search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் உதயநிதி"

    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வீட்டிற்கு சென்று, செந்தில் பாலாஜி சந்தித்தார்.
    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் புகைப்படங்களுடன் குறிப்பிட்டுள்ளார்.

    ஜாமினில் வெளிவந்துள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்தார்.

    சென்னையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வீட்டிற்கு சென்று, செந்தில் பாலாஜி சந்தித்தார்.

    இதுகுறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் புகைப்படங்களுடன் குறிப்பிட்டுள்ளார்.

    அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    பாசிஸ்ட்டுகளின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைக்கு எதிராக, செந்தில் பாலாஜிக்கு, உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியுள்ள நிலையில், 471 நாட்கள் சிறைவாசம் முடித்து, வெளியே வந்திருக்கும் அவரை இன்று நேரில் சந்தித்து வரவேற்றோம். அவரது பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பாிஸ் ஒலிம்பிக் 2024-ல் பங்கேற்ற ஆறு பேரில், 4 பேர் பதக்கங்களுடன் திரும்பியுள்ளனர்.
    • அனைவரையும் வாழ்த்துவதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது.

    பாரிஸ் பாராலிம்பிக்ஸ்-ல் பதக்கம் வென்ற தமிழ்நாடு வீராங்கனைகள், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

    இதுகுறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவு வௌயிட்டுள்ளார்.

    அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    2024ம் ஆண்டு பாரிஸில் நடந்த பாராலிம்பிக்கில் வரலாற்றுச் சிறப்புமிக்கப் பதக்கங்களைப் பெற்றுத் தமிழகம் திரும்பிய நமது சாம்பியன்களான துளசிமதி முருகேசன், மனிஷா ராமதாஸ் மற்றும் நித்யா ஸ்ரீ சிவன் ஆகியோரை வாழ்த்தினோம்.

    பாிஸ் ஒலிம்பிக் 2024-ல் பங்கேற்ற ஆறு பேரில், 4 பேர் பதக்கங்களுடன் திரும்பியுள்ளதால், இது உண்மையிலேயே தமிழகத்திற்கு பெருமையான தருணம்.

    நம் துணை விளையாட்டு வீரர்கள் தங்கள் பயணத்தில் நம் அரசாங்கத்தின் அசைக்க முடியாத ஆதரவை ஒப்புக்கொண்டனர். முன்னோடியாக விளங்கும் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையின் பயனாளிகளில் பெரும்பாலானோர் பாரா-தடகள வீரர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் அனைவரையும் வாழ்த்துவதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    ×