search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வல்லபாய் படேல்"

    • ஒற்றுமையையும் பலவீனப்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளனர்.
    • அரசியலமைப்பின் பெயரால் இந்தியாவை உடைக்கிறார்கள்.

    இன்று அக்டோபர் 31ம் தேதி, இந்தியாவின் இரும்பு மனிதரும், சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்தநாள். இந்த நாள் தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி குஜராத் மாநிலம் சென்றுள்ள பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அதன்படி குஜராத்தில் உள்ள ஒற்றுமை சிலைக்கு பிரதமர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து கேவாடியாவில் உள்ள ஒற்றுமைப் பேரணி மைதானத்தில் நடந்த பேரணியில் பிரதமர் கலந்து கொண்டு உரையாற்றினார்.

    அப்போது பேசிய அவர், "நாடுகள் பிரிந்து செல்கின்றன, ஆனால் இந்தியாவை நெருங்கி வருகின்றன. இது சாதாரண விஷயமல்ல, புதிய வரலாறு எழுதப்படுகிறது. இந்தியா தனது பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்கிறது என்பதை உலகமே உற்று நோக்குகிறது. எனவே நாம் நமது ஒற்றுமையை பாதுகாக்க வேண்டும்."

    "இந்தியாவின் எழுச்சியைப் பற்றி சில வக்கிர சக்திகள் கவலைப்படுகின்றன. இந்தியாவிற்குள்ளும், அதற்கு வெளியேயும் இத்தகையவர்கள் நிலையற்ற தன்மை மற்றும் அராஜகத்தை உருவாக்க முயற்சி செய்கின்றனர். உலகளாவிய முதலீட்டாளர்களுக்கு தவறான செய்தி செல்ல வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்."

    "இவர்களின் இலக்கு பெரும் சக்திகள் ஆகும், அவர்களை குறிவைத்து தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். அவர்கள் சாதியின் பெயரால் மக்களை பிரிக்க முயற்சிக்கின்றனர். அவர்கள் இந்தியாவின் சமூகத்தையும், ஒற்றுமையையும் பலவீனப்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளனர்."

    "'ஏழை இந்தியா, பலவீனமான இந்தியா' என்ற அரசியல் அவர்களுக்குப் பொருந்துவதால், இந்தியா வளர்ச்சியடைவதை அவர்கள் விரும்பவில்லை. எனவே அவர்கள் அரசியலமைப்பின் பெயரால் இந்தியாவை உடைக்கிறார்கள்," என்று தெரிவித்தார்.

    ×