search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கத்திப்பாரா மேம்பாலம்"

    • கத்திப்பாரா மேம்பாலத்திலிருந்து போரூர் செல்லும் போக்குவரத்தில் எந்த மாற்றமும் இல்லை.
    • இலகுரக வாகனங்கள் மட்டும் செயிண்ட் தாமஸ் மருத்துவமனை வழியாக பட்ரோடு சென்று அடையலாம்.

    சென்னை மெட்ரோ பணிகளுக்காக கத்திப்பாரா சந்திப்பில் அக்.11 முதல் 14 வரை சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, கத்திப்பாரா மேம்பாலத்திலிருந்து போரூர் செல்லும் போக்குவரத்தில் எந்த மாற்றமும் இல்லை. அவை வழக்கம் போல் செல்ல அனுமதிக்கப்படுகிறது.

    போரூரில் இருந்து கத்திப்பாரா மேம்பாலம் நோக்கி வரும் வாகனங்கள் பெல் ராணுவ சாலை சந்திப்பிலிருந்து மவுண்ட் பூந்தமல்லி சாலையில் நேராக செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    அதற்கு பதிலாக அவர்கள் மவுண்ட் பூந்தமல்லி சாலை பெல் ராணுவ சாலை சந்திப்பில் புதியதாக அமைந்துள்ள சாலை வழியாக டிபென்ஸ் காலனி 1-வது அவென்யூவில் (வலதுபுறம் திரும்பி) இலகுரக வாகனங்கள் மட்டும் செயிண்ட் தாமஸ் மருத்துவமனை வழியாக பட்ரோடு சென்று அடையலாம்.

    மற்ற வாகனங்கள் கண்டோன்மென்ட் சாலையில் இடது புறம் திரும்பி சுந்தர் நகர் 7-வது குறுக்கு தெரு, தனகோட்டி ராஜா தெரு சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் தெற்கு பகுதி சாலை வழியாக ஒலிம்பியா 100 அடி சாலை சந்திப்பு அடைந்து வாகனங்கள் கத்திப்பாராவை அடைய வலது புறமாகவும், வடபழனியை அடைய இடது புறமாகவும் தங்கள் இலக்குகளை நோக்கி செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சம்பவ இடம் சென்ற போலீசார் உயிரிழந்த வாலிபர் உடலை மீட்டனர்.
    • இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    கிண்டி அருகிலுள்ள கத்திப்பாரா பாலத்தில் இருசக்கர வாகனத்தில் 24 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வந்தார். இன்று காலை 10.15 மணியளவில் தனது வாகனத்தில் இருந்து இறங்கிய அவர், மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்த மவுண்ட் போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடம் விரைந்து உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

    விசாரணையில், உயிரிழந்த மாணவர் விருகம்பாக்கம் கிருஷ்ணா நகர் 6-வது பிரதான சாலை பகுதியை சேர்ந்த சாமுவேல் ராஜ் என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், கத்திப்பாரா பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சாமுவேல் ராஜ் கிரிக்கெட் வீரர் எனவும், டி.என்.பி.எல். தொடரில் விளையாட வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்துகொண்டார் என தகவல்கள் வெளியாகின.

    ×