என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம்"
- காங்கிரஸ் கட்சியும் அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு கவனம் செலுத்த வேண்டும்.
- ராகுல்காந்தியின் பின்னால் இளைஞர்கள் ஏராளமானோர் அணி திரண்டு வருகின்றனர்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூட்டம் அத்தொகுதியின் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சஞ்சய் காந்தி முன்னிலை வகித்தார்.
இதில் காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் செல்வ பெருந்தகை கலந்துகொண்டு பேசுகையில், ஒவ்வொரு கட்சியும் தேர்தலுக்கு பிறகு அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல தொடங்கும். காங்கிரஸ் கட்சியும் அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு கவனம் செலுத்த வேண்டும். ராகுல் காந்தியின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு இளைஞர்கள் காங்கிரஸ் கட்சியை நோக்கி ஈர்க்கப்பட்டு வரு கின்றனர்.
இதனால் ராகுல்காந்தியின் பின்னால் இளைஞர்கள் ஏராளமானோர் அணி திரண்டு வருகின்றனர் என்று பேசினார்.
இந்த கூட்டத்தில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. பேசியதாவது:-
கூட்டணி கட்சியால்தான் வெற்றி பெற்றோம் என்பதில் என்ற சந்தேகமும் வேண்டாம். அதற்காக நாம் தி.மு.க.விற்கு நன்றி தெரிவித்து கொள்வோம். கூட்டணியில் ஜெயித்ததால் நமக்கு பலமில்லை என்று கருதவேண்டாம். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் பக்கமே சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டோர் ஆகியோர் ஆதரவளித்து வாக்களித்து உள்ளனர்.
40-க்கு 40 வெற்றி பெற தி.மு.க. கூட்டணியில் இருந் ததும் முக்கிய காரணம். தி.மு.க., அ.தி.மு.க.விற்கு பிறகு 3-வது மிகப்பெரிய கட்சியாக தமிழகத்தில் காங்கிரஸ் உள்ளது. இளைஞர்கள் எல்லாம் இன்றைக்கு புதிதாக வந்த கட்சிகளை நோக்கி செல்ல தொடங்கி உள்ளனர். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளன.
அவர்களை தடுத்து நிறுத்தி காங்கிரசை நோக்கி ஈர்க்கும் வகையில் நமது எதிர்கால செயல்பாடுகள் அமைய வேண்டும். இளைஞர்களை நம் பக்கம் ஈர்க்க வேண்டும். தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களை சந்திக் காமல் மற்ற நேரங்களிலும் மக்களை சந்தித்து அவர்களின் பிரச்சனைகளுக்காக குரல் கொடுக்க வேண்டும்.
மின்கட்டண உயர்வு தற்போது தேவையில்லாத ஒன்று. திருநெல்வேலி காங்கிரஸ் மாவட்ட தலைவர் மரணம் குறித்து போலீசார் தெளிவுப்படுத்த வேண்டும். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் அதிகாரிகளுக்கு தெரியாமல் நடந்திருக்காது.
கூட்டணி தர்மம் என்பதற்காக நாம் கூனி குறுகி நிற்க வேண்டிய அவசியமில்லை. மக்கள் பிரச்சனையை பேச வேண்டும். அனைத்து தேர்தலிலும் காங்கிரஸ் கட்சிக்கு முக்கியத்துவம் இருக்கும் வகையில் நம்முடைய செயல்பாடுகள் இருக்க வேண்டும்.
நாம் தமிழர் கட்சி மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளது. இளைஞர்கள் அக்கட்சிக்கு உணர்வுபூர்வமாக வாக்களிக்கின்றனர். அவர்களை நம் பக்கம் ஈர்க்கும் வகையில் இளைஞர்களுக்கு நம்பிக்கை கொடுத்து காங்கிரஸ் கட்சியில் இணைக்க வேண்டும்.
2026 சட்டசபை தேர்தலுக்கு பிறகு தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சி இடம் பெறவேண்டும். அதற்காக கட்சியினர் தீவிரமாக உழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசி னார்.
பின்னர் செல்வப்பெருந்தகையும், கார்த்தி சிதம்பரமும் கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், தமிழகத்தில் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என ஜான்பாண் டியன் போன்றோர் கூறி வருகின்றனர்.
எங்களை பொருத்தவரையில் தலைவர்கள் பாதுகாப்பாகவே இருக்கின்றனர். எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கொலைகள் நடக் கின்றன. அ.தி.மு.க. ஆட்சி யில் நடைபெற்ற கொலைகளை எண்ணி பாருங்கள். பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மீது சட்ட நிபுணர்களை ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்