என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஜிவி பிரகாஷ்குமார்"
- நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தை தனுஷ் இயக்குகிறார்.
- இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
நடிகர் தனுஷ் ராயன் திரைப்படத்தை தொடர்ந்து `நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதுதவிர 'இட்லி கடை'என்ற படத்தையும் இயக்கி வருகிறார். இந்தப் படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' திரைப்படம் 'ராம்காம்' கதைக்களத்தில் ஒரே இரவில் நடக்கும் சம்பவங்கள் பற்றி உருவாகிறது. இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படத்தின் முதல் பாடலான கோல்டன் ஸ்பேரோ பாடல் வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இப்பாடலை பலரும் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்து பதிவிட்டனர். இப்பாடலில் நடிகை பிரியங்கா மோகன் சிறப்பு தோற்றத்தில் இடம்பெற்று இருக்கிறார். கோல்டன் ஸ்பேரோ பாடலை சுபலட்சுமி, ஜி.வி. பிரகாஷ் குமார், தனுஷ் மற்றும் அறிவு இணைந்து பாடியுள்ளனர்.
கோல்டன் ஸ்பாரோ பாடல் வரிகளை அறிவு எழுதியுள்ளார். பாடல் தற்பொழுது யூடியூபில் 75 மில்லியன் வியூஸ்களை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- `நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார் தனுஷ்.
- இப்பாடலில் நடிகை பிரியங்கா மோகன் கேமியோ பெர்ஃபாமன்ஸ் செய்து இருக்கிறார்
நடிகர் தனுஷ் சமீபத்தில் ராயன் திரைப்படத்தை இயக்கி நடித்திருந்தார். இப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் மாபெரும் வெற்றியடைந்தது.
இப்படத்தை தொடர்ந்து `நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் தனுஷ். இது ஒரு ராம் காம் கதைக்களத்தில் உருவாகும் திரைப்படமாகும். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
படத்தின் முதல் பாடலான கோல்டன் ஸ்பேரோ பாடல் கடந்த மாதம் வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்பாடலை பலரும் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்து பதிவிட்டனர். இப்பாடலில் நடிகை பிரியங்கா மோகன் கேமியோ பெர்ஃபாமன்ஸ் செய்து இருக்கிறார்
கோல்டன் ஸ்பேரோ பாடலை பாடியவர் சுபலட்சுமி, ஜி.வி பிரகாஷ் குமார் , தனுஷ் மற்றும் அறிவு இணைந்து பாடியுள்ளனர். பாடலின் வரிகளை அறிவு எழுதியுள்ளார்.
பாடல் தற்பொழுது யூடியூபில் 40 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள திரைப்படம் அமரன்.
- படத்தின் முதல் பாடலை குறித்து தற்பொழுது அப்டேட் கிடைத்துள்ளது.
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள திரைப்படம் அமரன். உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்த திரைப்படத்தில்"முகுந்தன்" என்கின்ற கதாபாத்திரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், ஒரு ராணுவ வீரராக நடித்திருக்கிறார். ஜம்மு காஷ்மீரில் உள்ள இந்திய ராணுவ தளத்தின் உயர் அதிகாரியாக அவர் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
அமரன் திரைப்படம் அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டப்பிங் பணிகளை சிவகார்த்திகேயன் முடித்துள்ளார்.
படத்தின் முதல் பாடலை குறித்து தற்பொழுது அப்டேட் கிடைத்துள்ளது. படத்தின் முதல் பாடலான `ஹே மின்னலே' பாடல் இன்னும் சில நாட்களில் வெளியாகும் என ஜி.வி பிரகாஷ் அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இது ஒரு காதல் பாடலாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
The first single will be a love song from #Amaran …. Titled …. ✨Hey Minnale✨#HeyMinnale …. @Siva_Kartikeyan #saipallavi @RKFI … coming in few days …. @ikamalhaasan @Rajkumar_KP#Mahendran @gvprakash @anbariv @Sai_Pallavi92 @RKFI @SonyPicsIndia @sonypicsfilmsin…
— G.V.Prakash Kumar (@gvprakash) September 24, 2024
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 2024 ஜேஇஇ தேர்வில் பழங்குடியின மாணவி சுகன்யா தேர்ச்சி பெற்று, சாதனை படைத்துள்ளனர்.
- “கல்வி ஆகச்சிறந்த செல்வம்” அது தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு தங்கை தம்பிகளுக்கும் கிடைக்கவேண்டும்.
2024 ஜேஇஇ (JEE) தேர்வில் தமிழ்நாட்டை சேர்ந்த பழங்குடியின மாணவிகள் ரோகிணி, சுகன்யா தேர்ச்சி பெற்று, சாதனை படைத்துள்ளனர். இதன்மூலம் கடந்த 60 ஆண்டுகளில் திருச்சி என்ஐடி-ல் (NIT) சீட் பெற்ற முதல் பழங்குடியின மாணவிகள் என்ற பெருமையை இவர்கள் பெற்றனர்.
ஜேஇஇ (JEE) தேர்வில் மாணவி ரோகிணி 73.8 சதவீத மதிப்பெண்கள் பெற்று தமிழ்நாட்டில் தேர்வெழுதிய பழங்குடியின மாணவிகளில் முதலிடம் பிடித்துள்ளார். திருச்சி என்ஐடி-ல் (NIT) மாணவி ரோகிணி வேதிப் பொறியியலும், சுகன்யா உற்பத்தி பொறியியலும் படிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.
இந்நிலையில், ஜேஇஇ தேர்வில் வெற்றி பெற்ற சுகன்யாவிற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில், "JEE நுழைவுத்தேர்வில் வென்று திருச்சி NIT யில் பயில போகும் அன்புத்தங்கை சுகன்யா அவர்களுக்கு என் இதயம் கனிந்த நல் வாழ்த்துகள். "கல்வி ஆகச்சிறந்த செல்வம்" அது தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு தங்கை தம்பிகளுக்கும் கிடைக்கவேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்