என் மலர்
நீங்கள் தேடியது "தொடர் விடுமுறை"
- கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு தொடர் விடுமுறையால், சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிப்பு.
- சர்வதேச விமான டிக்கெட் கட்டணங்கள் 4 மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு தொடர் விடுமுறையால், சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியதை அடுத்து, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கொச்சி, மைசூர் ஆகிய உள்நாட்டு விமான கட்டணங்கள் மற்றும் சிங்கப்பூர், கோலாலம்பூர், தாய்லாந்து, துபாய் ஆகிய சர்வதேச விமான டிக்கெட் கட்டணங்கள் 4 மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை- தூத்துக்குடி இடையே வழக்கமான கட்டணம் - ரூ.4,796, இன்றைய - கட்டணம் ரூ.14,281 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், சென்னை - மதுரை இடையே வழக்கமான கட்டணம் ரூ.4,300, இன்றைய - கட்டணம் ரூ.17,695 என நிர்ணயம்.
சென்னை- திருச்சி இடையே வழக்கமான கட்டணம் ரூ.2,382, இன்றைய கட்டணம் ரூ.14,387 என நிர்ணயம்.
சென்னை- கோவை இடையே வழக்கமான கட்டணம் ரூ.3,485, இன்றைய கட்டணம் ரூ.9,418 என நிர்ணயம்.
சென்னை - சேலம் இடையே வழக்கமான கட்டணம் ரூ.3,537, இன்றைய கட்டணம் - ரூ.8,007 என நிர்ணயம்.
சென்னை - திருவனந்தபுரம் இடையே ரூ.3,821, இன்றைய கட்டணம் ரூ.13,306 என நிர்ணயம்.
சென்னை- கொச்சி இடையே வழக்கமான கட்டணம் ரூ.3,678, இன்றைய கட்டணம் ரூ.18,377 என நிர்ணயம்.
சென்னை- மைசூர் இடையே வழக்கமான கட்டணம் ரூ.3,432, இன்றைய கட்டணம் ரூ.9,872 என நிர்ணயம்.
சென்னை - தாய்லாந்து இடையே வழக்கமான கட்டணம் - ரூ.8,891, இன்றைய - கட்டணம் ரூ.17,437 என நிர்ணயம்.
சென்னை- துபாய் இடையே வழக்கமான கட்டணம் - ரூ.12,871, இன்றைய கட்டணம் - ரூ.26,752 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் ஆண்டு முழுவதும் இதனமான சீதோசனம் நிலவி வருகிறது. தற்போது ஆப்-சீசன் தொடங்கி உள்ளதால் சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
அதோடு தசாரா விடுமுறை, ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை விடுமுறை வந்துள்ளதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் அலைமோதிய வண்ணம் உள்ளனர்.
இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் கோக்கர்வாக், மோயர்பாயிண்ட், பசுமை பள்ளத்தாக்கு, குணாகுகை, பைன்ஸ் பாரஸ்ட், பேரிஜம் ஏரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
அவர்கள் தங்களது கேமராக்களில் படம் பிடித்து மகிழ்ந்து வருகிறார்கள். நேற்று கன மழை நீடித்ததால் புதியதாக நீர்வீழ்ச்சி உருவாகி உள்ளது. இதனை பயணிகள் கண்டு ரசித்து வருகிறார்கள்.
கூட்டம் அலைமோதுவதால் நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. அதோடு சாலைகளும் உருகுலைந்து காணப்படுவதால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியையொட்டி பள்ளி, கல்லூரி மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இந்த விடுமுறையை குளு, குளு காலநிலை நிலவும் ஊட்டியில் அனுபவிப்பதற்காக சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் இருக்கின்றனர். ஊட்டி நகரில் முக்கிய சாலைகளில் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகள் கூட்டமாகவே காணப்படுகிறது. இதனால் கோடை சீசனுக்கு பின்னர் மலைகளின் அரசியான ஊட்டி 2-வது சீசனில் களை கட்டி உள்ளது.
நூற்றாண்டு பழமை வாய்ந்த ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. அங்கு 2-வது சீசனை முன்னிட்டு 10 ஆயிரம் பூந்தொட்டிகள் மலர் மாடத்தில் பார்வைக்காக அடுக்கி வைக்கப்பட்டு உள்ளது. பல்வேறு வண்ணங்களில் மலர்கள் பூத்து குலுங்கியதை, சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து சென்றனர். மேலும் பெரணி இல்லம் அருகே புல்வெளியில் மலர் மற்றும் அலங்கார பூந்தொட்டிகளை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது சுற்றுலா பயணிகளை கவர்ந்து உள்ளது.
