search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மஹிந்திரா மராசோ"

    • 7-பேர் மற்றும் 8-பேர் என இருவித இருக்கை அமைப்புகளில் கிடைக்கிறது.
    • மஹிந்திரா நிறுவனம் எஸ்யுவி உற்பத்தியாளராக மாறும்.

    மஹிந்திரா நிறுவனத்தின் மராசோ எம்பிவி மாடல் கடந்த ஆறு ஆண்டுகளாக இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனினும், இந்த மாடல் சந்தையில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. கடந்த 2018 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மஹிந்திரா மராசோ மாடலின் விலை ரூ. 9.99 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 13.90 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    இந்த எம்பிவி மாடல் 7-பேர் மற்றும் 8-பேர் என இருவித இருக்கை அமைப்புகளில் கிடைக்கிறது. இந்த காரின் உற்பத்தி பணிகள் அடுத்த இரண்டு மாதங்களில் நிறுப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மஹிந்திரா நிறுவனம் இறுதியாக உற்பத்தி செய்த செடான் கார் மாடலாக வெரிட்டோ இருந்தது. தற்போது மராசோ விற்பனை நிறுத்தப்பட்டால், மஹிந்திரா நிறுவனம் எஸ்யுவி உற்பத்தியாளராக மட்டும் மாறும்.

    இந்திய பயணிகள் வாகன சந்தையில் எம்பிவி மாடல்கள் மட்டும் 16 சதவீதமாக உள்ளது. டொயோட்டா மற்றும் மாருதி சுசுகி நிறுவனங்கள் இந்த பிரிவில் முன்னணியில் உள்ள நிலையில், கியா மற்றும் ரெனால்ட் நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களில் விற்பனையை பகிர்ந்து கொள்கின்றன. இந்த வரிசையில் மஹிந்திராவின் மராசோ மாடல் விற்பனை தொடர்ந்து சரிவடைந்து வருகிறது.

    கடந்த ஜூன் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் மஹிந்திரா நிறுவனம் 44,793 மராசோ யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இது மாதாந்திர அடிப்படையில் 640 யூனிட்களாகவே இருக்கிறது. மராசோ மாடலுக்கு போட்டியாக இருக்கும் மாருதி 14,495 எர்டிகா யூனிட்களையும், கியா நிறுவனம் 4.412 கரென்ஸ் யூனிட்களையும் விற்பனை செய்துள்ளன.

    ×