search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கும்பமேளா"

    • சாதுக்கள், துறவிகள், பக்தர்கள் என உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 45 கோடி பேர் கலந்து கொள்வார்கள்
    • 1991 இல் திருமணம் செய்துகொண்ட ஸ்டீவ் - லாரென் தம்பதிக்கு 4 குழந்தைகள் உள்ளனர்

    இந்துக்களின் முக்கிய திருவிழாக்களில் மகா கும்பமேளாவும் ஒன்று. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த விழா கொண்டாடப்படுகிறது.

    உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ், உத்தரகாண்ட் மாநிலம் அரித்வார், மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மற்றும் மகாராஷ்டிர மாநிலம் நாசிக் ஆகிய 4 ஊர்களில் உள்ள ஆற்றங்கரையில் கும்பமேளா கொண்டாடப்படுகிறது.

    அதில் பிரயாக்ராஜில் நடைபெறும் கும்பமேளாவே மிகவும் புகழ்பெற்றது. அங்கு கங்கை, யமுனை மற்றும் கண்களுக்கு புலப்படாத சரஸ்வதி ஆறு ஆகிய 3 நதிகள் சங்கமிக்கும் இடத்தில் நடைபெறுவதால் இது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    3 நதிகளும் சங்கமிக்கும் இடத்தை திரிவேணி சங்கமம் என்று அழைக்கிறார்கள். கும்பமேளா நடைபெறும் காலங்களில் திரிவேணி சங்கமத்தில் நீராடுவதை இந்துக்கள் மிகவும் புனிதமாக கருதுகிறார்கள்.

     

    இத்தகைய சிறப்பு வாய்ந்த மகா கும்பமேளா நிகழ்ச்சிகள் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. உலகின் மிகப்பெரிய விழாவான இந்த மகா கும்பமேளாவில் சாதுக்கள், துறவிகள், பக்தர்கள் என உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 45 கோடி பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் பிரபல செல்போன் ஆப்பிள் நிறுவனத்தின் மறைந்த இணை நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் உடைய மனைவி கும்பமேளாவை ஒட்டி இந்தியா வந்துள்ளார். கடந்த 2011-ம் ஆண்டு ஸ்டீவ் ஜாப்ஸ் கணைய புற்றுநோய் காரணமாக தனது 56 வயதில் உயிரிழந்தார். அவரது மனைவி லாரென் பாவெல்(61), ஆன்மிகத்தில் அதிக நாட்டம் கொண்டவராக இருந்து வருகிறார். 1991 இல் திருமணம் செய்துகொண்ட ஸ்டீவ் - லாரென் தம்பதிக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.

     

    இந்நிலையில், லாரென் பாவெல், உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் கோவிலுக்கு வருகை தந்து லாரென், சாமி தரிசனம் செய்தார். அவருடன் நிரஞ்சனி அகாரா ஆசிரமத்தை சேர்ந்த கைலாஷ் ஆனந்த் ஜி மகராஜ் உடன் வந்திருந்தார். லாரென் பாவெல் மேலும் சில நாட்கள் இந்தியாவில் தங்கியிருந்து மகா கும்பமேளாவில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    • ஏராளமானவர்கள் கும்பமேளாவில் கலந்து கொள்ள செல்வார்கள்.
    • கட்டணத்திற்கு ஏற்ப ரெயில் பயண வகுப்பு, தங்குமிடம், உள்ளூர் போக்குவரத்து வசதி ஆகியவை வழங்கப்படுகிறது.

    நெல்லை:

    உத்தரபிரதேசம் மாநிலம் காசியில் வருகிற 13-ந்தேதி முதல் பிப்ரவரி 26-ந்தேதி வரை 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் கும்பமேளா நடைபெற இருக்கிறது.

    இந்த விழாவில் காசி கங்கை நதியில் புனித நீராட பொதுமக்கள் விரும்புவார்கள். அவ்வாறு நீராடினால் புண்ணியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதனால் ஏராளமானவர்கள் கும்பமேளாவில் கலந்து கொள்ள செல்வார்கள்.

    இந்த பயணிகளின் வசதிக்காக நெல்லையில் இருந்து தென்காசி, ராஜபாளையம், மதுரை, திருச்சி, தஞ்சாவூர் வழியாக காசிக்கு சுற்றுலா ரெயில் இயக்க இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

    அதன்படி சிறப்பு சுற்றுலா ரெயில் நெல்லையில் இருந்து அடுத்த மாதம் 5-ந்தேதி அன்று அதிகாலை 1 மணிக்கு புறப்பட்டு மதுரை வந்து, மதுரையில் இருந்து அதே நாளில் காலை 6 மணிக்கு காசிக்கு புறப்படுகிறது.

    இந்த ரெயில் பிப்ரவரி 7-ந்தேதி மதியம் 12.30 மணிக்கு காசி பனாரஸ் சென்றடைகிறது. அன்று மாலை கங்கா ஆரத்தி பார்த்து மறுநாள் முழுவதும் பிராக்யாராஜ் பகுதியில் சுற்றுலா செல்லுதல், பிப்ரவரி 9-ந்தேதி காசி விஸ்வநாதர், விசாலாட்சி, காலபைரவர், சாரநாத் கோவில்களுக்கு சுற்றுலா செல்லுதல், 10-ந்தேதி அயோத்தியா சரயு நதி மற்றும் ராம ஜென்ம பூமி கோவிலில் வழிபாடு செய்து அன்று இரவு நெல்லைக்கு புறப்படும்படி சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    இந்த சுற்றுலா ரெயில் பிப்ரவரி 13-ந்தேதி அதிகாலை 2.50 மணிக்கு மதுரை வந்து, காலை 7.30 மணிக்கு நெல்லை வந்தடைகிறது. இந்த ரெயில் தென்காசி, ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூர் போன்ற ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    இந்த சுற்றுலாவுக்கு ரெயில் பயண கட்டணம், தங்குமிடம், பயண வழிகாட்டி, பாதுகாப்பு அலுவலர், தென்னிந்திய உணவு வகைகள், உள்ளூர் சுற்றுலா போக்குவரத்து உட்பட குறைந்த கட்டணமாக நபர் ஒருவருக்கு ரூ.26 ஆயிரத்து 850 வசூலிக்கப்படுகிறது. குளிர்சாதன ரெயில் பெட்டி பயணம் மற்றும் உயர் சிறப்பு வசதிகளுக்கு கட்டணமாக நபர் ஒருவருக்கு ரூ.38 ஆயிரத்து 470 மற்றும் ரூ.47 ஆயிரத்து 900 வசூலிக்கப்படுகிறது. கட்டணத்திற்கு ஏற்ப ரெயில் பயண வகுப்பு, தங்குமிடம், உள்ளூர் போக்குவரத்து வசதி ஆகியவை வழங்கப்படுகிறது.

    ×