தொடர் விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவின் நுழைவு வாயில் பகுதியில் நுழைவுச்சீட்டு பெறுவதற்கு சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்றனர். பெரணி இல்லம், ஜப்பான் பூங்கா, பெரிய புல்வெளி மைதானம், இலை பூங்கா, இத்தாலியன் பூங்காவை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். மேலும் அங்குள்ள செல்பி ஸ்பாட்டில், அவர்கள் தங்களது குடும்பத்தினருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இத்தாலியன் பூங்கா மேல்பகுதியில் உள்ள கண்ணாடி மாளிகை சீரமைக்கப்பட்டு மலர் பூந்தொட்டிகள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு உள்ளன. தொடர் விடுமுறையையொட்டி அந்த மாளிகை சுற்றுலா பயணிகள் பார்வைக்கு திறந்து விடப்பட்டு உள்ளது. அங்கிருந்த மலர்களை செல்போனில் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
ஊட்டி தொட்டபெட்டா மலைசிகரத்தில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து இருந்தது. அங்குள்ள காட்சி முனையில் இருந்து மேட்டுப்பாளையம், குன்னூர், ஊட்டி நகரம், கர்நாடகா மாநில எல்லை, அணைகள் போன்றவற்றை தொலைநோக்கி மூலம் சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்ந்தனர். இதேபோல் ஊட்டி படகு இல்லம், ரோஜா பூங்கா, பைக்காரா படகு இல்லம், பைக்காரா நீர்வீழ்ச்சி, சூட்டிங்மட்டம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.
தொடர் விடுமுறை எதிரொலியாக தமிழகத்தில் உள்ள சமவெளி பகுதிகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து திரளான சுற்றுலா பயணிகள் சொந்த வாகனங்கள் மற்றும் வாடகை வாகனங்களில் ஊட்டிக்கு வருகை தந்து கொண்டே இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் தாங்கள் திட்டமிட்ட படி சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க முடியாமல் அவதி அடைந்து உள்ளனர். ஊட்டி-கோத்தகிரி சாலை, ஊட்டி-குன்னூர் சாலை, ஊட்டி-கூடலூர் சாலையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணி வகுத்து நின்றதை காண முடிந்தது. ஊட்டியில் முக்கிய சந்திப்பான சேரிங்கிராஸ் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக பகல் நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது. இதனை சரிசெய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுகு ஆயுதபூஜை, விஜயதசமி மற்றும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய 4 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டது.
இதனால் மக்கள் குடும்பத்துடன் விடுமுறையை கொண்டாட ஒகேனக்கல்லில் படையெடுத்தனர். இன்று சனிக்கிழமை என்பதால் அளவுக்கு அதிகமாக சுற்றுலா பயணிகள் குவிந்தனர். மக்கள் வீட்டில் இறைச்சிகள் எடுத்து சமையல் செய்து குடும்பத்துடன் ஒகேனக்கல்லுக்கு சென்று குளித்து விட்டு உணவுகளை சாப்பிட்டனர்.
மேலும் ஒகேனக்கல்லில் ஆற்றின் கரையோரங்களில் சுற்றுலா பயணிகள் மீன்கள் வாங்கி கொண்டு விறகு அடுப்பில் சமையல் செய்து குடும்பத்துடன் சாப்பிட்டு ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர். அளவுக்கு அதிகமாக ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் கார், டெம்போ, பஸ், பைக் போன்ற வாகனங்கள் நிறுத்துவதற்கு திக்குமுக்காடினர்.
கர்நாடக, கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து இருந்தனர். இதனால் ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் கூட்டம் குவிந்தனர்.
கர்நாடகா மாநிலம் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்பியது. அதனால் அணைகளின் பாதுகாப்பு கருதி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இந்த நீர் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக தமிழகத்தை வந்தடைந்தது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கரைபுரண்டு வெள்ளம் பெருக்கெடுத்து ஒடியது.
ஒகேனக்கல்லில் நேற்று முன்தினம் நீர்வரத்து 27 ஆயிரம் கனஅடியாக வந்தது. இதனால் மெயின்அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடைவிதிக்கப்பட்டது. ஒகேனக்கல் மெயின் அருவி நடைபாதைக்கு மேல் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
நேற்று காலை வினாடிக்கு 21,700 கனஅடியாக குறைந்து வந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க நேற்று மதியம் தடை நீக்கப்பட்டது. இன்று நீர்வரத்து வினாடிக்கு 22 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து வந்தது.
இதனால் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக மெயின்அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி ஆகிய பகுதிகளில் குளித்து மகிழ்ந்தனர்.
பரிசல் சவாரி சென்று தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தனர். தொங்குபாலத்தில் சென்று ஒகேனக்கல் காவிரி ஆற்றின் அழகை ரசித்து மகிழ்ந்தனர்.