search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "STARS திட்டம்"

    • இத்திட்டத்தை டாக்டர் ஜி.விஸ்வநாதன் அவர்கள், 2019 ஆம் ஆண்டு தொடங்கி வைத்தார்.
    • மாணாக்கர்களுக்கு தங்கும் இடம் மற்றும் உணவு ஏற்பாட்டுடன் 100% கட்டணமில்லா கல்வி வழங்கப்பட்டு வருகிறது.

    விஐடி போபால் பல்கலைக்கழகத்தில், ஊரகப் பகுதி மாணவர்கள் முன்னேற்றத்திற்கான ஆதரவு அளிக்கும் STARS திட்டத்தின் 24-25 கல்வி ஆண்டுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது.

    விஐடி போபால் பல்கலைக்கழகத்தில் வருங்காலத்தை உறுதி செய்கிற பல்வேறு படிப்புகளில் இந்த பெருமைமிகு திட்டத்தின் கீழ் சேர்ந்த அனைத்து புதிய மாணவர்களுக்கு சேர்க்கை கடிதங்கள் வழங்கப்பட்டன.

    ஊரகப் பகுதி மாணவர்கள் முன்னேற்றத்திற்கான ஆதரவு என்னும் இந்த திட்டத்தை மத்தியப் பிரதேசத்தின் ஊரகப்பகுதிகளைச் சேர்ந்த, உயர் கல்வி என்பது எட்டாக் கனியாக உள்ளது.

    அடித்தட்டு மக்களின் உயர்வைக் கருத்தில் கொண்டு அவர்களுக்குத் தரமான கல்வியை அளிக்கும் வகையில் விஐடி பல்கலைக்கழகத்தின் நிறுவனரும் வேந்தருமாகிய டாக்டர் ஜி.விஸ்வநாதன் அவர்கள், 2019 ஆம் ஆண்டு தொடங்கி வைத்தார்.

    அன்று முதல் மத்தியப் பிரதேசத்தின் அரசு பள்ளிகளில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றவர்களுக்கு, ஒவ்வொரு மாவட்டத்திற்கு ஒரு மாணவன், ஒரு மாணவிக்கு சேர்க்கை வழங்கப்பட்டு வருகிறது.

    மேற்குறிப்பிட்ட திட்டத்தின் கீழ், சேர்க்கப்படும் மாணவர்களுக்கு தங்கும் இடம் மற்றும் உணவு ஏற்பாட்டுடன் 100% கட்டணமில்லா கல்வி வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய விஐடி போபால் பல்கலைக்கழகத்தின் உதவி துணைத் தலைவர் காதம்பரி எஸ் விஸ்வநாதன் கூறியிருப்பதாவது:-

    மத்தியப் பிரதேசத்தின் ஊரகப்பகுதிகளைச் சேர்ந்த பிள்ளைகள் , மிகுந்த துன்பம் மிக்க சூழல்களில் வளர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.

    மாணவர்களுக்கு விஐடி போபால், கல்விக் கூடமாக மட்டுமல்ல அதற்கும் மேலான ஒன்றாகவே அவர்கள் மனங்களில் நிறைந்துள்ளது.

    STARS திட்டத்தின் வாயிலாக, மத்திய பிரதேசத்தின் ஆத்ம நிர்பர் என்னும் சுயசார்பு தொழில் நிறைவேற பங்களிப்பு வழங்கப்படும் என்றும் வருங்காலங்களில் உருவாகும் இத்தகைய பட்டதாரிகள் மத்தியப் பிரதேசத்தின் ஊரகப்பகுதிகளின் தோற்றத்தை மாற்றிக் காட்டி, பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்வார்கள்.

    STARS திட்டத்தின் கீழ் இதுவரை, ஊரக மத்தியப் பிரதேசத்தைச் சார்ந்த 175 மாணவர்கள் ( 100 மாணவர்களும் 75 மாணவிகளும்) பயனடைந்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×