search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயிலை கவிழ்க்க சதி"

    • சம்பவ இடத்தில் 9 இரும்பு கம்பிகள் கிடந்தன.
    • பிரேக் போட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    புதுடெல்லி:

    புதுடெல்லியில் இருந்து பஞ்சாப் மாநிலம் பதிண்டாவுக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது. ரெயில் இன்று அதிகாலை பதிண்டா ரெயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது ரெயில் தண்டவாளத்தில் இரும்பு கம்பிகள் கிடப்பதை என்ஜின் டிரைவர் பார்த்தார்.

    ரெயில் மெதுவாக வந்ததால் டிரைவர் உடனடியாக பிரேக் போட்டு நிறுத்தினார். ரெயிலில் பாதுகாப்புக்கு வந்த போலீசார் தண்டவாளத்தில் இரும்பு கம்பிகள் வைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.


    சம்பவ இடத்தில் 9 இரும்பு கம்பிகள் கிடந்தன. அவற்றை போலீசார் அப்புறப்படுத்தினார்கள். பதிண்டாவின் பாங்கி நகரில் சம்பவம் நடந்த இடத்திற்கு அருகே ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. அதை கவிழ்க்கும் சதி செயலாக இது நிகழ்ந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.

    இதுபற்றி அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதை ரெயில் என்ஜின் டிரைவர் சரியான நேரத்தில் தண்டவாளத்தில் கம்பிகள் கிடப்பதை பார்த்து ரெயிலை நிறுத்தியதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

    நாடு முழுவதும் சமீபகாலமாக ரெயில் தண்டவாளத்தில் சந்தேகத்திற்கிடமான பல பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. ரெயில்களை கவிழ்க்க செய்வதற்கான சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக அவை இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.


    ஏற்கனவே கடந்த 2 நாட்களுக்கு முன்பு உத்தரபிரதேச மாநிலம் பிரேம்பூர் ரெயில் நிலையம் தண்டவாளத்தில் கியாஸ் சிலிண்டர் வைக்கப்பட்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ரெயில் என்ஜின் டிரைவர் பார்த்து அவசர பிரேக் போட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    போலீசார் விரைந்து சென்று சிலிண்டரை ஆய்வு செய்து தண்டவாளத்தில் இருந்து அகற்றினர். ஆய்வு செய்ததில், 5 லிட்டர் சிலிண்டர் காலியாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்துவதற்கு தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

    கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 7 இடங்களீல் ரெயிலை கவிழ்க்க சதி நடந்துள்ளது. உரிய நேர்த்தில் தண்டவாளத்தில் கிடந்த பொருட்கள் அகற்றப்பட்டதால் பெரும் சேதங்கள் தவிர்க்கப்பட்டு உள்ளன. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

    ×