search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராகாவா லாரன்ஸ்"

    • இந்தியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படமான கில், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ரீமேக் செய்யப்பட உள்ளது.
    • ராகவா லாரன்ஸின் 25-வது படத்தை தெலுங்கு இயக்குனர் ரமேஷ் வர்மா இயக்கவுள்ளார்.

    தமிழ் சினிமாவில் நடிப்பு, நடனம், படம் இயக்குவது போன்ற பல துறைகளில் ஜொலித்து கொண்டு இருப்பவர் ராகவா லாரன்ஸ். இவர் பல சிறந்த படங்களை இயக்கியும் நடித்தும் உள்ளார். இந்நிலையில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் அவரது 25- வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    அதன்படி இந்தியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படமான கில், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ரீமேக் செய்யப்பட உள்ளது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக இருக்கும் இந்த படத்தில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளார்.

    இந்த படத்தை தெலுங்கில் ராக்ஷசடு, கில்லாடி படங்களை இயக்கிய தெலுங்கு இயக்குனர் ரமேஷ் வர்மா இயக்கவுள்ளார்.

    ஏ ஸ்டூடியோஸ் எல்எல்பி சார்பில் கோனேரு சத்யநாராயணா, நீலாத்ரி புரொடக்ஷன்ஸ் மற்றும் ஹவ்விஷ் புரொடக்ஷன்ஸுடன் இணைந்து தயாரிக்கிறார். சத்யநாராயணாவும் ரமேஷ் வர்மாவும் இணையும் 3-வது படம் இது.

    மிகப்பெரிய ஆக்ஷன் அட்வென்சர் ஆரம்பம்' என்ற போஸ்டருடன் படக்குழு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு நவம்பர் முதல் தொடங்கும் என கூறப்படுகிறது.

    இந்தியில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதால் ரீமேக்கிலும் நல்ல வரவேற்பு பெரும் என எதிர்பாக்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த ஓவிய ஆசிரியர் ஒருவரை லாரான்ஸ் நேரில் சந்தித்து பாராட்டி உள்ளார்.
    • மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜீஆர், லாரன்ஸுக்கு முத்தம் கொடுப்பது போல ஒரு ஓவியம் இருந்தது.

    சென்னை:

    நடிகர் ராகவா லாரன்ஸ் 'மாற்றம்' என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கியுள்ளார். இந்தக் அறக்கட்டளை மூலம், மக்களுக்குத் தேவைப்படும் உதவிகள் மற்றும் ஏழை எளிய மாணவ மாணவிகள் படிப்பதற்கு உதவி செய்து வருவதோடு, கொடிய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவிகளும் செய்து வருகிறார்.

    அவரால் படித்து ஆளாக்கப்பட்ட மாணவர்கள் தற்போது நல்ல நிலைக்கு உயர்ந்திருப்பதை அடுத்து அவர்களும் ராகவா லாரன்ஸ் வழியில் ஏழை எளியோருக்கு உதவி செய்ய தயாராகி இருக்கிறார்கள். இதன் காரணமாக அவர்களையும் தன்னுடன் இணைத்துக் கொண்டு மாற்றம் என்ற பெயரில் மே ஒன்றாம் தேதி முதல் சேவை அமைப்பு மூலம் ராகவா லாரன்ஸ் பல்வேறு நலத்திட்ட உதவிகளை நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த ஓவிய ஆசிரியர் ஒருவரை லாரான்ஸ் நேரில் சந்தித்து பாராட்டி உள்ளார். அவரது ஓவிய திறமையை சமூக வலைதளங்கள் மூலம் கண்டு ரசித்த லாரன்ஸ் அவரது திறமையை பாராட்ட விரும்பியதாக கூறினார்.

    லாரன்ஸை சந்தித்த அந்த ஓவிய ஆசிரியர் ஒரு சிறப்பு பரிசை அவருக்கு வழங்கினார். அந்த ஓவியத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜீஆர், லாரன்ஸுக்கு முத்தம் கொடுப்பது போல ஒரு ஓவியம் இருந்தது. இதனை மகிழ்ச்சியுடன் லாரன்ஸ் ஏற்றுக் கொண்டார். பதிலுக்கு லாரன்ஸ் அந்த ஓவிய ஆசிரியருக்கு நிதி உதவி வழங்கினார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    வணக்கம் நண்பர்களே, ரசிகர்களே, அவர் மணலூர்பேட்டை கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஓவிய ஆசிரியர் செல்வம். அவரது அற்புதமான ஓவியத் திறமையை உங்கள் அனைவராலும் சமூக ஊடகங்கள் மூலம் அறிந்து கண்டேன். அவரை நேரில் சந்தித்து அவரது திறமையைப் பாராட்ட விரும்பினேன். இன்று, நான் அவரைச் சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். அவருடைய பரிசை மிகவும் கவர்ந்தேன்! #Serviceisgod #Maatram

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×