search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94334"

    • குர்தாஸ்பூர் என்ற இடத்தில் பாகிஸ்தான் டிரோன் நுழைய முயன்றது.
    • பாதுகாப்பு பணியில் இருந்த இந்திய வீரர்கள் அந்த டிரோனை விரட்டியடித்தனர்.

    இந்திய எல்லைக்குள் அவ்வப்போது ஊடுருவும் டிரோன்களை இந்திய படையினர் சுட்டு வீழ்த்தி வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை பஞ்சாப் மாநில எல்லைப்பகுதியான குர்தாஸ்பூர் என்ற இடத்தில் பாகிஸ்தான் டிரோன் நுழைய முயன்றது.

    இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த இந்திய வீரர்கள் அந்த டிரோனை விரட்டியடித்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து குர்தாஸ்பூரில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடபட்டுள்ளது.

    • கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 174 வாக்குகளை பெற்று ஷெரிஃப் பாகிஸ்தான் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.
    • பிலாவல் பூட்டோ சர்தாரி அவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கான தீர்மானத்தை தாக்கல் செய்தார்.

    பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப் அந்நாட்டு பாராளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தனது பெரும்பான்மையை நிரூபித்து வெற்றி பெற்றிருக்கிறார். பாகிஸ்தான் நாட்டின் நீதித்துறை மற்றும் அரசுக்கும் இடையே உள்ள கருத்து மோதல் தீவிரம் அடைந்துள்ள நிலையில், திடீர் திருப்பமாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

    பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப் முழு பெரும்பான்மையுடன் ஆட்சி செய்வதை நிரூபிக்கும் நோக்கில் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவரும் வெளியுறவு துறை மந்திரியுமான பிலாவல் பூட்டோ சர்தாரி அவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கான தீர்மானத்தை தாக்கல் செய்தார். மொத்தம் உள்ள 342 உறுப்பினர்களில், இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 180 பேர் வாக்களித்தனர்.

    கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஷெரிஃப் பாகிஸ்தான் பிரதமராக தேர்வு செய்யப்பட்ட போது 174 வாக்குகளை பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    "மியன் முகமது ஷெபாஸ் ஷெரிஃப் பாராளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபித்துள்ளார்," என்று சபாநாயகர் ராஜா பெர்வைஸ் அஷ்ரஃப் அறிவித்தார்.

    சபாநாயகரின் இந்த அறிவிப்பின் போது அவை உறுப்பினர்கள் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் மேசையை ஆரவாரமாக தட்டினர். நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதை அடுத்து, பிரதமர் ஷெரிஃப் அவையில் உரையாற்றிய போது தனக்கு ஆதராவக வாக்களித்த உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்தார். 

    • கடவுளை அவமதித்ததாக உள்ளூர் மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
    • தொழிலாளர்களும் அப்பகுதி மக்களும் நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் இஸ்லாம் மதத்திற்கு எதிராகவோ, நபிகள் நாயகத்திற்கு எதிராகவோ பேசுவோர் மீது கடும் சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.  அவ்வகையில், மத நிந்தனை செய்ததாக சீன நாட்டவரை பாகிஸ்தான் போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கைபர் பாக்துன்க்வா மாகாணம் அப்பர் கோகிஸ்தான் மாவட்டத்தில் உள்ள தாசு நீர்மின் நிலையத்தில் சீன நாட்டைச் சேர்ந்த டியான் என்பவர் மேலாளராக பணியாற்றி வந்துள்ளார். அவர் கடவுளை அவமதித்ததாக உள்ளூர் மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். வெள்ளிக்கிழமை அன்று தொழிலாளர்கள் வாராந்திர தொழுகைக்கு சென்றபோது அவர் அவதூறான கருத்துக்களைக் கூறியதாக கூறப்படுகிறது. சரியாக வேலை நடக்கவில்லை என்றும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து தொழிலாளர்களும் அப்பகுதி மக்களும் நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலாளர் டியானை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இதையடுத்து டியான் கைது செய்யப்பட்டு, அவர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    பாகிஸ்தானில் மத நிந்தனை குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கப்படும் என குறிப்பிடத்தக்கது.

