search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலக யானை தினம்"

    • யானைகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 12-ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.
    • யானைகள் அழிந்தால் காடுகளும், அதனை சார்ந்து வாழக்கூடிய விலங்குகளும், மனிதஇனமும் அழிந்துவிடும்.

    உருவத்திலும், அதன் செயலிலும் நம்மால் பிரமிப்பாக பார்க்கப்படக்கூடிய யானை, தற்போது அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்களில் முதன்மையான ஒன்றாக இருந்து வருகிறது.

    இதுபற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தவே சர்வதேச யானைகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 12-ம் தேதி (இன்று) கடைப்பிடிக்கப்படுகிறது.

    யானைகள் அழிந்தால் காடுகளும், அதனை சார்ந்து வாழக்கூடிய விலங்குகளும், மனிதஇனமும் அழிந்துவிடும். எனவே சுற்றுச்சூழலின் ஆரோக்கியத்துக்கு சிறந்த அடையாளமாகவும், சுற்றுச்சூழல் மற்றும் வனத்தை காக்கும் பாதுகாவலனாகவும் இருக்கக்கூடிய யானைகளை பாதுகாக்கக்கூடிய பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது.

    இந்நிலையில், திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து யானைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சூழலியற் சமநிலையைப் பேணுவதில் யானைகளின் பங்கு அளப்பரியது. தமிழிலக்கியம் முழுதும் பல்வேறு பெயர்களால் யானைகள் குறிப்பிடப்படுவதில் இருந்தே அவை இம்மண்ணுடன் கொண்டுள்ள நெருக்கமான உறவை உணரலாம்.

    பல்லுயிர் காக்கும் நமது அரசின் ஒருங்கிணைந்த முயற்சிகளால், நாம் ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து யானைகளின் எண்ணிக்கை தொடர்ந்து, சீராக உயர்ந்து வரும் மகிழ்ச்சிக்குரிய செய்தியை #WorldElephantDay-இல் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×