என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "இனிய இல்லறம்"
- தம்பதியருக்குள் ஒருமித்த புரிதல் இருக்க வேண்டியது அவசியம்.
- ஆக்கப்பூர்வமான விமர்சனமும், ஆழ்ந்த அன்பும் கலந்திருக்க வேண்டும்.
திருமண உறவு இனிமையாக அமைந்து இல்லறத்தை சிறப்பாக வழி நடத்துவதற்கு தம்பதியருக்குள் ஒருமித்த புரிதல் இருக்க வேண்டியது அவசியமானது. இருவரும் பேசும் வார்த்தைகளில் ஆக்கப்பூர்வமான விமர்சனமும், ஆழ்ந்த அன்பும் கலந்திருக்க வேண்டும்.
மனைவியிடம் ஒரு சில விஷயங்களை பேசுவதை தவிர்க்க வேண்டும். அதற்கான காரணங்கள் குறித்தும், அதனை தவிர்த்து இனிய இல்லறத்தை கட்டமைப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் பார்ப்போம்.
விருப்பங்களை நிறைவேற்றுங்கள்
மனைவியின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கு முயல வேண்டும். அது சாத்தியப்படாததாக இருந்தாலோ, பிரச்சினைக்குரியதாக இருந்தாலோ அதுபற்றி புரிய வைக்க வேண்டுமே தவிர அவமதிப்பது போன்ற வார்த்தைகளை உச்சரிக்கக்கூடாது.
'நீ என்ன செய்தாலும் அதை பற்றி எனக்கு கவலை இல்லை. ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அதற்கு நீ தான் பொறுப்பு. நான் அதில் தலையிடமாட்டேன்' என்பது போன்ற வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது. அவரின் கருத்துக்கு உடன்படவில்லை என்றாலும் அதை நிராகரிக்கும் தொனியில் பேசக்கூடாது.
தவறுகளை திருத்துங்கள்
மனைவி செய்யும் காரியங்களில் ஏதேனும் தவறு நிகழ்ந்தால் அதனை திருத்துவதற்கு கணவர் முயற்சிக்க வேண்டும். அவர்தானே தவறு செய்தார். அவரே சரி செய்துகொள்ளட்டும் என்ற மன நிலையில் இருக்கக் கூடாது.
அந்த தவறை சுட்டிக்காட்டி, குற்றச்சாட்டுகளை முன்வைப்பதும், மனைவி மீது பழி சுமத்துவதும் அபத்தமானது. `நீ எப்போதும் இப்படித்தான் செயல்படுகிறாய்' என்று எது செய்தாலும் அதில் குறை கண்டுபிடிப்பது உறவில் தேவையற்ற விரிசலை ஏற்படுத்திவிடும்.
எந்தவொரு விஷயமாக இருந்தாலும் 'ஒன்றாகச் சேர்ந்து நிலைமையை சமாளிப்போம். அடுத்த முறை முடிவெடுக்கும் முன்பு அதை பற்றி விரிவாக விவாதிப்போம்' என்பதுதான் நீங்கள் சொல்லக்கூடிய மாற்றுக் கருத்தாக இருக்க வேண்டும். நீங்கள் சொல்வதுதான் சரி என்று நிரூபிப்பது இல்லற வாழ்க்கைக்கான வெற்றியாக அமையாது.
கவனமாக கையாளுங்கள்
மனைவி மேற்கொண்ட ஏதேனும் ஒரு முயற்சி தோல்வியில் முடிந்தாலோ, அவர் ஏதேனும் தவறு செய்தாலோ 'நீ ஒரு முட்டாள். எந்த வேலையையும் சரியாக செய்ய மாட்டாய்' என்பது போன்ற கடுமையான வார்த்தைகளை உச்சரிக்கக்கூடாது. அது உறவை சீர்குலைத்துவிடும். 'நீ எப்போதும் சிறப்பாகத்தானே செயல்படுவாய்.
இந்த முறை ஏன் இப்படி செயல்பட்டுவிட்டாய். அடுத்த முறை கவனமாக கையாளு' என்பது போன்ற ஆறுதல் வார்த்தைகளை பேசுங்கள். அது எந்தவொரு விஷயத்தையும் கவனமாக கையாளுவதற்கு உதவிடும்.
முன்னாள் காதலை பேசாதீர்கள்
திருமணத்துக்கு முன்பு மனைவி வேறு நபரை காதலித்து இருந்தால் அது பற்றிய பேச்சை திருமணமான பிறகும் பேசுவது தவறானதாகும். ஏதேனும் சண்டையின் போது முன்னாள் காதலை பற்றி பேசுவது ஏற்புடையதல்ல. அது உறவுக்குள் பாதகத்தை ஏற்படுத்திவிடும்.
காதலை வெளிப்படுத்துங்கள்
'ஐ லவ் யூ' என்ற வார்த்தையை திருமணத்துக்கு முன்புதான் உச்சரிக்க வேண்டும் என்றில்லை. மணமான பிறகும் அந்த அன்பு சொல்லை தாராளமாக பயன்படுத்தலாம். அது தம்பதியருக்குள் இணக்கத்தை அதிகப்படுத்தும். அதற்கு மாறாக 'நான் உன்னை ஒருபோதும் காதலித்ததில்லை' என்ற வார்த்தையை பயன்படுத்துவது அன்பில் விரிசலை அதிகப்படுத்திவிடும்.
எப்போதும் காதலை வெளிப்படுத்தும் விதமாக செயல்படுங்கள். வாழ்வின் முக்கியமான நாட்களில் மட்டுமின்றி துணை செய்த சின்ன சின்ன விஷயங்களுக்கும் பரிசு கொடுத்து ஊக்கப்படுத்துங்கள். அது துணையின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும். இல்லறமும் இனிமையாக அமையும்.
விவாகரத்து என்ற வார்த்தையை பயன்படுத்தாதீர்கள்
விவாகரத்து என்ற ஒற்றை வார்த்தை ஒரு நொடிப்பொழுதில் குடும்ப கட்டமைப்பை சீர்குலைத்துவிடும்.
கணவர் மீது நம்பிக்கையின்மையை ஏற்படுத்திவிடும். ஏதேனும் சண்டை, சச்சரவுகளின்போது 'விவாகரத்து' என்ற வார்த்தையை ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது. அந்த வார்த்தை துணை மத்தியில் பாதுகாப்பின்மையையும், பிரிவினையையும் உண்டாக்கிவிடும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்