    • பஞ்சாப் தேர்தலை நடத்த உத்தரவிட வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
    • தேர்தல் நடத்தும்படி தலைமை நீதிபதி தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவு பிறப்பித்தது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி மற்றும் பாதுகாப்பு சிக்கல் காரணமாக பஞ்சாப் மாகாண சட்டசபை தேர்தல் நடத்துவதை அரசு தாமதம் செய்தது. ஏப்ரல் 10ஆம் தேதி தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில், பின்னர் அக்டோபர் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்தது.

    இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. விரைவில் தேர்தலை நடத்த வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இன்சாஃப் கட்சி வலியுறுத்தியது. பஞ்சாப் தேர்தலை தாமதப்படுத்துவதற்கு பதிலாக, பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு பொதுத் தேர்தலை நடத்தவேண்டும் என்றும் வலியுறுத்தியது.

    பஞ்சாப் தேர்தலை நடத்த உத்தரவிட வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம் வெளியிட்ட தேர்தல் ஒத்திவைப்பு அறிவிப்பை ரத்து செய்தது. பஞ்சாப் மாகாணத்திற்கு மே 14 ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தீர்ப்பு அளித்தது. தலைமை நீதிபதி தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது. அதன்படி தேர்தல் ஆணையம் மே 14ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என புதிய அறிவிப்பை வெளியிட்டது.

    உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் கடும் அதிருப்தி அடைந்த அரசு, தீர்ப்பை நிராகரித்தது. மேலும், தீர்ப்பை நிராகரிப்பது தொடர்பாக பாராளுமன்றத்தில் (தேசிய சபை) இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து நீதித்துறைக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளது.

    • பஞ்சாப் மாகாண தேர்தலை அக்டோபர் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைக்க பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் முடிவு செய்து இருந்தது.
    • பஞ்சாப் மாகாண தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட சம்பவம் ஜனநாயக விரோத செயல் என்று உச்சநீதிமன்றம் கருத்து.

    பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்திற்கு மே 14 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. முன்னதாக பஞ்சாப் மாகாணத்திற்கு ஏப்ரல் 10 ஆம் தேதி தேர்தல் நடைபெற இருந்தது குறிப்பிடத்தக்கது.

    எனினும், பஞ்சாப் மாகாண தேர்தலை ஏப்ரல் 11 ஆம் தேதியில் இருந்து அக்டோபர் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைக்க பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் முடிவு செய்து இருந்தது. இந்த முடிவுக்கு அந்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இன்சாஃப் கட்சி சார்பில் தேர்தலை 90 நாட்களுக்குள் நடத்த உத்தரவிட வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கு பாகிஸ்தான் தலைமை நீதிபதி உமர் அடா பாண்டியால் தலைமையிலான மூன்று பேர் கொண்ட அமர்வு விசாரித்து, தேர்தல் தேதி பற்றிய அதிரடி அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி ஏற்கனவே பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தேர்தல் ஒத்திவைப்பு அறிவிப்பை அந்நாட்டு உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

    அத்துடன் பஞ்சாப் மாகாணத்திற்கு மே 14 ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் சார்பில் பஞ்சாப் மாகாணத்திற்கான தேர்தல் அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் பஞ்சாப் மாகாண தேர்தல் மே 14 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    தேர்தல் திட்டங்கள் திருத்தப்பட்டதை அடுத்து, தேர்தல் ஆணையம் இறுதி வேட்பாளர் பட்டியலை ஏப்ரல் 18 ஆம் தேதி வெளியிட இருக்கிறது. வேட்புமனுவை திரும்ப பெற ஏப்ரல் 19 ஆம் தேதி கடைசி நாள் ஆகும். ஏப்ரல் 20 ஆம் தேதி வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கப்பட இருக்கிறது.

    முன்னதாக பஞ்சாப் மாகாண தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட சம்பவம் ஜனநாயக விரோத செயல் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • இம்ரான்கான் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
    • எந்தவொரு வழக்கின் விசாரணையிலும் இம்ரான்கான் நேரில் ஆஜராகததால் அவருக்கு எதிராக பிடிவராண்டு பிறப்பிக்கப்பட்டது.

