search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண்கள் படைப்பிரிவு"

    • நாட்டை பாதுகாக்கும் முக்கியமான பொறுப்பில் இன்னும் நிறைய பெண்கள் பங்கேற்க வேண்டும்.
    • மிக முக்கிய பிரமுகர்களுக்கு கமாண்டோக்களாக பாதுகாப்பு அளிக்கும்.

    புதுடெல்லி:

    மத்திய ஆயுத போலீஸ் படைகளில் ஒன்றான மத்திய தொழிலக பாதுகாப்பு படை (சி.ஐ.எஸ்.எப்.) கடந்த 1969-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. முக்கியமான அரசு மற்றும் தொழிற்சாலை கட்டிடங்களின் பாதுகாப்புக்கு இப்படை பொறுப்பேற்றுள்ளது.

    இதற்கிடையே, மத்திய தொழிலக பாதுகாப்பு படையில், அனைத்து பெண்கள் படைப்பிரிவு ஒன்றை உருவாக்க மத்திய அரசு கடந்த 11-ந்தேதி ஒப்புதல் அளித்தது. இத்தகைய பெண்கள் படை உருவாக்கப்படுவது இதுவே முதல்முறை ஆகும்.

    படையினரின் பணிச்சுமை கருதி, இப்படை உருவாக்கப்படுகிறது. இதில், ஆயிரத்துக்கு மேற்பட்ட பெண்கள் சேர்க்கப்படுகிறார்கள்.

    இந்நிலையில், விமான நிலையங்கள் மற்றும் மெட்ரோ ரெயில்களின் பாதுகாப்பை பெண்கள் படைப்பிரிவு ஏற்கும் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.

    அவர் தனது 'எக்ஸ்' வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    தேச கட்டமைப்பின் ஒவ்வொரு துறையிலும் பெண்கள் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் என்பது பிரதமர் மோடியின் கனவு ஆகும்.

    அதன்படி, சி.ஐ.எஸ்.எப்.பின் முதலாவது பெண்கள் படைப்பிரிவு உருவாக்க மோடி அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

    மேம்பட்ட படையாக உருவாக்கப்படும் பெண்கள் படை, தேசத்தின் முக்கியமான கட்டமைப்புகளான விமான நிலையங்கள், மெட்ரோ ரெயில்கள் ஆகியவற்றின் பாதுகாப்பு பொறுப்பை ஏற்கும். மிக முக்கிய பிரமுகர்களுக்கு கமாண்டோக்களாக பாதுகாப்பு அளிக்கும். நாட்டை பாதுகாக்கும் முக்கியமான பொறுப்பில் இன்னும் நிறைய பெண்கள் பங்கேற்க வேண்டும் என்ற விருப்பத்தை இம்முடிவு நிச்சயம் நிறைவேற்றும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×