என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சத்துணவு மையங்கள்"
- தமிழகத்தில் 451 பள்ளி சத்துணவு மையங்களில் 500 பயனாளிகளுக்கு மேல் உள்ளனர்.
- சுகாதாரத்தை உறுதி செய்ய வேண்டிய சூழல் உள்ளது.
சென்னை:
தமிழகத்தில் 1962-ம் ஆண்டு பள்ளிகளில் மதிய உணவு திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டமானது 1982-ம் ஆண்டு சத்துணவு திட்டம் மேம்படுத்தப்பட்டது.
அனைத்து பள்ளி செல்லும் குழந்தைகளும் முறையாக பள்ளி செல்வதை ஊக்குவிக்கும் வகையிலும், அனைவருக்கும் ஆரம்பக்கல்வி வழங்குவதை உறுதி செய்யவும், இந்த திட்டத்தின் கீழ், தமிழகத்தில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு வகையான ஊட்டச்சத்து மிகுந்த சத்துணவு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான 20 லட்சத்து 74 ஆயிரத்து 39 மாணவர்களும், நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளை சேர்ந்த 21 லட்சத்து 97 ஆயிரத்து 914 மாணவர்கள் பயனடைந்து வருகிறார்கள். தற்போது, சத்துணவு திட்டத்தின் கீழ் பயனடையும் மாணவர்களுக்கு, 43 ஆயிரத்து 131 சத்துணவு மையங்கள் மூலம் 5 வகையான கலவை சாதங்களுடன் மசாலா முட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. இது, மாணவர்களுக்கு பிடித்த உணவாகவும் மாறி உள்ளது.
இருப்பினும், சத்துணவு மையங்களில் பணியாற்றும் சமையலர், சமையல் உதவியாளர்களுக்கு, சத்துணவு தயாரிப்பின்போது, முட்டையை உரிக்க பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறார்கள். குறிப்பாக, அதிகளவு பயனாளிகளை கொண்ட சத்துணவு மையங்களை சேர்ந்த பணியாளர்கள் முட்டை உரித்தலில் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சத்துணவு சமையலர்கள் மற்றும் உதவியாளர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு, அதிகளவு பயனாளிகளை கொண்ட சத்துணவு மையங்களுக்கு முட்டை உரிப்பதற்கான நவீன எந்திரம் கொள்முதல் செய்ய சமூக நலன் துறை திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து, சமூக நலத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
தமிழகத்தில் 451 பள்ளி சத்துணவு மையங்களில் 500 பயனாளிகளுக்கு மேல் உள்ளனர். இந்த மையங்களை சேர்ந்த பணியாளர்கள் தினமும் 500 முட்டைகளுக்கு மேல் வேக வைத்து அவற்றை உரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அவர்கள் சிரமங்களை சந்திக்கிறார்கள். சில நேரங்களில், மாணவர்களுக்கான முட்டைகள் உடைந்து வீணாகி விடுகின்றன.
மேலும், சுகாதாரத்தையும் உறுதி செய்ய வேண்டிய சூழல் உள்ளது. இதன்காரணமாக, அதிக அளவு பயனாளிகளை கொண்ட 431 பள்ளி சத்துணவு மையங்களுக்கு நவீன முட்டை உரிக்கும் எந்திரம் வாங்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இதற்காக நிதி ஒதுக்கீடு செய்து எந்திரம் கொள்முதல் செய்வதற்கான அனுமதி கோரி தமிழக அரசிடம் சமூக நலத்துறை சார்பில் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில், இதற்கான அனுமதி கிடைத்துவிடும். அதன்பிறகு, டெண்டர் விடப்பட்டு, முட்டை உரிக்கும் எந்திரம் சத்துணவு மையங்களில் பயன்பாட்டுக்கு வந்துவிடும். இந்த எந்திரம் பயன்பாட்டு வந்தால், சத்துணவு பணியாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்