    இஸ்லாமாபாத் :

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது பண மோசடி, வன்முறையை துண்டுதல் உள்ளிட்ட பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதில் எந்தவொரு வழக்கின் விசாரணையிலும் இம்ரான்கான் நேரில் ஆஜராகததால் அவருக்கு எதிராக பிடிவராண்டு பிறப்பிக்கப்பட்டது.

    எனினும் இந்த வழக்குகளில் அவர் ஜாமீன் பெற்றார். இந்த நிலையில் பெண் நீதிபதிக்கு மிரட்டல் விடுத்த வழக்கில் தற்போது இம்ரான்கானுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய இம்ரான்கான் கூடுதல் மாவட்ட மற்றும் செஷன்ஸ் கோர்ட்டின் நீதிபதி ஜெபா சவுத்ரிக்கு மிரட்டல் விடுத்தது தொடர்பாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டு இஸ்லாமாபாத் கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது.

    இது தொடர்பான விசாரணைக்கு இம்ரான்கான் இதுவரை நேரில் ஆஜராகாத நிலையில் நேற்று அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு பிறப்பித்த நீதிபதி, அவரை ஏப்ரல் 18-ந் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    • இந்தியாவில் பாகிஸ்தான் அரசு டுவிட்டர் கணக்கை தேடும் போது, அக்கவுண்ட் முடக்கப்பட்டதை கூறும் தகவல் தோன்றும்.
    • பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டு இருக்கிறது.

    இந்தியாவில் பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டு இருக்கிறது. டுவிட்டர் கணக்கை முடக்க மத்திய அரசு டுவிட்டர் நிறுவனத்தை வலியுறுத்தியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. சட்டப்பூர்வ கோரிக்கை விடுக்கும் பட்சத்தில் கணக்குகளை முழுமையாக நிறுத்திவைக்க டுவிட்டர் நிறுவன வழிமுறைகள் அனுமதிக்கின்றன.

    அதன்படி பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு @GovtofPakistan இந்திய எல்லை பகுதிக்குள் மட்டும் முடக்கப்பட்டு இருக்கிறது. இந்தியா தவிர அமெரிக்கா, கனடா போன்ற இதர நாடுகளில் இருந்து பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கை மற்றவர்கள் தொடர்ந்து பார்க்கவும், பின்பற்றவும் முடியும்.

     

    எனினும், இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் அரசு டுவிட்டர் கணக்கை தேடும் பட்சத்தில், அக்கவுண்ட் முடக்கப்பட்டதை கூறும் தகவல் திரையில் தோன்றுகிறது. கடந்த ஆறு மாதங்களில் இரண்டாவது முறையாக பாகிஸ்தான் அரசு டுவிட்டர் கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    அரசு டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது குறித்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் தகவல் தொழில்நுட்ப துறை சார்பில் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. 

    • இம்ரான்கான் அரசியலை பகையாக மாற்றி இருக்கிறார்.
    • பாகிஸ்தானின் ஆளும் கட்சிக்கு எதிரியாக இம்ரான்கான் இருக்கிறார்.

    இஸ்லாமாபாத் :

    நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் பிரதமர் இம்ரான்கான், தற்போதைய பிரதமர் ஷபாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராகவும், நாடாளுமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்தவும் வலியுறுத்தி போராட்டங்களை நடத்தி வருகிறார். அப்படி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பஞ்சாப் மாகாணத்தில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்றபோது இம்ரான்கான் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் அவர் காயங்களுடன் உயிர் தப்பினார். அதை தொடர்ந்து, பிரதமர் ஷபாஸ் ஷெரீப்பும், உள்துறை ராணுவ மந்திரி ராணா சனாவுல்லா ஆகிய இருவரும் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. உதவியுடன் தன்னை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டி வருகிறார்.

    இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த ராணா சனாவுல்லா பேசும்போது, "பாகிஸ்தானின் ஆளும் கட்சிக்கு எதிரியாக இம்ரான்கான் இருக்கிறார். முன்னாள் பிரதமர் இம்ரான்கான் பாகிஸ்தானின் அரசியலைக் கொண்டு சென்றிருக்கும் பாதையால் ஒன்று அவர் கொல்லப்படுவார் அல்லது நாங்கள் கொல்லப்படுவோம். இம்ரான்கான் அரசியலை பகையாக மாற்றி இருக்கிறார். அவர் எங்கள் எதிரி. அவ்வாறே அவர் நடத்தப்படுவார்" என்றார்.

    இம்ரான்கான் குறித்த ராணா சனாவுல்லாவின் இந்த பேச்சு பாகிஸ்தான் அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இம்ரான்கானை கைது செய்ய பிடிவாரண்டு பிறப்பித்து கோர்ட்டு உத்தரவிட்டது.
    • கோர்ட்டு அவரது ஜாமீனை நாளை (திங்கட்கிழமை) வரை நீட்டித்து உத்தரவிட்டது.

    இஸ்லாமாபாத் :

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது பண மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகள் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகாததால் இம்ரான்கானை கைது செய்ய பிடிவாரண்டு பிறப்பித்து கோர்ட்டு உத்தரவிட்டது. பிடிவாரண்டை ரத்து செய்ய கோரி இம்ரான்கான் தரப்பில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இதனை விசாரித்த லாகூர் ஐகோர்ட்டு இம்ரான்கானை கைது செய்ய தடை விதித்ததோடு, 5 வழக்குகளில் கடந்த 24-ந் தேதி வரை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இந்தநிலையில் ஜாமீனை நீட்டிக்க கோரி இம்ரான்கான் தரப்பில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த கோர்ட்டு அவரது ஜாமீனை நாளை (திங்கட்கிழமை) வரை நீட்டித்து உத்தரவிட்டது.

    • இம்ரான் கான் வீட்டில் நடந்த சோதனையில் அங்கிருந்த ஆயுதங்கள், பெட்ரோல் குண்டுகள் உள்ளிட்டவைகள் கைப்பற்றப்பட்டு உள்ளன.
    • பயங்கரவாத அமைப்பாக இருக்கும் தெக்ரீக்-இ-இன்சாப் கட்சிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய கைற்பற்றப்பட்ட ஆயுதங்களும், குண்டுகளும் போதுமான ஆதாரமாக உள்ளது.

    கராச்சி:

    பாகிஸ்தானில் இம்ரான் கான் பிரதமராக இருந்த போது உலக தலைவர்கள் கொடுத்த விலை உயர்ந்த பரிசு பொருட்களை அரசு கருவூலத்தில் இருந்து குறைந்த விலைக்கு வாங்கி ரூ.5 கோடிக்கு விற்பனை செய்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இந்த வழக்கில் இம்ரான் கான் கோர்ட்டில் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இதனால் அவரை கைது செய்து நேரில் ஆஜர்படுத்துமாறு போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதையடுத்து நேற்று முன்தினம் இந்த வழக்கு தொடர்பாக இம்ரான் கான் கோர்ட்டில் ஆஜரானார். அந்த சமயம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீசார் அவரது வீட்டுக்குள் புகுந்து அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு திரண்டு இருந்த ஏராளமான தொண்டர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசாருக்கும், இம்ரான் கான் கட்சி தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போலீசார் மீது கற்கள் வீசப்பட்டது. வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது. இதில் சில போலீசார் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தெக்ரீக்-இ-இன்சாப் கட்சித் தலைவர்கள் உள்பட ஏராளமான தொணடர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஏராளமான இம்ரான் கான் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

    போலீசார் இம்ரான் கான் மீது பயங்கரவாத வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அவரது தலைமையிலான கட்சிக்கு தடை விதிக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் உள்துறை மந்திரி ராணா சனாவுல்லா நிருபர்களிடம் கூறியதாவது:-

