search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரகுவன்ஷி"

    • காமன்வெல்த் போட்டியில் சாய்னா நேவால் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
    • டென்னிஸ், பேட்மிண்டன், கூடைப்பந்து விளையாட்டை காட்டிலும் கிரிக்கெட் உடல் ரீதியாக கடினமானது அல்ல என தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    பேட்மிண்டனில் இந்திய நட்சத்திர வீராங்கனையாக வலம் வந்த சாய்னா நேவால் 2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றி வரலாறு படைத்தார். மேலும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் 2 பதக்கம் வென்றுள்ள அவர் தரவரிசையில் 'நம்பர் 1' இடத்தையும் அலங்கரித்தார். காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கத்தினையும் வென்றுள்ளார்.

    ஆனால் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஓரிரு ஆண்டுகளில் அவரது ஆட்டத்திறன் வெகுவாக பாதிக்கப்பட்டது. முழு உடல்தகுதியை எட்ட முடியாமல் போராடி வருகிறார்.

    இந்நிலையில் டென்னிஸ், பேட்மிண்டன், கூடைப்பந்து விளையாட்டை காட்டிலும் கிரிக்கெட் உடல் ரீதியாக கடினமானது அல்ல என தெரிவித்தார். இதற்கு கொல்கத்தா அணியின் இளம் வீரர் ரகுவன்ஷி பதலளிக்கும் வகையில், நீங்கள் பும்ராவின் 150 கி.மீ வேகத்தை தலையில் வாங்கி பாருங்கள் அப்போது தெரியும் என கூறினார். இந்த கருத்து ரசிகர்களிடையே எதிர்ப்பை தெரிவித்து வந்தது.

    இதனையடுத்து அந்த கருத்து சானியா நேவாலிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்தார். இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ×