search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அபார் அடையாள அட்டை"

    • மாணவரின் பெயரை சேர்ப்பதற்கு முன் பெற்றோரின் ஒப்புதல் கட்டாயம்.
    • மாணவரின் வாழ்நாள் அடையாள எண்ணாக இருக்கும்.

    பெங்களூரு:

    மத்திய பள்ளிக் கல்வி அமைச்சகத்தின் தேசிய கல்விக் கொள்கை- 2020 திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு ஒரே மாதிரியான அடையாள அட்டை வழங்க, `ஒரே நாடு, ஒரே மாதிரியான மாணவர் அடையாள அட்டை' பரிந்துரைக்கப்பட்டது. அதன்படி, அனைத்து மாணவர்களுக்கும் `அபார்' சிறப்பு அடையாள அட்டை வழங்கப்படுகிறது.


    'அபார்' அடையாள அட்டைக்கு மாணவரின் பெயரை சேர்ப்பதற்கு முன் பெற்றோரின் ஒப்புதல் கட்டாயம். பெற்றோரின் ஆதார், தேர்தல் ஆணையம் வழங்கிய வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை இணைப்பதன் மூலம் மாணவர் ஐடி உருவாக்கப்படுகிறது.

    மாணவர்களின் பெயர்களை பதிவு செய்ய கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளதுடன், பெற்றோர் கூட்டத்தை அழைத்து சம்மதம் பெற தலைமை ஆசிரியருக்கு உத்தரவிட்டுள்ளது.

    மாநிலத்தின் அனைத்து அரசு, உதவிபெறும் மற்றும் உதவிபெறாத பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோரிடம் ஒப்புதல் பெறும் பணி ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வந்தது.

    இதையடுத்து முதற்கட்டமாக மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, 'ஆதார்' எண் மாதிரி 12 இலக்க 'அபார்' தனித்துவ அடையாள அட்டை வழங்கும் பணி தொடங்கியுள்ளது.

    'ஏபிஏஆர்' என்பது தானியங்கி நிரந்தர கல்வி கணக்குப் பதிவு என்பதை குறிக்கிறது. இது மாணவரின் வாழ்நாள் அடையாள எண்ணாக இருக்கும்.

    ஏற்கனவே மாநில அரசின் எஸ்டிஎஸ் அடையாள அட்டை மற்றும் மத்திய அரசின் பிஇஎண் ஆகியவை மாநில பாடத்திட்டப் பள்ளிகளின் மாணவர்களுக்கு நடைமுறையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    ×