    இம்ரான் கான் வீட்டில் நடந்த சோதனையில் அங்கிருந்த ஆயுதங்கள், பெட்ரோல் குண்டுகள் உள்ளிட்டவைகள் கைப்பற்றப்பட்டு உள்ளன. பயங்கரவாத அமைப்பாக இருக்கும் தெக்ரீக்-இ-இன்சாப் கட்சிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய கைற்பற்றப்பட்ட ஆயுதங்களும், குண்டுகளும் போதுமான ஆதாரமாக உள்ளது. இதனால் அக்கட்சிக்கு தடை விதிப்பது குறித்து சட்டக் குழுவினருடன் அரசு ஆலோசனை நடத்தும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிலையில் எனது வீட்டுக்குள் சட்ட விரோதமாக நுழைந்து சோதனை நடத்தியதற்காகவும், தொணடர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்காகவும் பஞ்சாப் மாகாண போலீஸ் அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இம்ரான் கான் கோரிக்கை விடுத்து உள்ளார்.

    • பாகிஸ்தான் நாட்டு பாதுகாப்பு மந்திரி கவாஜா ஆசிப்புக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.
    • பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்க பாகிஸ்தான் மந்திரி கவாஜா ஆசிப் இந்தியாவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    இஸ்லாமாபாத்:

    ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் சீனா, இந்தியா, ரஷியா, பாகிஸ்தான், கஜகஸ்தான், கிரிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் உள்ளன. இந்த அமைப்பின் தற்போதைய தலைவராக இந்தியா உள்ளது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உள்ள நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாடு அடுத்த மாதம் (ஏப்ரல்) டெல்லியில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும்படி பாகிஸ்தான் நாட்டு பாதுகாப்பு மந்திரி கவாஜா ஆசிப்புக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.

    இந்த நிலையில் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்க பாகிஸ்தான் மந்திரி கவாஜா ஆசிப் இந்தியாவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தியாவில் நடைபெறும் கூட்டத்தில் ஆசிப் பங்கேற்பது குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் இந்தியாவுடன் நட்புறவை விரும்புவதாகவும், இதனால் மந்திரி ஆசிப் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள அதிக வாய்ப்பு உள்ளது என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

    • பேரணியில் ஏந்தி செல்லக்கூடிய பதாகைகள் மற்றும் பேனர்கள் சர்ச்சைகளை ஏற்படுத்துகின்றன.
    • மகளிர் தின எதிர்ப்பு பேரணிகளுக்கு எந்தவொரு தடையும் விதிக்கப்படவில்லை.

    லாகூர்:

    பாகிஸ்தானில் 2018ஆம் ஆண்டு முதல் பெண்களுக்கான உரிமைகள் தொடர்பாக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், முக்கிய நகரங்களில் பேரணி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் மகளிர் தினத்தையொட்டி பேரணி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பாகிஸ்தானின் லாகூரில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பேரணி நடத்துவதற்கு அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர். பேரணியில் பங்கேற்கும் பெண்கள் ஏந்தி செல்லக்கூடிய பதாகைகள் மற்றும் பேனர்கள் சர்ச்சைகளையும், பாதுகாப்பு சிக்கலையும் ஏற்படுத்துவதாக சுட்டிக்காட்டி பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.

    பொதுவாக, ஒவ்வொரு ஆண்டும் மகளிர் தினத்தன்று பாகிஸ்தானில் இரண்டு வெவ்வேறு குழுக்களால் பேரணிகள் நடத்தப்படும். பெண் உரிமைகளுக்காக பெண் உரிமை ஆர்வலர்கள் பேரணி நடத்துவார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதக்குழுக்கள் ஹயா என்ற பெயரில் எதிர்ப்பு பேரிணியை நடத்தும்.

    இந்த ஆண்டு பெண் உரிமைக்கான பேரணியை லூகூர் அதிகாரிகள் தடை செய்துள்ளனர். இது தங்களின் உரிமைகளை மறுக்கும் செயல் என்று மகளிர் தின பேரணியின் ஒருங்கிணைப்பாளர் கூறி உள்ளார். அதேசமயம், மகளிர் தின எதிர்ப்பு பேரணிகளுக்கு எந்தவொரு தடையும் விதிக்கப்படவில்லை. 

    ×