search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆம்ஸ்ட்ராவ் படுகொலை"

    • தலித் மக்களின் நலனில் அக்கறை கொண்டு களம் காணவும் மனதார வாழ்த்துகிறேன்.
    • என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். அவரது கொலையில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் ஈடுபட்டது தெரியவந்தது.

    போலீஸார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவரது கொலையில் 15-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இதை தொடர்ந்து, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடியும், மாநிலத் தலைவராக வழக்கறிஞர் பி. ஆனந்தனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் பா. ரஞ்சித் வாழ்த்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

    பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக வழக்கறிஞர் பி. ஆனந்தன் அவர்களையும், மாநில ஒருங்கிணைப்பாளராக பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்களையும் தேர்ந்தெடுத்திருப்பதை முழுமனதுடன் வரவேற்று, என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்!

    மறைந்த சமத்துவத் தலைவர் அண்ணன் ஆம்ஸ்ட்ராங் தன்னலமற்ற கள செயற்பாட்டைப் போல தலித் மக்களின் விடுதலைக்காகவும், உரிமைகளுக்காகவும், சுயமரியாதைக்காகவும் எவ்விதமான சமரசமும் பின்வாங்கலும் இல்லாமல் சித்தாந்தத் தெளிவுடன் பாபாசாகேப் அம்பேத்கர் கண்ட கனவுகளுக்கு செயல் வடிவம் கொடுக்கவும், தலித் மக்களின் நலனில் அக்கறை கொண்டு களம் காணவும் மனதார வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.

    ×