட்டத்தை நடத்தும் என்று கூறியுள்ளார்.

    ×